(தமிழில் - விஜயராகவன்)
என்னுடைய இந்தப் பாடல்
இறுதிப் பாடலாக இருக்கலாம்
சொல்லிப் பெருமூச்சு விட்டது பறவை।
அடுத்த வசந்தத்தை
வரவேற்க யாரிருப்பர்,
யாருக்குத் தெரியும்?
மூடத்தனமாய் அமங்கலச் சொல் பேசாதே
அச்சானியமாய்ப் பிதற்றாதே என்றது
பூக்கத் தொடங்கியிருந்த விருட்சம்.
போன வருடமும்
இப்படித்தான் பேசினாய்
ஆனால் இன்று வந்துதான் இருக்கிறாய்,
இல்லையா?
பல வசந்தங்கள் வந்து விட்டன
ஒன்றன் பின் ஒன்றாய்,
நானும் அலுக்காது
பூத்துக் குலுங்கியுள்ளேன் பல முறை।
இதயத்தில் தீவிர வேட்டை இருந்தால்
வளர்ந்து நீள்கிறது வாழும் காலமும்
Comments