அழகியசிங்கர்
தவளைக் கவிதை
பிரமிள்
தனக்குப் புத்தி
நூறு என்றது மீன்
பிடித்துக் கோர்த்தேன்
ஈர்க்கில்
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
üஎனக்குப் புத்தி
ஒன்றேý
என்றது தவளை
எட்டிப் பிடித்தேன்
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -
üüநூறு புத்தரே!
கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!
ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!
நன்றி : பிரமிள் கவிதைகள் - தொகுப்பு கால சுப்ரமணியம் - லயம் வெளியீடு, பெரியூர், சத்தியமங்கலம் 698 402 - 328 பக்கங்கள் - விலை : ரூ.130 - வெளியான ஆண்டு : அக்டோபர் 1998

Comments