அழகியசிங்கர்
நேற்று வேகமாகக் காற்று அடித்ததால் வெளியே தலை காட்ட முடியவில்லை. என்னடா இது என்று தோன்றியது. ஆனால் இன்று பொழுது ஆதரவு தரும்படி இருந்தது. மேரி கோப்பா கௌன்டி என்ற இடத்தில் உள்ள மகா கணபதி கோவிலுக்குச் சென்றோம். பொதுவாக இங்கே உள்ள கோயில் எல்லாம் சதுர வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குருக்களிலிருந்து எல்லோரும் தமிழில் உரையாடினார்கள். அன்னலட்சுமி உணவு கூடத்தில் வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் இலவசமாக உணவு வழங்கினார்கள். தயிர்ச்சாதம் சிறப்பாக இருந்தது. உணவு கூடத்தில் தென்றல் பத்திரிகை இருந்தது. இலவசமாக வினியோகம் செய்ய மேஜையில் வைத்திருந்தார்கள். ஒரு பத்திரிகையை எடுத்துவைத்துக் கொண்டேன். அங்கிருந்து சௌத் மௌன்டன் என்ற இடத்திற்குச் சென்றோம்.
திருப்பதி, ஊட்டி மலைகளுக்குச் சென்ற ஞாபகம் வந்தது. அங்கிருந்து பீனிக்ஸ் என்ற இடத்தைப் பார்த்தது நல்ல அனுபவம். பலர் வந்திருந்தார்கள். குறிப்பாக வயதானவர்கள் வந்திருந்தார்கள். குழந்தைகள் எல்லாம் கும்மாளமிட்டிருந்தன. அங்கேயும் பாசி மணி விற்க சில வெள்ளக்கார மாதுகள் இருந்தார்கள். பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் அழகாகக் காட்சி அளித்தார்கள். மலையிலிருந்து ஊரைப் பார்க்கும்போது கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. புதல்வன் காரை ஓட்டிக்கொண்டு வரும்போது பாதையில் சரியானபடி திரும்பவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். நல்ல விதமாக ஓட்டிக்கொண்டு வீட்டில் சேர்த்தான்.
Comments