Skip to main content

நவீன விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

 அழகியசிங்கர்  





ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்



1) மழைக்குப் பின் .. 


இந்த கணம்தான் 
உருவானதுபோல் எல்லாம் 

நான் பார்க்கப் பார்க்க 
முளைத்தன மரங்கள் 

படர்ந்து சென்றது வானம் 
எதிலும், எங்கும் 

காற்றில் பழுத்தன பறவைகள் 
மனிதர்களும் 
இப்போது தான் தோன்றியது போல் 
எங்கெல்லாமோ ... எப்படியெல்லாமோ 

மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும் 
விதைத்துவிடு  
மனதில் தோன்றியதை 
ஆகாயத்தைக் கூட 

சிருஷ்டித்துக் கொள் 
விரும்பியவற்றை 
மரம், பறவை, வீடு 
ஏன் மனிதனையும் கூடத்தான்


ஹிந்தி மூலம் : ஜ்யோத்ஸ்னாமிலன்

தமிழில் : திலீப்குமார்

(நவீன விருட்சம் இதழ் :7 ஜனவரி - மார்ச்சு 1990)





Comments