Skip to main content

Posts

Showing posts from June, 2017

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்...

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்... அழகியசிங்கர் 24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது.  இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம்.  இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பிர் உரையாற்றினார்.  வெகு அருகில் அமர்ந்திருந்த நான், சோனி டிஜிட்டல் காமெராவில் படம் பிடித்தேன்.  அதன் ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன்.  இரண்டாவது பகுதி நான் பங்களூர் சென்று 1ஆம் தேதி திரும்பி வரும்போது ஒளி பரப்புகிறேன்.
கதையை வாசகனிடம் முடித்து விடுகிறார் அழகியசிங்கர் முதன் முதலாக அசோகமித்திரன் கதையான ரிக்ஷாவைத்தான் படித்தேன்.  இக் கதை 1965 ல் அசோகமித்திரன் எழுதிய கதை.  அப்போது எனக்கு வயது 12.  நான் கிட்டத்தட்ட இன்னும் 10 வருடங்கள் கழித்து தி நகரில் உள்ள நூல்நிலையத்திலிருந்து அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையைப் படித்தேன்.    இந்தக் கதை 3 பக்கங்களில் முடிந்து விடும்.   இக் கதை முழுவதும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருக்கிறது.    நான் அதுவரை படித்தக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல் இருந்தது அவர் கதை.  இப்படிச் சொல்வதால் நான் மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் புறக்கணிக்கவில்லை.  ரிக்ஷா என்ற கதையில் பையன் ரவி ரிஷ்கா என்கிறான்.  அவனுக்கு ரிக்ஷா என்று சொல்ல வரவில்லை.  அவனை ரிக்ஷா சொல்லும்படி வற்புறுத்துகிறார். பல முயற்சிக்குப் பிறகு அவன் ரிக்ஷா என்று சொல்ல வராமல் தடுமாறுகிறான்.  அப்பா அவனை திருத்த முயற்சித்துத் தோல்வியைத் தழுவுகிறார். இந்தக் கதையில் இப்படி ஒரு வரி வருகிறது. உலகம் க்ஷ...

நூறு கிராமுக்கு மேலே போகக்கூடாது...

நூறு கிராமுக்கு மேலே போகக்கூடாது... அழகியசிங்கர் நான் நவீன விருட்சம் 102வது இதழை இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  கிட்டத்தட்ட 90 சதவிதம் அனுப்பி இருப்பேன். இந்த இதழ் 114 பக்கங்கள் கொண்ட அசோகமித்திரன் இதழ்.  இதழ் 120 கிராம் எடை கொண்டிருந்தது.  ஒரு இதழ் அனுப்ப ரூ.4 தபால் தலைகள் ஒட்டி அனுப்பியிருந்தேன்.  கிட்டத்தட்ட 70 பிரதிகள் ஒரு நாளும் பின் இன்னொரு நாளில் 50 பிரதிகள் அனுப்பி இருந்தேன்.  தபால் சார்டிங் அலுவலகத்திலிருந்து போன் வந்தது.  üநீங்கள் ரு.5 தபால் தலை ஒட்ட வேண்டும்,ý என்று சொன்னார்கள்.  எனக்குத் திகைப்பாக இருந்தது.  100 கிராமிற்கு இரண்டு ரூபாய் விதம் 120 கிராமிற்கு 4 ரூபாய் போதும் என்று எண்ணியிருந்தேன்.  நான் அவர்களிடம் அப்படித்தான் சொன்னேன்.  அவர்கள் ஒப்புக்கொள்ளவில்ûடில.  100 கிராமிற்கு இரண்டு ரூபாய் ஆனால் அதற்கு மேல் மூன்று ரூபாய் அதிகமாக ஒட்ட வேண்டும்.  ஐந்து ரூபாய் ஆகும் என்றார்கள்.   வேற வழி இல்லாமல் ஒரு ருபாய் கூடுதலாக  ரூ.120 பணம் கட்டினேன்.  அப்போதுதான் ஒன்று ந...

நாளை நடைபெறப் போகிற கூட்டம்

அழகியசிங்கர் சாகித்திய அகாதெமி நாளை சிறுகதை மேதை அசோகமித்திரனுக்குப் புகழஞ்சலி என்ற கூட்டம் ஒன்றை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடத்துகிறது. இக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் சா கந்தசாமி. பங்கேற்போர் இராம. குருநாதன், அழகியசிங்கர், அம்ஷன்குமார். அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனின் ஆவணப்படத்தைத் திரையிட உள்ளார்கள். இக்கூட்டம் சாகிகத்திய அகாதெமி சென்னை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 2ஆம் தளம், 443 குணாவளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. அனைவரும் வருக.

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் அழகியசிங்கர் நண்பர்களே, வணக்கம். சமீபத்தில் நான் தில்லி சென்றிருந்தேன்.  நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் என்னை பி ஏ கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்ல்.  வழக்கம்போல் அவரைப் பேட்டி எடுத்தேன்.  பத்து கேள்விகள் பத்து பதில்கள் தலைப்பில் அவருடைய இந்தப் பேட்டி வெளி ஆகிறது.  மிகக் குறைவான பேர்களே இதைப் பார்த்து ரசித்தாலும் இந்த முயற்சியை நான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்.  இப்பேட்டி நடுவில் வெங்கட்ராமனும் கிருஷ்ணனிடம் சில கேள்விகள் கேட்டிருப்பார்.   பி ஏ கிருஷ்ணன் இது வரை 5 புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் கொண்டு வந்துள்ளார்.  அவருடைய புகழ்பெற்ற நாவல் புலி நகக் கொன்றை. முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் வெளிவந்த நாவல். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதக் கூடியவர்.  அவருடைய புத்தகப் பட்டியலை இங்கு அளிக்கிறேன் : 1. புலி நகக் கொன்றை 2. கலங்கிய நதி 3. திரும்பிச் சென்ற தருணம் 4. மேற்கத்திய ஓவியங்கள் 5. அக்கிரகாரத்தில் பெரியார்.  இது என்னுடைய பத்தாவது பேட்டி.

திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரா?

திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரா? அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம் ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது போல் தோன்றுகிறது.  திருப்பூர் கிருஷ்ணனுக்கு நன்றி.   நாம் பழகிய எழுத்தாளரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி சொல்வதோடல்லாம் அவர் படைப்புகளையும் நல்ல முறையில் அறிமுகம் செய்வவது முக்கியம்.  அதைச் சரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்திக் காட்டியவர் திருப்பூர் கிருஷ்ணன்.  எதிர்பார்க்காமலேயே நல்ல கூட்டம் அன்று.  சனி ஞாயிறுகளில் சென்னை மாநகரத்தில் பல இலக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வந்திருந்து சிறப்பு செய்தவர்களுக்கு நன்றி.   அவர் பேசியதை ஆடியோவில் பதிவு செய்துள்ளேன்.  இதை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  எல்லோரும் கேட்டு மகிழும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தந்தையர் தினம்

அழகியசிங்கர்                                                                                                           சமீபத்தில் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி என் தந்தை இறந்து விட்டார்.  ஆனால் முன்னதாகவே அவருக் கு த் தெரியாமல் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.  ஆனாலும் இந்தக் கவிதையை அவர் படித்து ரசித்திருப்பாரா என்பது தெரியவில்லை.  இன்று தந்தையர் தினம் என்பதால் அந்தக் கவிதையை நீங்கள் வாசிக்க இங்கே அளிக்கிறேன்.                             அப்பா அப்பா சொன்னார் : குட்மார்னிங் சரிதான் காலையில் காஃபியைச் சுடச்சுட குடிப்பார் சரிதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி மாதிரி பேசுவார் சரிதான் தெருவில் போவோர் வருவோரைப் ...

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம்

அழகியசிங்கர் நாளை நடைபெற உள்ள விருட்சம் இலக்கியச் சந்திப்பின் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் முன், நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒவ்வொருவராக பேச அழைக்கலாமென்று நினைத்தேன்.  திரூப்பூர் கிருஷ்ணன் அவர்களைப் பேச அழைக்குமுன் அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் அவர் நானும் என் எழுத்தும் வேண்டாம்.  நானும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசலாம் என்று குறிப்பிட்டார்.  திரும்பவும் யோசிக்கும்போது நானும் ஜானகிராமனும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்றார்.  நான் சொன்னேன்.  நானும் தி ஜானகிராமனும் என்று போடலாமென்று சொன்னேன்.  பின் திருப்பூர் கிருஷ்ணன் அதையும் மாற்றி தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்ற குறிப்பிட்டடுள்ளார்.   அதே சமயத்தில் எனக்குள் இன்னொரு எண்ணம் தோன்றியயது.  இதே மாதிரி தலைப்பை வைத்துக்கொண்டு அதாவது ஜெயகாந்தனும் நானும், கு அழகிரிசாமியும் நானும், அசோகமித்திரனும் நானும், ஞானக்கூத்தனும் நானும் என்று பொதுவான தலைப்பில் என் எழுத்தாள நண்பர்களைக் கூப்பிட்டுப் பேசச் சொல்வதோடல்லாம் இதைப் பதிவு செய்து அப்படியே புத்தக...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 71

அழகியசிங்கர்     உங்கள் வீட்டு முயல்குட்டி பெருந்தேவி                                                                                                                                                                                        நீங்கள் முயல்குட்டி வாங்கியதாகச் சொன்னீர்கள் சற்று பொறாமையாக இருந்தது அது கிளிபோல் பேசுகிறது என்றீர்கள் சற்று சந்தேகமாக இருந்தது அதன் பாசிக்கண்ணில் பிரபஞ்சத்தைக் கண்டதாகக் கூறினீர்கள் சற்று ஆச்சரியமாக இருந்தது அதன் பெயர் மிருது என அறிவித்தீர்கள் தொடவேண்டும் போலிருந்தது தொ...

விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள்

திரும்பவும் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் தொடர உள்ளன.  முதல் கூட்டம் 17ஆம் தேதி சனிக்கிழமை திருப்பூர் கிருஷ்ணன் தலமையில் தொடங்க உள்ளது.  அவசியம் கலந்து கொள்ளவும்.  கூட்டம் பற்றிய அழைப்பிதழ் இதோ:

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 70

அழகியசிங்கர்   மிதிவண்டித் திருடன் ராணிதிலக்                                                                                                                   மாட்டி இருக்கவேண்டிய இடத்தில் சாவி இல்லை.  தேடத் தொடங்கினேன்.  எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத ஒருவன் அந்தத் தெருவில் பிறந்து, இந்தத் தெருவில் நுழைகிறான்.  நான் சாவியைத் தேடுகிறேன்.  பூட்டப்படாத வண்டியைத் தொடுகிறான். நான் சாவியைத் தேடுகிறேன்.  திறந்த தெருவில் ஒருவன் வண்டியை ஓட்டிச் செல்கிறான்.  சாவி எனக்குக் கிடைத்து விட்டது.  பூட்டின கதவைத் திறந்து, வெளியே பார்த்தேன்.  தன்னைப் பூட்டிக்கொண்டு வண்டி நிற்கிறது.  நெருக்கமான சாலையில், யாருடைய வண்டிகளையோ, யார் யாரோ ஓட்டியபடி...

டெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...

டெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே... அழகியசிங்கர் எப்போதும் போல இல்லை இந்தச் சனிக்கிழமை.  தேனாம்பேட்டையிலிருந்து மதியம் ஒரு மணிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.  ஒரே கூட்டம்.  வண்டியை ஓட்டிக்கொண்டே வர முடியவில்லை.  ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.  பின் தூங்க ஆரம்பித்து 4 மணி சுமாருக்கு எழுந்து, காப்பியைக் குடித்து விட்டு, தி நகரில் உள்ள ந்யூ புக் லேண்ட்ஸ் சென்றேன்.  அங்கே என் புத்தகங்களைக் கொடுக்க எடுத்துச் சென்றேன்.   அங்கிருந்து திரும்பி வரும்போது ஒரே கூட்டம்.  எப்போதும் நான் விருட்சம் இலக்கியக் கூட்டம் நடத்தும்போது மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்குப் போவதற்குள் கூட்டம் மிகுதியாக இருக்கும்.  முன்னதாகவே சத்திரம் வாசலில் நின்றிருக்கும் கோவிந்தராஜனுக்கு என் மீது கோபம் கோபமாக வரும்.  உரிய நேரத்தில் நான் வரவில்லை என்று.  ஆனால் உண்மையில் இன்று முன்பு நான் போவதை விட கூட்டம் தாங்க முடியவில்லை. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  வீட்டில் மனைவி கதை கேட்க ...

தமிழ் இனி மெல்ல ஓடிப் போய்விடுமா?

அழகியசிங்கர்  சில தினங்களுக்கு முன் உறவினர் வீட்டிற்குப் போயிருந்தேன்.  உறவினர் வீட்டில் இரண்டு செய்தித்தாள்கள் வாங்குகிறார்கள். இரண்டும் ஆங்கிலம்.  ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியா, இன்னொன்று ஆங்கில இந்துப் பத்திரிகை.  தமிழில் ஒரு பத்திரிகை வாங்கக் கூடாதா என்று கேட்டேன்.  அதில் ஒன்றும் இல்லை.  விபரமாய் எதாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் முடியும் என்றார்.  அந்தப் பதில் சற்று ஏமாற்றமாக இருந்தது. உறவினர் வீட்டு ஏழாம் வகுப்புப் படிக்கும் பெண் குழந்தையும் ஆங்கிலத்தில்தான் புத்தகம் படிக்கிறது.  தமிழ் வேப்பங்காய் மாதிரி கசக்கிறது.  எல்லோரும் தமிழில் தினசரியோ புத்தகமோ படிக்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் என்ற ஒன்றே படிக்கத் தெரியாமல் போய்விடுமோ? இன்றைய பிள்ளைகள் தமிழில் புத்தகங்களோ தினசரி செய்திகளோ படிப்பதில்லை.  இதன் பாதிப்பு போகப் போக மோசமாக இருக்கும். இன்னொரு நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவருடைய நடவடிக்கை எனக்கு சோர்வை ஏற்படுத்தியது.  அவர் டிவியை ஆன் செய்துவிட்டு வெறுமனே அமர்ந்திருக்கிறார்.  ...

ழ பத்திரிகையும் விருட்சம் பத்திரிகையும்

அழகியசிங்கர் ஆத்மாநாமை நான் மூன்று முறைதான் சந்தித்திருக்கிறேன். முதன் முறையாக அவரைச் சந்தித்தபோது அவரை எல்லோரும் மதுசூதனன் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தர்கள்.  யாருக்கும் ஆத்மாநாம் என்று தெரியவில்லை.  உண்மையில் அப்போது ஞானக்கூத்தன் என்ற பெயர்தான் பிரபலம்.  என்னைப் போன்ற புதியதாக இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு ஆத்மாநாம் பெயர் புரிபடவில்லை. அது இலக்கு இலக்கியக் கூட்டம்.  ராயப்பேட்டையில் பீட்டர்ஸ் காலனியில் நடந்தது. (என் ஞாபகத்திலிருந்து இதையெல்லாம் எழுதுகிறேன்).  கூட்டம் முடிந்து வந்தபோது ஆத்மாநாம் கையில் ழ பத்திரிகையின் பிரதிகள் இருந்தன.  அதை அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தயக்கத்துடன் கொடுத்துக்கொண்டிருந்தார்.  எனக்கு அவ்வளவாய் அறிமுகம் ஆகவில்லை என்பதால், என்னிடம் கொடுக்கவில்லை.  நானும் வாங்கவில்லை.  யாரும் அவரிடம் இதழ் பெற்றுக்கொண்டதற்கு பைசா கொடுக்கவில்லை. இதழைக் கொடுக்கும்போது அவர் முகம் மலர்ச்சியாக இருந்ததுபோல் தோன்றவில்லை.  சிலர் அலட்சியத்துடன் அந்தப் பத்திரிகையை வாங்கிக்கொண்டார்கள். சிறு பத்திரிகைய...

சனிக்கிழமை நடந்த கூட்டம்...

அழகியசிங்கர்                                                                                                                         போனவாரம் சனிக்கிழமை மூன்றாம் தேதி நவீன விருட்சம் 102 வது இதழ் வெளியிட ஒரு சிறிய மிகச் சிறிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தேன்.  இடம் போஸ்டல் காலனி முதல் தெரு.  வந்திருந்தவர்களை போனில் கூப்பிட்டேன்.  பெரும்பாலோர் 102வது இதழில் எழுதியவர்கள்.  அவர்களை நான் அறிமுகப்படுத்தினேன்.  வ வே சு நவீன விருட்சம் இதழை எல்லோருக்கும் வழங்கினார்.   ஒவ்வொருவராகப் பேசப் பேச கூட்டம் வேற திசையில் போய்விட்டது.  ஆனால் கேட்பதற்கு நன்றாக இருந்தது.  பாரதியார் கவிதைக்கு உரை அவசியம் என்ற வ வே சு கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.   வந...

ஒரு முறை சந்தித்தேன்....

அழகியசிங்கர்                                                                                                                                 சாகித்திய அக்காதெமி ந பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரண்டு புத்தகங்கள் தயாரித்தன.  ஒன்று பிச்சமூர்த்தியின் கவிதைகள்.  இரண்டு பிச்சமூர்த்தியின் கதைகள்.  கவிதைகளைத் தொகுத்தவர் ஞானக்கூத்தன்.  கதைகளைத் தொகுத்தவர் வெங்கட் சாமிநாதன்.  சாகித்திய அக்காதெமி அன்று நடத்தியக் கூட்டத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மானிடமிருந்து பிச்சமூர்த்தியின் கவிதைப் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.  ஒரு நிமிடம் நானும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்துகொண்டோம். காலையில் அப்துல் ரஹ்மான்...

வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கிறோம்

அழகியசிங்கர் நம் வாழ்க்கையில் நாம் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கிறோம்.  நம்மிடம் மிகக் குறைவான அதிகாரமே உள்ளது.  நேற்று அப்பாவிற்கு மாதம் ஒரு முறை நடக்கும் சடங்கு நடந்து கொண்டிருந்தது.  அப்போது ஏதோ ஒயர் பொசுங்கும் நாற்றம் வீசியது. கொஞ்சம் பயம் பற்றிக்கொண்டது. மின்சாரத்தில் எதாவது மின் கசிவு ஏற்பட்டிருக்குமா என்ற பயம்தான்.  அப்படிப் பற்றிக்கொண்டால் இடமே நாசமாகிவிடும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை. மதியம் நானும் நண்பர் கிருபானந்தனும் திருவல்லிக்கேணி சென்று விருட்சம் 102வது இதழ் எடுத்துக்கொண்டு வந்தோம்.  தி நகர் வழியாக வரும்போதுதான் தெரிந்தது, ஒரு பிரபல துணிக்கடை பற்றி எரிந்து கொண்டிருந்தது.  ஒரே புகை.  நாங்கள் காரில் வந்து விட்டோம்.  சென்னை சில்க்ஸ் என்கிற அந்த 7 மாடிக் கட்டிடம் எரிந்து கொண்டிருக்கிறது.  நானோ ஒன்றும் சொல்லத் தெரியாத வேடிக்கைப் பார்க்கும் மனிதன். தீயை அணைக்க பெரிய போராட்டம் நடந்து...