Skip to main content

ரூ. 5000 பரிசு வேண்டாமா?



அழகியசிங்கர்



சில தினங்களாக நவீன விருட்சம் 98வது இதழை சிறிது சிறிதாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களுக்குள் எல்லோருக்கும் போய்விடும்.  அப்படியும் சில பேர்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.  இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் அழகியசிங்கருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது.  ஒரு நீளமான நோட்டில் எழுதி வைத்திருக்கும் முகவரிகளை கவரில் தானாகவே எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறார்.  டைப் அடித்து ஒட்டி அனுப்பலாம்.  அப்படி அனுப்பினால் நாம் நம் கையால் எழுதி அனுப்புகிற தன்மையை இழந்துவிடுவோம் என்கிறார்.  ஏன் என்றால் இப்போதெல்லாம் யாரும் பேனாவைப் பிடித்து எழுதுவதில்லை. இப்படி அவர் செய்து கொண்டிருக்கும் போதுதான் ஒன்று தோன்றியது.

1988ல் விருட்சம் இதழ் தோன்றியது.  இன்றுவரை 98வது இதழ் வரை வந்து விட்டது.  இது ஒரு காலாண்டு இதழ். உண்ûமாகப் பார்க்கப் போனால் 100வது இதழ் 25வது ஆண்டிலேயே வந்திருக்க வேண்டும். இயற்கை ஏற்படுத்திய சதியால் அப்படி எதுபும் நடக்காமல் போய்விட்டது.  

98 இதழ்களையும் யாராவது ஒரு வாசகர் வைத்திருப்பாரா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அப்படி யாராவது வைத்திருந்து என்னைச் சந்தித்தால் ரூ5000 பரிசு வழங்கப்படும்.  வருபவர்கள் அத்தனை இதழ்களையும் கொண்டு வந்து காட்ட வேண்டும்.  

இந்தப் பரிசு யாருக்கும் கிடைக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  
  

Comments

ஹ ர ணி said…
அன்புள்ள அழகிய சிங்கர் அவர்களுக்கு

வணக்கம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நவீன விருட்சத்தை வாசித்து வருகிறேன். விருட்சத்தில் என்னுடைய கவிதைகளும் வந்திருக்கின்றன. 100 இதழ்களை நோக்கி நகர்வது பெருமைக்குரியது. அத்தனையும் உங்களுக்கே. 98 வது இதழ் உங்களின் இந்த வயதிலும் தளராமல் புதுமைகளைத் தாங்கி வருவது பாராட்டிற்குரியதோடு வரலாற்றின் சிறந்த பதிவுமாகும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். சிற்றிதழ்களின் வரலாற்றில் நவீன விருட்சத்திற்கு ஒரு தனிப்பக்கம் உண்டு. அதற்கான எல்லாத் தகுதிகளையும் விருட்சம் பெற்றிருக்கிறது. உடல் நலனில் கவனம் வைத்து தொடர்ந்து செய்யுங்கள். வணக்கம். நன்றிகள்.