Skip to main content

துளி : 37 - கடையா விளையாட்டு மைதானமா?




அழகியசிங்கர்




இரண்டு நாட்களுக்கு முன் அமேசான் கின்டல் வாங்கவேண்டுமென்றேன் புதல்வனிடம்.  அமெரிக்காவில் இருந்துகொண்டு அதிகமாகப் பணம் செலவு வைக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்துகொண்டிருந்தது.  என்னமோ எனக்கு சில எலக்டிரானிக் பொருள்கள் குறைவான விலைக்கு இங்குக் கிடைப்பதாகத் தோன்றுகிறது.  அதனால்தான் கின்டல் வாங்க முயற்சி செய்தேன்.  போன முறை (2011) சோனி காமரா கூட அமெரிக்காவில்தான் வாங்கினேன்.  அதை விட இன்னும் சிறப்பாக உள்ள காமரா வாங்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.  புதல்வன் அதெல்லாம் வேண்டாம் ஸ்டாப் என்று சொன்னால் நிறுத்திவிடுவேன்.  

வ்ரைஸ் என்ற கடைக்கு புதல்வன் அழைத்துக்கொண்டு போனான். பிரமித்து விட்டேன்.  இப்படி ஒரு கடையைக் கற்பனை செய்ய முடியவிலலை. சென்னையில் ஒரு தெரு முழுவதையும் கடையாக மாற்றினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது கடை.   கடை உள்ளே செயற்கையாக மரங்கள் நட்டு வைத்திருந்தார்கள்.  பின் கடைக்குள்ளேயே ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது.  

என்னடா இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  ஆனால் கடையில் கூட்டமே இல்லை.  எப்படி லாபம் வரும்?   தெரியாமல் என் பேத்தியை அழைத்துக்கொண்டு வந்து விட்டோம்.  ஓட்டமாக ஓடி எங்களுக்குத் தண்ணிக் காட்டினாள்.

நான் திரும்பி வரும்போது கின்டல் வாங்கவில்லை.



Comments