Skip to main content

Posts

Showing posts from September, 2018

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 89

அழகியசிங்கர்   அழகியல் கி பி அரவிந்தன் நாரினில் பூத்தொடுக்க மாலை வரும். மாலையில் பூவுதிர நாரிழை எஞ்சும் நாரினைக் கடைவிரித்தால் கொள்வாரும் உளரோ தேடிப் பலவண்ணத்தில் பூக்கொய்யலாம் நாரின்றேல்...! என்னிடத்தே நாருண்டு எப்பூவையும் நான் தொடுப்பேன் ஆனால் அது பூக்களை விற்பதற்கல்ல... நன்றி : கனவின் மீதி - கி பி அரவிந்தன் - பக்கம் : 96 - விலை : ரூ.40 - பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091 வெளியான ஆண்டு : ஆகஸ்ட் 1999
106வது இதழ் நவீன விருட்சம் செப்டம்பரில் வந்துவிட்டது.... அழகியசிங்கர் ஒவ்வொரு காலாண்டு போதும் விருட்சம் குறிப்பிட்ட காலத்திற்குள் வந்துவிட வேண்டுமென்ற உறுதியாக இருப்பேன்.  ஆனால் என் முயற்சியில் பெரிய தோல்வியே ஏற்படும்.  கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் விருட்சம் என்ற பத்திரிகையைக் கொண்டு வருகிறேன்.  அதன் பக்கங்கள் 80 ஆகவும், விலை ரூ.20தான் வைத்திருக்கிறேன்.   இந்த 30 ஆண்டுகளில் நான் 120 இதழ்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்.  ஆனால் என்னால் 106 இதழ்கள் மட்டும்தான் கொண்டு வர முடிந்தது. இதுவே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.  இதழ் கொண்டு வருவதோடல்லாமல் இந்தப் பத்திரிகையை அனுப்புவதற்கு நான் பெரும் முயற்சி செய்ய வேண்டும்.  அவ்வளவு லேசில் அனுப்பி விட முடியாது.  இந்தப் பத்திரிகை விற்று எனக்குப் பணம் கிடைக்கப் போவதில்லை.  அதனால் பணத்தைத் தயார் செய்துகொண்டு பத்திரிகையைக் கொண்டு வந்துள்ளேன். அதிகப் படைப்பாளிகளை இதில் ஈடுபட வைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் சில முடிவுகளை எடுத்திருக்கிறேன்.   கவிதைகள் எழுதுபவர்கள் ஒரு கவிதை ம...

துளி : 4 - ராகவன் காலனி மூன்றாவது தெருவில் இருக்கும் கிளை நூலகம்.

.. அழகியசிங்கர் 2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது நூலகங்களைக் காப்பாற்ற முடியவில்லை. ராகவன் காலனி மூன்றாவது தெருவில் இருக்கும் நூலகம் அப்படிப்பட்ட ஒன்று. நூலகரின் புத்திசாலித்தனத்தால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டு விட்டன. இப்போது திரும்பவும் பல புத்தகங்களைத் தருவித்து நூலகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நூலகர். இந்த நூலகத்தில்தான் நாங்கள் இலக்கியக் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமை. வரும் வியாழக்கிழமை கூடும் கூட்டம் நாலாவது கூட்டம். நூலகரின் வேண்டுகோளுக்கு இணங்க நூலகத்தின் வெளிப்புறத்தில் சுண்ணாம்பு அடித்தோம். எல்லாம் நான் மட்டும் காரணம் அல்ல. பத்து நண்பர்கள் ஒத்துழைப்புடன் நடந்த நிகழ்ச்சி. ரூ.10000 வரை செலவு. இன்னும் நூலகத்தின் வாசலில் தமிழில் வாசகங்கள் எழுத வேண்டும். நூல்கள் விரும்பிப் படிக்கத் தூண்டும்விதமாக வாசகங்கள் தேவை. எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 4வது கூட்டம்

தலைப்பு : வைதீஸ்வரன் கதைகள் சிறப்புரை : டாக்டர ஜெ பாஸ்கரன் இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு, ஜாபர்கான் பேட்டை, சென்னை (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) தேதி 27.09.2018 (வியாழக்கிழமை) நேரம் மாலை 5.45 க்கு பேசுவோர் குறிப்பு : மருத்துவர், சிறுகதை, கட்டுரை ஆசிரியர். நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205

துளி : 3 - செல் போனை கொள்ளை அடித்துக்கொண்டு போனால் என்ன செய்வது?

அழகியசிங்கர் இன்று மாலை நானும் என் மனைவியும் சில கோவில்களுக்குச் சென்றோம்.  இறுதியாக நாங்கள் சென்று வந்த கோயில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில்.  கொஞ்சங்கூட கவனம் இல்ûலாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தேன்.  அடையார் கேட் ஓட்டலைத் தாண்டி வந்துகொண்டிருந்தேன்.  பின்னால் மனைவி கையில் பேக்கை வைத்துக்கொண்டு இருந்தார்.  அதை ஒரு பையில் போட்டு டூ வீலர் பாக்ஸில் வைத்திருக்கலாம்.  ஒன்றும் தோன்றவில்லை. எனக்கும்.  யாரோ இரண்டு இளைஞர்கள் டூ வீலரில் வேகமாக வந்து என் மனைவி கையிலிருந்து பேக்கைப் பிடுங்கிக்கொண்டு வேகமாக ஓடி விட்டார்கள்.  நான் கத்திக்கொண்டு அவரைகளைத் துரத்திக்கொண்டு போனேன்.  என்னால் முடியவல்லை. மேலும் என் மனைவி பின்னால் இருந்ததால் பேலன்ஸ் தவறி விடுமோ என்று தோன்றியது.  ஒரு செல்போன், ஒரு சாவி, ரூ.2000 பணம போய்விட்டது.  என் பர்ஸ்ûஸ யாராவது கொள்ளை அடித்தால் ஏடிஎம் கார்டு ரூ.500க்குள்ளே பணம்தான் போயிருக்கும்.  பின் சில விஸிட்டிங் கார்டு போயிருக்கும்.  இப்போது என்ன செய்வது என்று இதுமாதிரி செல் போனை ...

துளி : 2

அழகியசிங்கர் ஒரு புத்தகம் உங்களுக்குத் தர விரும்புகிறேன்.  வாங்கிக்கொள்ள வருங்கள் என்றார் கவிஞர் வைதீஸ்வரன்.  அவர் வீட்டிற்குச் சென்றேன்.  ஒரு புத்தகம் மட்டுமல்ல இரண்டு மூன்று புத்தகங்கள் கொடுத்தார்.  அதில் ஒரு புத்தகம் மிக முக்கியமானபுத்தகம்.  அப் புத்தகத்தின் பெயர் Mounts Valley and Myself.    வைதீஸ்வரன் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு.  மொழி பெயர்த்தவர் லதா ராமகிருஷ்ணன். 94 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.350. அதுதான் உறுத்தலாக இருக்கிறது. வைதீஸ்வரன் பிறந்தநாளின்போது இப் புத்தகம் வந்திருக்கிறது. 

இன்று அசோகமித்திரன், வைதீஸ்வரன் பிறந்த நாள்

அழகியசிங்கர் 2012 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அசோகமித்திரன் பிறந்ததினத்தன்று நான் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் ஒரு கூட்டம் நடத்தினேன்.  அக் கூட்டம் சிறப்பான ஒன்று எல்லோரும் மனந்திறந்து பேசினார்கள்.  என்னுடைய யூ ட்யூப்பில் சென்று யாரும் போய்ப் பார்க்கலாம்.  முழுவதும் வெளியிட்டுள்ளேன்.  அசோகமித்திரன் பிறந்த தினத்தன்றுதான் கவிஞர் வைதீஸ்வரனின் பிறந்த தினமும்.  அசோகமித்திரனைவிட நாலைந்து வயது சிறியவர் வைதீஸ்வரன்.  சமீபத்தில் ராயப்பேட்டை புத்தகக் கண்காட்சியில் வைதீஸ்வரன் வந்திருந்தார்.  அவருடைய கவிதைகளை வாசிக்கச் சொல்லி அதை ஒளிப்பதிவு செய்துள்ளேன்.  பிறந்ததினத்தன்று அதை இங்கு அளிக்கிறேன்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 19 - ஏ எஸ் நடராஜன் பேட்டி - இரண்டாம் பகுதி

அழகியசிங்கர் நேற்று முதல் பகுதி வெளியிட்டிருந்தேன். இப்போது இரண்டாம் பகுதி வெளியிடுகிறேன். நான் தற்செயலாக எதிரி உங்கள் நண்பன் புத்தகத்தைக் கொடுக்கத்தான் கே கே நகரில் உள்ள நடராஜன் வீட்டிற்குச் சென்றேன். என்னமோ தோன்றியது ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று. நடராஜனும் அதற்கு சம்மதிக்கவே பேட்டி எடுத்து விட்டேன். ரொம்ப மோசமான ஒரு விபத்திலிருந்து தப்பித்து பின் எப்படி அதை எதிர்கொள்வது என்பதை நடராஜனிடமிருந்து பலரும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விபத்து நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜன் தனியாக தானே வாழ பழகிக்கொண்டவர். கால்களைப் பயன்படுத்தாமல் கைகளைக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடியவர். அவர் துணிச்சல் யாருக்கும் வராது. நீங்கள் இந்தப் பேட்டியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 19 - ஏ எஸ் நடராஜன் பேட்டி

அழகியசிங்கர் 1978ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நண்பர் அவர்.  பெயர் ஏ எஸ் நடராஜன்.  சுறுசுறுப்பானவர்.  வாழ்க்கையை அவர் பார்க்கும் விதம் வித்தியாசமாக இருக்கும்.  மிகச் சாதாரண நிலையிலிருந்து தன் அறிவாற்றலால் முன்னுக்கு வந்தவர்.  அவரும் நானும் பரீக்ஷா ஞாநி இயற்றிய  மூர் மார்க்கெட் என்ற நாடகத்தில் ஒன்றாக நடித்தோம். அவருக்குத் துணிச்சலான கதாப்பாத்திரம்.  எனக்கோ பயந்தாகொள்ளி கதாப்பாத்திரம்.  15ஆம் தேதி ஏப்ரல் மாதம் 1995ஆம் ஆண்டு காரில் சென்று கொண்டிருந்தபோது  விபரீதமான விபத்தில் சிக்கிக்கொண்டு, அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து விட்டது.   அந்தக் கோரமான விபத்திலிருந்து உயிர்பெற்று மீண்ட நடராஜன் த்ன வாழ்க்கையைப் பற்றிய தன் அனுபவங்களை என்னுடன் இன்று பகிர்ந்து உள்ளார்.   அவருடைய வாழ்க்கை அனுபவம் ஒவ்வொருவருக்கும் வாழ வேண்டுமென்ற தூண்டுதலை ஏற்படுத்தும். 

துளி : 1

அழகியசிங்கர் என் லைப்ரரியில் சில நேரம் புத்தகம் படித்துவிட்டு ஆர்யாகவுடர் ரோடில் உள்ள மாம்பலம்ஸ் வெங்கடேஸ்வரா போளி நிலையத்திற்கு வருவேன்.  ஒரு நாள் போன்டா, ஒருநாள் மசால் வடை, ஒருநாள் உருளைக் கிழங்கு போன்டா, ஒரு நாள் மெதுவடை என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவேன்.  அங்கு என் மனைவி தயாராக வைத்திருக்கும் கேழ்வரகுக் கஞ்சியுடன் சேர்த்து உண்பேன்.  போளி ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுவது நல்லதா கெட்டதா தெரியாது.  என் நண்பர் டாக்டர் பாஸ்கரன்தான் சொல்ல வேண்டும். அந்தப் போளி நிலையத்தின் வாசலில் ஒரு மரம்.  அதை கோயிலாக யாரோ மாற்றி உள்ளார்கள்.  விளக்கு வைக்கிறமாதிரி ஒரு மரப்பொந்தை உருவாக்கி உள்ளார்கள்.  மரத்தைச் சுற்றி புடவைக் கட்டி மஞ்சள் குங்குமம் பூசி உருவாக்கி உள்ளார்கள்.  போளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு இந்த மரத்தின் மகத்துவம் தெரியவில்லை.  அப்படியா என்று கேட்கிறார்கள்.

விருட்சம் சந்திப்புக் கூட்டம்...

அழகியசிங்கர் நாளைக்கு மாலை 6 மணிக்கு நடைபெறப்போகும் கூட்டம் 42வது கூட்டம்.  இக் கூட்டத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன். 

பிள்ளையார் படம் போட்ட விருட்சம்

அழகியசிங்கர் நவீன விருட்சம் 54வது இதழில் (அதாவது பிப்பரவரி 2002ல்) பிள்ளையார் படத்தை நவீன ஓவியமாக சிவபாலன் என்பவர் வரைந்து கொடுத்திருந்தார். இந்தப் படம் ஓவியர் விஸ்வம் மூலம் எனக்குக் கிடைத்தது.  நவீன விருட்சத்தின் அட்டைப் படமாக அதை பயன்படுத்தினேன்.   60 பக்கங்கள்.  அந்த இதழ் விருட்சம் விலை ரூ.10.  அதில் முக்கியமான கவிதையாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதையை நான் கருதுகிறேன்.  அந்த அட்டை ஓவியத்துடன் அவர் கவிதையையும் இங்கு அளிக்கிறேன்.    ரா ஸ்ரீனிவாஸன் தற்பொழுது 1) வேறெப்பொழுதுமில் லாத  தற்பொழுதின் வாசல்  திக்கெல்லாம் திறந்தே இருக்கிறது -  உட்புகுக, இப்பொழுது திறந்தது  உள்ளேயிருந்தா வெளியேயிருந்தா  -  காண்க, எல்லாம் உருமாறிக் கொண்டிருக்கும் தற்பொழுது -  அறிக. தற்பொழுதை விட்டு விலகிச் செல்கின்றன எல்லாப் பயணங்களும் -  பிரிகின்ற பாதைகளெல்லாம் தற்பொழுதிலிருந்து  அப்பால் இட்டுச் செல்கின்றன -  உணர்க. எப்பொழுதுமான தற்பொழுதிற்குத்  ...

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 42

        தலைப்பு  :   சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும்         சிறப்புரை :    சத்யானந்தன் இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 15.09.2018 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு : நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாக எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி. அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் 9444113205

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 8

அழகியசிங்கர் 1. 106வது இதழ் விருட்சம் என்ன ஆயிற்று?  இந்த மாதத்திற்குள் வந்து விடும். 2. நீங்கள் விருட்சம் ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆமாம்.  இதழ் வந்தவுடன் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ண நினைக்கிறேன்.  ரைட்டர்ஸ் கேப்பில் எனக்குப்பிடித்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேச. 3. சிறுபத்திரிகை என்பதே தேவையில்லை என்ற கருத்திற்கு என்ன சொல்கிறீர்கள்? தமிழ் இந்துவில் அப்படி ஒரு கருத்து ஏற்படுகிற மாதிரி ஒரு தலையங்கம் வந்தது.  திரும்பவும் படிக்கலாமென்றால் அந்தப் பத்திரிகை கண்ணில் படவில்லை.  அந்தக் கருத்து சரியில்லை.  எக்ஸ்பிரஷன்தான் சிறுபத்திரிகை.  அதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள்.  வாசகர் கையில்தான் ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதெல்லாம் இருக்கிறது.  சிற்றேடு மாதிரி ஒரு இதழை தமிழவன் மட்டும்தான் கொண்டு வர முடியும்.  அதைத்தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.  4. ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதைப் ...

நேற்றைய தினமலருக்கு நன்றி...

அழகியசிங்கர்        விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள 'இடம், பொருள், மனிதரகள்,' என்ற மாதவ பூவராக முர்த்தியின் புத்தகத்தைப் பற்றி மாணிக்கப் பரல்கள் என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ளது.  வெளியிட்ட தினமலருக்கு என் நன்றி.  அந்தப் பகுதியில் எழுதப்பட்டதை இங்கே தருகிறேன். பன்முக தன்மை கொண்ட நூலாசிரியர் , சென்னை மாநகரில் இன்று அழிந்துபோன ஜெமினி அருகே இழந்த சொர்க்கம், சர்க் கஸ் என்னும் மாய உலகம், ஆடிப் பெருக்கு, வீடு மாற்றம் உள்ளிட்ட இடங்களையும்; ஊதா கலரு ரிப்பன், காணாமல் போன சைக்கிள், 'பாக்கு வெட்டியும் பாதாள கரண்டியும், து£ளி உள்ளிட்ட பொருட்களையும் விந்தை மனிதர்கள், கொங்கு மாமியின் கடைசி ஆசை,   பாத்திரமறிந்து பிச்சையெடு உள்ளிட்ட மனிதர்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.  இடம் பொருள் மனிதர்கள் ஆசிரியர், மாதவ பூவராக மூர்த்தி வெளியீடு விருட்சம் தொலைபேசி: 044 - 2471, 0610 பக்கம்: 156 விலை ரூ.120 

வித்தியாசமான காலண்டர்

அழகியசிங்கர் என் நெடுநாளைய நண்பர் டாக்டர் பாஸ்கரன் அவர்கள்.  சமீபத்தில் அவர் எழுதிய அது ஒரு கனாக் காலம் என்ற புத்தகத்திற்கு ஒரு ஸ்டார் ஓட்டலில் விருந்து அளித்து புத்தக வெளியீட்டு விழா நடத்தினார்.  100 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.  என்னை மேடையில் உட்கார வைத்து அவர் புத்தகத்தைப் பற்றி பேச சந்தர்ப்பம் கொடுத்தார்.  நானும் அப் புத்தகத்தைப் படித்து கட்டுரை வாசித்தேன். இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பும், இரண்டு கட்டுரைத் தொகுப்பும், மருத்துவம் சார்ந்த புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறார்.  ஒவ்வொரு புத்தகம் வரும்போது அதை வெளியிடும்போது உற்சாகமாகக் கொண்டாடுவார். விருந்தினர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை.   இன்றைய காலக்கட்டம் மெச்சும்படி இல்லை.  இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் விழா கொண்டாடி கொண்டாடும் டாக்டர் பாஸ்கரனை யாரும் வாழ்த்தாமல் இருக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை அன்று (07.09.2018) டாக்டரைப் பார்த்தேன்  கையில் ஒரு காலண்டர் கொடுத்தார்.  அந்த காலண்டர் செப்டம்பர் 2018லிருந்து அடுத்தவருடம் ஆகஸ்ட் 2019 ...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 87

அழகியசிங்கர்   ப கங்கைகொண்டான் பழைய சுசீலாக்கள் பத்தாவது பாரம் படித்தோம் பாவை சுசீலாவும் நானும் ஆசிரியர் வெளியே போனால் மானிட்டர் என்னை நோக்கி ஒன்றுக்குப் போக வேண்டி ஒரு விரல் காட்டி நிற்பாள் ஆள் பார்க்க இல்லாவிட்டால் அக்கம் பக்கம் நோக்கி விட்டு ஒண்ணரைக் கண்ணில் சிரிப்பாள் அரைக்கால் டிராயர் துறந்து முழுக்கால் மாட்ட வைத் தாள் ஒரு நாள் ஒரே மாதிரி சொல்லி வைத்தாற் போலச் சாக்கு நிறக் காக்கிப் பையில் புத்தகங்கள் தூக்கி வந்தோம் பையன் கள் மாற்றி வைத்தார் பைமாற்றிப் போனாள் அந்நாள் கைமாறிப் போனாள் மறு நாள் ........ நன்றி : கூட்டுப் புழுக்கள் - கவிதைகள் - ப கங்கைகொண்டான் - வெளியீடு : கங்கை நூலகம், 100 மலரகம் - பொத்தனூர் அஞ்சல் - சேலம் 638 181 - ஆண்டு : 1974 - விலை : ரூ.10

தினமணி இதழுக்கு நன்றி..

அழகியசிங்கர் தினமணியில் நூல் அரங்கம் என்ற பகுதியில் என்னுடைய திறந்த புத்தகம் என்ற நூலின் விமர்சனம் வந்துள்ளது.  கீழே அதில் வெளி ஆனதைக் கொடுத்திருக்கிறேன்.    தினமணி இதழுக்கு என் நன்றி. அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கி றது இந்தப் புத்தகம். கவிஞர், கதாசிரியர், பல் லாண்டுகள் ஒருசிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகி றார். மொத்தம் ஐம்பது பதி வுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். 'அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் பற்றிய பதிவு 'ஆத்மாநாம் சில குறிப்புகள்’. அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆத்மாநாம் நினைவாக நடந்த உணர்ச்சிபூர்வமான இரங்கல் கூட்ட விவரணையுடன் அந்தப் பதிவை நிறைவு செய்கிறார். பேராசிரியரும் நாவலாசிரியரும் கவிஞருமான நகுலனைப்பற்றிய பதிவில் அவருடைய ஐந்து கவிதைகள் இடம்பெறுகின்றன. தமிழில் கவிதைப...

செப்டம்பர் மூன்றாம் தேதி

அழகியசிங்கர் 38 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோமா என்றெல்லாம் தெரியவில்லை காலையில் ஹனுமார் கோயிலுக்குச் சென்றோம் இன்று கடைக்குச் சென்று எனக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கிக்கொண்டேன் அவளும் கூடவே வந்தாள் புத்தகக் கடையில் புத்தகங்களை வாங்கி வெறுமனே சேர்ப்பதை அவள் விரும்பவில்லை ஆனால் தடுப்பதில்லை அவள் விருப்பம் என்னவென்று தெரிவதில்லை இன்று செப்டம்பர் மூன்றாம் தேதி (Photo taken by Srinivasan Natarajan)

மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன் - பகுதி 1

அழகியசிங்கர் சமீபத்தில் ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் ஒரு புத்தகக் காட்சி நடந்தது.  அந்த நிகழ்ச்சியைப் பற்றி எதாவது சொல்வதா அல்லது என்னைப் பற்றி எதாவது சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றித்தான் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  நான் மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன்.  என் அவதார நிகழ்ச்சியைச் சொன்னாலே போதுமென்று எனக்குத் தோன்றியது. ஆரம்பிக்கிறேன். 1. புத்தகப் பதிப்பாளர் கம்  விற்பனையாளரான  அழகியசிங்கரின் கூற்று. நான் 30 ஆண்டுகளாக விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறேன். கூடவே புத்தகங்களை அச்சடிக்கிறேன்.   கிட்டத்தட்ட 80 புத்தகங்களை அச்சடித்து விட்டேன்.  பெரும்பாலும் கவிதைப் புத்தகங்கள்.   கவிதைகளை அடித்து  விற்பது என்பது சாத்தியமில்லை என்று என் அறிவுக்குத் தெரிந்தாலும் கவிதைகளை மட்டும் புத்தகம் அடிக்க என்னிடம் கொடுப்பார்கள் பலர்.   புத்தகக் காட்சியில் என் புத்தகங்களை மட்டும் விற்க முடியாது என்று  எனக்குத் தெரிந்து விட்டது.  மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களோடு என் புத்த...

இந்து தமிழிற்கு என் நன்றி

அழகியசிங்கர் கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழில் என் முழு சிறுகதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்து தமிழிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.