Skip to main content

Posts

Showing posts from 2018

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்.....1

அழகியசிங்கர் ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி புத்தகங்கள் கொண்டு வரும் வழக்கம் எனக்குண்டு.  ஆரம்பத்தில் நான் ஒன்றோ இரண்டோ புத்தகம் கொண்டு வருவேன்.   சிலசமயம் அப்படிப் புத்தகம் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  புத்தகக் காட்சியை முன்னிட்டிதான் அப்படி புத்தகம் கொண்டு வருவேன். அதற்கு முன் வரை சும்மா வெட்டியாய் பொழுதைப் போக்குவேன்.  இப்போதெல்லாம் அச்சிடும் முறை மாறிவிட்டது.  அளவறிந்து செயல் படுகிறார்கள்.   வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்துகொண்டு வரும்போது புத்தகக் காட்சி 4ஆம் தேதி என்று சொன்னார் என்னுடன் வரும் நண்பர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இவ்வளவு சீக்கிரமாக வந்து விட்டதே என்ற அதிர்ச்சி.   பூங்காவில் ஒரு பெரிய மரம் இருக்கிறது.  பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.  மரத்திடம் போய் பேசினேன்.  "மரமே மரமே," "என்ன?" "இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேச மாட்டேன்." "என்ன இரண்டு விஷயங்கள்" "ஒன்று வந்து ஏன்?" "ஓ ஓ ஏன்னா?" "இன்னொன்று இன்னொரு ஏன்?" "எனக

துளி : 24 - நான் எப்படியோ ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன்

அழகியசிங்கர் டிசம்பர் மாதம் மோசமான மாதம்   ஜனவரி மாதம் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி புத்தகங்கள் தயாரிக்க வேண்டும்.  புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் 16வது சென்னை உலகத் திரைப்பட விழா 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிவரை.   இதைத் தவிர இசைக் கச்சேரிகள் பல சபாக்களில்.   நான் இந்த முறை ஐந்து படங்களைப் பார்த்துவிட்டேன்.  மாலை நேரத்தில் குளிர் தாங்க முடியாமல் இருந்ததால் பகல் நேரங்களில் சென்று கொண்டிருந்தேன்.   இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை உலகத் திரைப் பட விழாவில் நான் பார்த்த படங்கள் எனக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்தன.  ஆனால் போன ஆண்டு அந்த அளவிற்கு திருப்தியைத் தரவில்லை.  பல படங்களில் பாதியை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். ஆனால் இந்த முறை நான் பார்த்தப் படங்கள் எல்லாம் எனக்குத் திருப்தியை மட்டுமல்ல, இன்னும் சினிமாப் படங்கள் பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது.  ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக எனக்குத் தெரிந்தது.  முதலில் டுர்கிப் படம் ஒன்றைப் பார்த்தேன்.  படம் பெயர் தி ஒயில்டு பியர் டீரி. சிலான் என்பவர் இயக்கியப் படம். எ

துளி : 23 - ஆழ்வார் கடையை மறக்க முடியாது

அழகியசிங்கர் எப்போதும் நான் பழைய புத்தகங்களையே வாங்குவேன். என் பார்வை பழைய புத்தகக் கடைக்கே செல்லும்.  1978ஆம் ஆண்டில் ஹைகோர்டிற்கு எதிரில் ஒருவர் பை நிறையப் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பார்.  அவரிடம் ஆங்கிலப் புத்தகங்களை வாங்குவேன்.  அப்படி நான் வாங்கியப் புத்தகங்கள் அல்பெர் கம்யூவின் தி எக்ûஸல் அன்ட் தி கிங்டம்.  அதேபோல் சாத்தர் புத்தகம் ஒன்று வாங்கினேன். இப்படித்தான் என் புத்தகம் வாங்கும் வரலாறு துவங்கியது.  அப்போது வாங்கிய அந்தப் புத்தகங்களை இன்றும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.  அதில் உள்ள முதல் கதையான ஒழுக்கமற்றப் பெண் என்ற கதையை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.  பல பழையப் புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதிலும் என் பொழுது போகும்.  பெரும்பாலும் திருவல்லிக்கேணி பிளாட்பாரங்களில் என் கவனம் இருந்துகொண்டு இருக்கும்.  சமீபத்தில் ஏ கே செட்டியாரின் குமரி மலர் என்ற பத்திரிகையை அபூர்வமாகக் கண்டுபிடித்தேன் திருவல்லிக்கேணி பிளாட்பாரக் கடையில். அதேபோல் மயிலாப்பூரில் உள்ள ஆழ்வார் கடை.  நீண்

துளி : 22 - புத்தகக் காட்சி எண் 403

அழகியசிங்கர் 42வது சென்னைப் புத்தகக் காட்சியில் என் கடை எண் 403.  எப்போதும் எனக்கு முதல் வரிசையில்தான் கடை கிடைக்கும்.  அல்லது கடைசி வரிசையில் கிடைக்கும்.  இந்த முறை நடுவில் கிடைத்துள்ளது.   கடை எண்ணைக் கூட்டினால் 7 வருகிறது.  7ஆம் எண் ஒரு நல்ல எண்.  புத்தகங்கள் நன்றாக விற்குமென்று நம்புகிறேன். விருட்சம் வெளியீடாகக் கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் கொண்டு வருகிறேன்.  நான் எழுதிய புத்தகங்கள் 4ம் தொகுத்தப் புத்தகம் ஒன்றும் கொண்டு வருகிறேன்.   என் புத்தகங்கள் விற்பது ஒருபுறம் இருந்தாலும் மற்றப் பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை வாங்குவதிலும் ஆர்வமாக இருப்பவன்.   புத்தகக் கண்காட்சி ஒட்டி புகைப்படங்கள் எடுப்பது, கூட்டங்கள் நடத்துவது என் பொழுது போக்கு.  எல்லோரும் என் கடைக்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 7வது கூட்டம்

அழகியசிங்கர் நாளை மாலை 5.45க்கு வழக்கம்போல் கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,  ஜாபர்கான் பேட்டை, சென்னை          (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு, அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) இலக்கியக் கூட்டம்.  அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

துளி : 21 - அரை மணி நேரத்தில் படித்து விடலாம்

அழகியசிங்கர் இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு என்னுடைய புத்தகங்களே நான்கு கொண்டு வருகிறேன்.  போன ஆண்டு மொத்த சிறுகதைகளையும் சேகரித்துக் கொண்டு வந்ததுபோல் இந்த ஆண்டு என் மொத்த கவிதைகளையும் சேகரித்துள்ளேன்.  300க்கு மேற்பட்ட கவிதைகள்.  500 பக்கங்கள் . முதன் முறையாக நான் எழுதிய தன்புனைவு நாவல் (200 பக்கங்கள்) ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன் ஏற்கனவே வந்து விட்டது.  இதற்கு அடுத்தாற்போல் எதையாவது சொல்லட்டுமா என்ற கட்டுரைத் தொகுப்பு ஒன்று வருகிறது.  அமிருதா என்ற பத்திரிகையில் ஐந்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரைத் தொகுப்பு இது.  அதேபோல் இன்னொரு கட்டுரைத் தொகுப்பு விசிறி சாமியாரும் பிரமிளும்.   விசிறி சாமியாரிடம் என்னை அழைத்துக்கொண்டு அறிமுகப் படுத்தியவர் பிரமிள்.  ஆனால் ஒருமுறைதான் நெருக்கமாக நான் விசிறி சாமியாரைப் பார்த்தேன்.  அந்த அனுபவத்தை நான் எழுதினாலும் பிரமிள் பற்றித்தான் அதிகமாக எழுதி உள்ளேன்.  இந்த நான்கும்தான் என்னுடைய புத்தகங்கள்.  இந்தப் புத்தகங்களுடன் ஏற்கனவே 3 கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்து விட்டேன். ஒரு புத்தகம் வேணு வேட்டராயன்

துளி : 20 - மறக்க முடியாத பிரபஞ்சன்

அழகியசிங்கர் பெரும்பாலும் நான் பிரபஞ்சனை ஓட்டல் வாசல்களில் அல்லது பேப்பர் கடை வாசலில், அல்லது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது வழக்கம்.  அந்தத் தருணங்களில் இலக்கிய நண்பர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும்  இருவரும் பேசுவோம்.  பிரபஞ்சன் சிறுகதைகளின் மீது காதல் கொண்டவர்.  புதுமைப்பித்தன் கதைகளை எப்படி ரசிப்பது என்பதைப் பற்றி  ஒவ்வொரு வாரமும் அவர் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்.  தொடர்ந்து வாசிப்பது எழுதுவதுதான் அவர் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து இருந்திருக்கிறார்.  பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டலில் சந்திக்கும் போது அவர் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு காட்சி அளிப்பார்.  பின் இருவரும் சேர்ந்து காப்பி குடிப்போம்.  அவரைப் பார்த்து நான் விருட்சம் இதழ் பிரதியைக் கொடுப்பேன்.  உடனே அதற்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்வார்.  இதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்காமல் கொடுத்தாலும் அவருடைய நல்ல பழக்கம் சிறு பத்திரிகைகளை மதிப்பது. 15.08.2000ஆம் ஆண்டு ந பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழா நடத்தினோம்.  அதில் சிறப்பாக உரை நிகழ்த்தியவரில் பிரபஞ்சனும் ஒருவர். சமீபத்தில் வேடியப

சுஜாதாவும் நானும் - ஒளிப்பதிவு 3

அழகியசிங்கர் எழுத்தாளர் சுஜாதாவும் நானும் என்ற தலைப்பில் ரகுநாதன்  15.12.2018 அன்று (சனிக்கிழமை) சிறப்பாக உரை நிகழ்த்தினார்.  இரண்டு நாட்களால் நீங்கள் முதல் இரண்டு பகுதிகளை ரசித்திருப்பீர்கள்.  இதோ மூன்றாவதும் கடைசிப் பகுதியையும் அளிக்கிறேன்.

சுஜாதாவும் நானும் - ஒளிப்பதிவு 2

அழகியசிங்கர்  எழுத்தாளர் சுஜாதாவும் நானும் என்ற தலைப்பில் ரகுநாதன்  15.12.2018 அன்று (சனிக்கிழமை) சிறப்பாக உரை நிகழ்த்தினார்.  அதன் முதல் பகுதியை நீங்கள் ரசித்திருப்பீர்கள்.  இதோ இரண்டாவது பகுதியையும் ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

சுஜாதாவும் நானும் - ஒளிப்பதிவு 1

சுஜாதாவும் நானும் - ஒளிப்பதிவு 1 அழகியசிங்கர்  எழுத்தாளர் சுஜாதாவும் நானும் என்ற தலைப்பில் ரகுநாதன்  15.12.2018 அன்று (சனிக்கிழமை) சிறப்பாக உரை நிகழ்த்தினார்.  அதன் முதல் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

அழைப்பிதழ்

அழகியசிங்கர் நாளை (15.12.2018) சனிக்கிழமை நடைபெற இருக்கிற கூட்டத்தைப் பற்றிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். 

பாரதியாரைக் கொண்டாடுவோம் - 4

அழகியசிங்கர் 11ஆம் தேதி கொண்டாட வேண்டிய பாரதியார் பிறந்தநாளை 12ஆம் தேதிதான் கொண்டாடினேன். நான் கொண்டு வந்த மனதிற்குப் பிடித்த கவிதைகள் தொகுதி 1ல் பாரதியாரின் கவிதையும் சேர்த்து உள்ளேன். 100 கவிதைகள். 100 கவிஞர்கள். கவிதையை ரசிப்பவர்கள், கவிதை எழுதுபவர்கள் என்று ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து என்னுடைய இந்தக் கவிதைத் தொகுதியைக் கொடுக்க நினைத்தேன். 4 பேர்களிடம் கொடுத்து புகைப்படங்களையும் முகநூலில் வெளியிட்டுள்ளேன். ஐந்தாவதாக நான் முனைவர் வ வே சுவைப் பார்த்தபோது மணி இரவு 9 ஆகிவிட்டது. கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதோ அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

பாரதியாரைக் கொண்டாடுவோம் - 2

அழகியசிங்கர் ஓட்டல் சங்கீதாவில் பா ராகவனையும், ராஜாமணியையும் சந்தித்தேன்.  இன்று பாரதி பிறந்த நாளை முன்னிட்டு üமனதுக்குப் பிடித்த கவிதைகள்ý புத்தகப் பிரதிகளைக் கொடுத்தேன்.  நூதன முறையில் நான் பாரதி விழாவைக் கொண்டாடுகிறேன்.  இதோ அவர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.

பாரதியாரைக் கொண்டாடுவோம் - 1

பாரதியாரைக் கொண்டாடுவோம் - 1 அழகியசிங்கர் இன்று பாரதியாரின் பிறந்த தினம்.  நான் தயாரித்த üமனதுக்குப் பிடித்த கவிதைகள்ý புத்தகத்தின் 4 பிரதிகளை நான்கு கவிதை எழுதுபவர்களுக்கு பாரதி மீது பற்று உள்ளவர்களுக்கு அவர்கள் வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து புத்தகப் பிரதியைக் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  பின் அதை முகநூலிலும் வெளிப்படுத்தலாமென்று நினைக்கிறேன்.  நான் வசிக்கும்  மேற்கு மாம்பலத்தில் அவர்களும் வசிக்க வேண்டும். முடியுமா? இத் தொகுதியில் வெளியான கவிஞர்களுக்கு இப் புத்தகத்தை இப்போது தரப் போவதில்லை.  சில மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு அனுப்ப உள்ளேன். இத் தொகுதியில் நான் தேர்ந்தெடுத்த  பாரதியாரின் பாடலை இங்கே பதிவு செய்கிறேன். கண்ணன் - என் காதலன் சி சுப்பிரமணிய பாரதி ஆசை முகமறந்து போச்சே - இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகமறக்க லாமோ? கண்ணில் தெரியுதொரு தேற்றம் - அதில் கண்ண னழகுமுழு தில்லை நண்ணு முகவடிவு காணில் - அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன் உறவை நினைத்திருக

துளி : 19 - இரு நண்பர்கள்

துளி : 19 - இரு நண்பர்கள் அழகியசிங்கர் எனக்கு இரு நண்பர்கள் இருக்கிறார்கள்.  ஒருவர் சினிமாவில்.  இன்னொருவர் நாடகத்தில்.   ஒரு காலத்தில் நாங்கள் மூவரும் வேற வேற வங்கிகளில் பணிபுரிந்தவர்கள்.  சினிமாவில் ஆர்வமாய் ஈடுபட்டவர், உலகச் சினிமாவே எடுத்துப் புகழ் பெற்றுவிட்டார்.  இன்னும் தொடர்ந்து சினிமாவைப் பற்றிய சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர். இன்னொரு நண்பர் நாடகத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.  நாடகத்திற்காக ஒரு பத்திரிகையை துணிச்சலாக நடத்தியவர்.  அந்தப் பத்திரிகையின் மூலம் பல நாடகங்கள் தமிழுக்குத் தெரிய வந்துள்ளன.  நாடகத்தில் பங்குகொண்டவர் தன் எண்ணத்தில் தீவிரமானவர்.   8ஆம் தேதி அவர் போன் செய்தார்.  இரண்டு நாடகங்களை அவர் வீட்டு மொட்டை மாடியில் அரங்கேற்றம் செய்யப் போவதாகக் குறிப்பிட்டார். 9ஆம் தேதி மாலை 7 மணிக்கு. எப்படியும் அந்த இரு நாடகங்களைப் பார்த்தே தீருவது என்று தீர்மானித்திருந்தேன்.  கே கே நகரில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன்.  மொட்டை மாடியில் ஒரு அகலமான இடத்தில்தான் நாடகங்கள் நடந்தன.  எளிமையான முறையில் அரங்கேற்றம்.  சமீபத்தில் பல நிகழ்ச்சிகள

துளி : 18 - மனதுக்குப் பிடித்த கவிதைகள் தொகுதி 1

அழகியசிங்கர் கடந்த ஓராண்டாக நான் முயற்சி செய்த புத்தகம்தான், 'மனதுக்குப் பிடித்த கவிதைகள்' என்ற புத்தகம்.  போன புத்தகக் காட்சியின்போது ஒரு நிறுவனம் ஒரு கவிதைத் தொகுப்பு நூலைக் கொண்டு வந்திருந்தது.  அதில் பல கவிஞர்களின் கவிதைகளை அந்தப் புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  அந்தப் புத்தகத்தை உருவாக்கியவர்களும் என் நண்பர்கள்தான்.  ஆனால் கவிதை என்றால் இதுதான் என்று ஒரு சிலரை புறக்கணித்து ஒரு அதிகாரத்தைச் செலுத்தி உள்ளார்கள். அப்போது ஒரு முடிவு செய்தேன்.  நாமே ஏன் இப்படி ஒரு தொகுப்பைக் கொண்டு வரக்கூடாது என்பதுதான் அது.  நான் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைச் சேகரித்து வைத்திருந்தேன்.   அதில் தோன்றும் கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை மட்டும் தேர்ந்தெடுத்து முகநூலில் குறிப்பிட்டு வர ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் விருட்சம் என்ற பத்திரிகையை கவிதைக்காகத்தான் கொண்டு வந்தேன். சிலசமயம் உற்சாகமாகவும், சிலசமயம் மறந்து போயும் இந்தப் பதிவை உருவாக்கிக் கொண்டிருந்தேன்.  என்னுடைய முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்ந்து கொண்டிருந்தது.  முதலில் ஒரு நூறு கவிதைகளைக் கொ

துளி : 17 - தமிழ் வளர்த்த சான்றோர்...

அழகியசிங்கர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பில் வ வே சுவும் தஞ்சாவூர் கவிராயரும் எழுத்தாளர் படைப்பாளி சுந்தர ராமசாமியைப் பற்றி  உரை நிகழ்த்தினார்கள்.  தி நகரில் கிருஷ்ணகானசபா பின்னால் வீற்றிருக்கும் காமகோடி ஆடிட்டோரியத்தில்  கூட்டம் நடைபெற்றது. இப்படி ஒவ்வொரு மாதமும் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களில் முக்கியப் பங்கு வகுப்பவர் சுப்பு அவர்கள்.  தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை என்ற நாவல் அது வெளி வந்த ஆண்டில் சாகித்திய அக்காதெமி பரிசுபெற எல்லாத் தகுதியும் பெற்றிருந்தும்,  அதற்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. அப்போது பரிசு கிடைப்பதற்கான பேச்சை அந்த நாவல் உருவாக்கியிருந்தது.   மௌனி என்ற எழுத்தாளர், சுந்தர ராமசாமியின் இந்தப் படைப்புக்குப் பரிசு கிடைக்கக் கூடாதென்று சாபம் இட்டதாகப் பேச்சாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார். உண்மையில் அதுதான் நடந்தது.  கடைசிவரை  சுந்தர ராமசாமிக்கு எந்தப் பரிசும் கிட்டவில்லை.   அவர் வாழ்ந்த 8 ஆண்டுகளில் சுந்தர ராமசாமி 40000 கடிதங்களுக்கு மேல் எல்லோருக்கும்

துளி : 16 - எந்த அட்டையை எடுத்துக் கொள்வது?

அழகியசிங்கர் என்னுடைய   நாவலான üஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்ý என்ற புத்தகத்திற்கு இரண்டு அட்டைப் படங்களைத் தயாரிக்கும்படி ஆகிவிட்டது.  இதில் எந்தப் படத்தை எடுத்துக்கொள்வது என்ற குழப்பம் இருந்ததால் இரண்டு அட்டைப் படங்களிலும் பிரதிகள் அடித்து வைத்திருக்கிறேன். இந்த அடிப்படையான குழப்பத்திற்குக் காரணம் என்னவென்றால் எல்லாமே நானாக இருப்பதால்தான்.  நானே பதிப்பாளர், நானே எழுத்தாளர், நானே விற்பனையாளர் என்று எல்லாம் நானாக இருப்பதால் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது.   உங்கள் முன் இந்தப் படங்களை சமர்ப்பிக்கிறேன்.  நீங்கள் கூற முடியும் என்றால் கூறுங்கள்.  எந்த அட்டையை எடுத்துக் கொள்வது? அ. மஞ்சள் நிற அட்டை ஆ. நீல நிற அட்டை நீங்கள் அ அல்லது ஆ என்று சொன்னால் போதும்.

சஞ்சாரம் நாவலுக்குக் கிடைத்தப் பரிசு

சஞ்சாரம் நாவலுக்குக் கிடைத்தப் பரிசு அழகியசிங்கர்  எஸ்ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவல்தான் சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற உதவியது.  நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் நான் ஒரு புத்தகம் கொண்டு வந்தேன். ஏப்ரல் 2016ல் கொண்டு வந்தப் புத்தகம் அது.   21 புத்தகங்கள் பற்றி 3000 பக்கங்கள் படித்துவிட்டு எழுதிய புத்தகம். நான் முதன் முதலாகச் 'சஞ்சாரம்' என்ற ராமகிருஷ்ணன் புத்தகத்துடன்தான் 'நீங்களும் படிக்கலாம்' என்ற புத்தகம் ஆரம்பித்தேன்.  2015ல் இந்த நாவலைப் படித்துவிட்டு எழுதினேன். நாதஸ்வரம் என்ற இசைக் கருவியை முன்வைத்து நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் நாவல் என்று தோன்றியது.  பல உபகதைகள் என்று படிக்கப் படிக்க ஒரு திரில்லர் நாவலைப் படிப்பதுபோல் போகும் இந்த நாவல்.  இப்போது நான் திரும்பவும் எடுத்து வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.   கதைசொல்லியான எஸ் ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நகுலன் நாவல்களும் என் தன்புனைவு நாவலும்..

அழகியசிங்கர் சில வாரங்களுக்கு முன் பா ராகவன் அவர்களை சங்கீதா ஓட்டலில் சந்தித்தேன். மதிய நேரம். பொதுவாக ராகவனை சந்திக்கும்போது அது உற்சாகமான பொழுதாகப் போகும். அது மாதிரி இன்னும் சில நண்பர்களைச் சந்திப்பதும் அப்படித்தான் இருக்கும். ராகவன் யதி என்ற நாவலை முடித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் அவரைப் பார்த்துக் கேட்டேன். "நாவல் எழுதுவது எப்படி?" அவர் சொன்னார் : "கணினி முன்னால் உட்கார்ந்து அடித்தா நாவல் வந்துவிடும்." நான் யோசித்தேன். எப்படி அதுமாதிரி முடியும். ஒரு முறை அசோகமித்திரனைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவரும் அப்படித்தான் சொன்னார். இதெல்லாம் நான் யோசித்துக்கொண்டிருந்தேன். என்னால் சிறுகதைகள் எழுத முடிகிறது, கவிதைகள் எழுத முடிகிறது. ஏன் கட்டுரைகள் கூட எழுத முடிகிறது. ஆனால் நாவல்? நான் அசோகமித்திரன் நாவல்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன். என்னால் அதுமாதிரி ஒரு நாவல் கூட எழுத முடியாது. பா ராகவனின் பூனைக்கதையை எடுத்துப் படித்தேன். ஒரு பிட்டு கூட எழுத முடியாது. எனக்கு சில மாதங்களுக்கு முன் படித்த

முதல் 100 கவிஞர்களின் 100 கவிதைகள்

அழகியசிங்கர் மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் தொகுதி 1 புத்தகத்தை வரும் புத்தகக் காட்சிக்குக் கொண்டு வர உள்ளேன்.  நான் தேர்ந்தெடுத்தக் கவிஞர்களின் கவிதைகளின் லிஸ்ட் இங்கே.    இதைத் தொடர்ந்து தொகுதி 2 ம் கொண்டு வர உள்ளேன்.  இந்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த ஒழுங்கும் இல்லை.  ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது என்ன கவிதை என் மனதைக் கவருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.  பெரும்பாலும் புத்தகங்களிலிருந்து கவிதைகள் தேர்ந்தெடுத்துள்ளேன். லிஸ்ட்டைப் படிக்கவும். உள்ளே 1. புத்தர் அழுதார் - வெயில் 2. ஞானப்பூங்கோடதைக்கு வயது நாற்பது - கண்டராதித்தன் 3. ராஜன் ஆதித்யப்பன் கவிதை 4. புவொன்று - லாவண்யா சுந்தராஜன் 5. அக்டோபர் முதல் நாளில் - ந பெரியசாமி 6. பிரதிபலிப்பு - நாரணோ ஜெயராமன் 7. அரிய வாய்ப்பு - பழனிவேள் 8. பரம ரகசியம் - குவளைக் கண்ணன் 9. சுடர் பொம்மை - வேல்கண்ணன் 10. பிசகு - லக்ஷ்மி மணிவண்ணன் 11. கிணற்றரவு - ஜி எஸ் தயாளன் 12. முதல் முத்தம் - சுஜாதா செல்வராஜ் 13. அருமபுகள் - ராமலக்ஷ்மி 14. தலைப்பில்லாத கல்யாண்ஜி

பிறந்த தினத்தை முன்னிட்டு

அழகியசிங்கர் முதலில் மனதுக்குப் பிடித்தக் கவிதைகள் என்ற பெயரில் 'வெயில்' அவர்களின் 'புத்தர் அழுதார்' என்ற கவிதையை முகநூலில் வெளியிட்டபோது 100 கவிதைகள் அடங்கியத்  தொகுப்பொன்றை கொண்டு வருவேனென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  இதோ முதல் நூறு கவிதைகள் அடங்கியத் தொகுப்பு தயாராகிவிட்டது.  100வது கவிதையாக என் கவிதையைச் சேர்த்துள்ளேன். இன்று என் பிறந்தநாள் முன்னிட்டு இக் கவிதையைக் கொண்டு வருகிறேன்.  முதல் தொகுதிக்குப் பிறகு இரண்டாவது தொகுதி, மூன்றாவது தொகுதி என்று கொண்டு வர உள்ளேன்.  முதல் தொகுதியில் இடம்பெறாத கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலும் மூன்றாவது தொகுதியிலும் நிச்சயமாக இடம் பெறுவார்கள்.   யாரையும் புறகணிக்கும் நோக்கம் இல்லை.  மேலும் கவிதைத் தொகுதிகளிலிருந்துதான் கவிதைகள் தேர்ந்தெடுத்துள்ளேன்.   இந்தத் தொகுதிக்கு எந்த முன்னுரையும் எழுத உத்தேசம் இல்லை.  கவிதைகள்தான் முன்னுரை.   வேண்டுமென்றால் இந்தத் துண்டு அறிக்கையை முன்னுரையாக வெளியிடுகிறேன். மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 100 மின்சார வண்டி அழகியசிங்கர் கட்டையாய்க் குட்டைய நெட்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 99

அழகியசிங்கர்   ஈனிப்பு ரா ஸ்ரீனிவாஸன் கண்ணாடிப் பெட்டகத்துள் கண்ணை ஈர்த்தது விற்பனைக்கிருந்த வண்ண இனிப்புகள் - இனிப்பின் மணம் அழைத்தது போல வந்து சேர்ந்தன ஈக்களிரண்டு- முட்டி மோதி எட்டாத இனிப்பை ஏங்கி கண்ணாடிப் பெட்டகத்தின் மேல் ஒட்டிக் கொண்ட ஈக்களுக்கு - இனிப்பை நாடி இனிப்பை உண்டு இனிக்க இனிக்க இனிப்பிற்குள்ளேயே மரித்துக் கிடக்கும் உடன்பிறப்பு ஈக்கள் - கண்ணில் பட்டது - கருத்தில் படாதது. நன்றி :  கணத் தோற்றம் - கவிதைகள் - ரா ஸ்ரீனிவாஸன்  - விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 42 - வெளியான ஆண்டு : 2001 - விலை : ரூ.20.