அழகியசிங்கர் ஒரு குறளை எடுத்து வாசிக்கும்போது அதற்கிணையாக நவீன கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒன்றரை அடியில் திருவள்ளுவர் சில உண்மைகளைக் கூறுகிறார். சில குறள்கள் மூலம் போதிக்கவும் செய்கிறார். வான் சிறப்பு என்ற இரண்டாவது அதிகாரத்தின் மூலம், வானின் சிறப்பாக மழையைப் பற்றியும் அந்த மழை மாத்திரம் இல்லாவிட்டால் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பத்து குறள்கள் மூலம் சொல்லிக்கொண்டு போகிறார். ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளம்குன்றிக் கால். இது மிக எளிமையான குறள் இது. புயல்என்னும் என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று யோசித்தேன். வானத்திலிருந்து பெய்யும் மழை புயல்போல் வரவேண்டும் என்கிறார். அப்படி வராவிட்டால் உழவர்கள் ஏர் ஓட்டி நிலத்தை உழமாட்டார்கள் என்கிறார். இதில் அதிகாரத்தில் கூறப்பட்ட கவிதைகள் எல்லாம் மழையின் பெருமையைக் கூறும் குறள்கள். மழையின் பெருமையைப் பற்றி திருவள்ளுவர் தவிர வேற யாராவது கூறியிருப்பார்களா என்பது சந்தேகம். மேலே குறிப்பிட்ட குறளி...