Skip to main content

நான் வெல்ல வேண்டிய விளையாட்டு


இன்று காலை வெய்யிலில்லை
குளிர்ந்த அழுக்கான நாளின்று
விடைபெற கையசைக்கிறேன்
சன்னல் கம்பிகள் வழியே
நீ நடந்து போவதைப் பார்த்தவாறே.

உன்னுடலின் மணம்
என்னுடலின் மீது நீங்காதிருக்கிறது.
திகைப்புடனிருக்கிறேன்
உன் காதலை
நான் வெல்ல வேண்டிய விளையாட்டாக
ஏன் விளையாடினேனென்று.
தெருவில் நீ மிகவும் தனிமைப்பட்டுத் தெரிகிறாய்
நேரம் செல்லச் செல்ல உன் உருவம் சிறியதாகிறது
உன் கையசைவுக்காக உன் புன்னகைக்காக
ஏங்குகிறேன்.
எப்போதும் விசுவாசமான காதலனாக நானிருப்பேன்
உன்னை உரக்க அழைத்துச் சொல்ல ஒரு ஆசையை
உணர்கிறேன்
ஆனால் சன்னல் கம்பிகளின் மீதென் மூச்சு
மெளனமாய் உறைந்து போனதைக் காண்கிறேன்.
தமிழாக்கம் : லாவண்யா

Comments

sivakumar said…
ஆன்கலின் சுபாவம்மே அதுதான் ...

ஒன்ரு .. போக விடாமல் அழுவார்கல்...

அல்லது... போகச் சொல்லிவிட்டு
அழுவார்கல்...