Skip to main content

மெட்டமார்ஃபஸிஸ்



எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.

சில நாட்கள் கழித்து
பின்னர் அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்

சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.
சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.

இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

Comments

பசுமைக்குள் விஷமேற பசுமை அச்சுறுத்தும் இனி பாம்பாக...
Egos Eno said…
Watch Sourashtra First Movie egos eno Trailer
Thank You
http://www.youtube.com/watch?v=x60jdgLve70
Anonymous said…
பச்சோந்தியிடம் பாம்பாகும் வித்தையை கற்றுக்கொள்வது சரிதான்.
பச்சோந்தியாக மாறும் வித்தையை மனிதர்களிடமிருந்துதான் கற்கவேண்டியிருக்கும். :)
The poem is brilliant. Just imagine, a snake is curling below the bed we sleep on...Chilling Imagery