பால்ய வீடு
பாடப்புத்தகங்கள் கலைந்து கிடந்த மாடம்
அன்றென் கைகளுக்கு எட்டியது
முக்காலியின் உயரத்தினால்தான்...
சுவர் மேல் கால்வைத்தேறி
தண்ணீர் மோந்த பெரிய தொட்டியும்
இன்றேனோ சின்னதாய் தெரிகிறது...
அதே பழைய படிக்கட்டுகளும் தெருக்களும் கூட
அளவில் சிறுத்துப் போயிருக்கிறது...
அன்றென் கைகளுக்கு எட்டாமல் போன பலவும்
இன்றென் கைகளுக்கு எட்டினாலும்
கை நழுவிப் போனதாயிருக்கிறது
என் பால்யத்தின் தலைகோதிய வீடு...
கோலப்பொடி டப்பா வைத்திருந்த
மாடமிருந்த சுவரை இடித்து
கருமான் பட்டறை போட்டிருக்கிறீர்கள்
பற்றி எரிகிறதுஉலைக் கூடமும்...!
உலைக் கூடமும்...!
மழலை உலகம்
மழலைக்குரலில்
நட்பு வளர்க்கும்
குழந்தைகளுக்கு
தேவையற்றதாகவும்
தெரியாததாகவும் இருக்கிறது...
தத்தம் தாய்மொழி
வெவ்வேறானது என்பது...
२.
கிழமைகள் பற்றியெல்லாம்
அதற்குள் அவனுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்றே நம்பினாலும்
ஒரு ஞாயிற்றுக்கிழமையில்
சும்மா கேட்டு வைத்தேன்
'இன்னிக்கி என்ன கிழம?'
'சனிக்கிழம கிழம'
Comments
அனுஜன்யா