அழகியசிங்கர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னால் முழுவதும் புத்தகம் படிக்க முடியவில்லை. அவ்வளவு கெடுபிடி. அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஒரு புத்தகத்தை முழுவதும் படிக்க முடியவில்லை. நான் முதலில் ம பொ சியின் தமிழன் குரல் என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். அதைப் படிக்க ஆரம்பித்தவுடன் என்னால் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை படிக்க முடியாது. அதனால் வேற புத்தகம் எடுத்துக்கொண்டேன். 80 பக்கங்கள் அடங்கிய புத்தகம். நேற்று பாதிப் பொழுது நம்மவீட்டுப் பிள்ளை என்ற பேத்தலான படம் பார்த்தோம். கூட்டமோ கூட்டம். அதுவும் உதயம் தியேட்டரில் அந்தப் படம் பார்த்தேன். இனிமேல் உதயம் தியேட்டரில் மட்டும் படம் பார்க்கக் கூடாது என்று தோன்றியது. காரணம் குடித்து விட்டு சினிமாவிற்கு வருகிறார்கள். அப்படி வருகிறவர்கள், அமைதியாகப் படம் பார்த்துவிட்டுப் போகலாம், ஆனால் கெட்ட வார்த்தையால் எல்லோரையும் பார்த்து சத்தம் போடுகிறார்கள். உதயம் தியேட்டர் நிர்வாகம் இது குறித்து ஒன்றும் செய்யவில்லை. அந்த 3 மணி நேரததிற்கு ...