Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 50


அழகியசிங்கர்

ஞாயிறு 

ஷாஅ



இன்று ஞாயிறு
இல்லை ஆமாம் விடுமுறை
இல்லை இது ஒரு கிழமை
எதுவாக இருந்தால் என்ன
அற்வுதங்கள் இடம் பெயரும்
ஓர் கணம்
ஒரு தாவல்
ஒரு மீளல்
ஒரு சஞ்சாரம்
ஒரு ஓட்டம்
ஒரு சொல் மொழி
ஒரு வரி
ஒரு அசைவு
ஒரு மிடறு
ஒரு கவளம்
ஒரு நுகர்வு
ஒரு வீச்சு
ஒரு சரிவு
ஒரு விலகல்
ஒரு நடை
ஒரு சிமிட்டல்
ஒரு ஸ்பரிசம்
ஒரு அயர்ச்சி
ஒரு ஆசுவாசம்
ஒரு ஒப்பனை
ஒரு வீழ்ச்சி
ஒரு புகல்
ஒரு துயில்
ஒரு ம்

நன்றி : கண் புகா வெளி - கவிதைகள் - ஷாஅ - பக்கங்கள் : 96 - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 - வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629 001



Comments