Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 136

அழகியசிங்கர்  




சிமெண்ட் பெஞ்சுகள்



நஞ்சுண்டன்                                                     



வசந்த காலத்தில்
பூத்துக்குலுங்கும் மரங்களின்
கீழிருக்கும்
சிமெண்ட் பெஞ்சுகள்
கடந்து செல்லும் ஒவ்வொருவரையும்
அழைக்கின்றன
'வா. உட்கார். ஓய்வெடுத்துக்கொள்.
கோடை வெயிலிலோ
விநயமாய் வேண்டுகின்றன
'மன்னித்துக்கொள். வேறிடம் தேடு.'

சிமெண்ட் பெஞ்சில்
அமரும் யாரும் அறியார்
தனக்கு முன்னும் பின்னும்
அமர்கிறவர் யாரென்று.

சிமெண்ட் பெஞ்சுகள் மட்டும் அறியும்
உட்காரும் மனிதர் யாவரையும்.


நன்றி : சிமெண்ட் பெஞ்சுகள் - நஞ்சுண்டன் - பக்கங்கள் : 52 - விலை : ரூ.25 - ஆண்டு : நவம்பர் 1996





Comments

Popular posts from this blog