Skip to main content

அமேசான் கிண்டலில் நவீன விருட்சம் 112வது இதழ்


அழகியசிங்கர்

விருட்சம் 111வது இதழ் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை. ஆனால் முடிந்த மாதம் டிசம்பர் 2019. இதைத் தொடர்ந்து புத்தகச் சந்தை ஜனவரி மாதம் நடந்தது. 112வது இதழ் கொண்டு வர முடியவில்லை. புத்தகக் காட்சி முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் முழுவதும் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருந்த புத்தகங்களை அடுக்கி வைப்பதில் பெரும்பாலான நேரம் போய்விட்டது. கூடவே நண்பர் ஒருவரும் உதவி செய்தார். மார்ச்சு மாதம் வந்தவுடன் கிட்டத்தட்ட 112வது இதழை முடித்து விட்டேன். ஒருவழியாக அச்சில் கொண்டு வரத் தயாராக இருந்தபோது கொரானா விருட்சத்தைத் துரத்தி விட்டது. இதோ இதழை அச்சடிக்கத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். ஆனால் நவீன விருட்சம் இதழை எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று தோன்றியது. ஏற்கனவே நவீன விருட்சம் இதழ் 105 ஐ நான் அமேசான் கிண்டலில் வெளிப்படுத்தியிருக்கிறேன். கிண்டலில் அந்த இதழை பலர் வாசித்திருக்கிறார்கள். அதேபோல் 112வது இதழையும் கொண்டு வர நினைத்து கொண்டு வந்து விட்டேன். கிண்டலில் நவீன விருட்சத்தை விலை கொடுத்து வாங்காமல் பக்கங்களை வாசிக்கலாம். 80 பக்கங்கள் கொண்ட இந்த இதழை சில மணித்துளிகளில் வாசித்து விடலாம். நான் இதுவரை அமேசான் கிண்டலில் 9 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். வழக்கம்போல் விருட்சம் 112வது இதழில் பங்குப் பெற்ற படைப்பாளிகள். 1. பதில்கள் - கேள்விகள் - பா. ராகவன் 2. பிரதீபன் கவிதை 3. நானும் - பராசக்தியும் நலம் - 1 - கடிதம் - சுப்பு 4. அரசியல் + சினிமா + இலக்கியம் - பாதாளச் சாக்கடை - கட்டுரை - முத்துக்கிருஷ்ணன் 5. வனம் தேடும் சிறகுகள் - கவிதை - பிறைநிலா 6. கடிதம் - வளவ துரையன் 7. லாரா - சிறுகதை - ரகுராமன் ஜெயராமன் 8.. சிகப்பு முக்கோண காலம் - கட்டுரை - சந்தியா நடராஜன் 9. அழகியசிங்கர் கவிதைகள் 10. ஏழை நல்லவனாக இருப்பதில் உலக அதிசயங்களில் ஒன்றாகி விட்டது - சிறுகதை - ஸிந்துஜா 11. மேழி கவிதைகள் 12. பிரதீபன் கடிதம் 13. ஸ்ஸ்சுரங்கம் - சிறுகதை - சிறகு இரவிச்சந்திரன் 14. அதங்கோடு அனீஷ்குமார் கவிதைகள் 15. சாயல் - சிறுகதை - சத்யா ஜீ பி 16. ஜீவன் பென்னி கவிதைகள் 17. எண்ணம் - கவிதை - ந பானுமதி 18. மழையமைதி - கவிதை - நந்தாகுமாரன் 19. நேர்த்தி - சிறுகதை - பிரபு மயிலாடுதுறை 20. அஞ்சலட்டை கதைகள் - அழகியசிங்கர் 21. மற்றுமொரு மூக்கு வதம் - சிறுகதை லதா ரகுநாதன் 22. உரையாடல் இதோ கிண்டலில் போய் பார்க்க இந்தச் சுட்டியையும் இணைத்துள்ளேன்.
https://www.amazon.in/dp/B086H3T68R/ref=sr_1_fkmr0_1?keywords=naveena+virutcham&qid=1585372965&sr=8-1-fkmr0&fbclid=IwAR0p87bETi_2IXoGcjpWXcocnZI7_6rVPDe-QvyvHGTDf4aQcXaGYg7rh2o

Comments

Popular posts from this blog