Skip to main content

பல்லி




பாத்ரூமில்
ஒரு பல்லி எதிர்ப்பட்டது
குட்டிப் பல்லி
துண்டை எடுத்துக்கொண்டு
போன எனக்கு
அதன்மீது அருவெறுப்பு
நான் அதையே
பார்த்துக்கொண்டிருக்க
அது
இங்கும் அங்கும்
தலைதெறிக்க ஓடியது
வேடிக்கை என்னவென்றால்
அது என்மீது
விழுந்துவிடப் போகிறதென்று
நடுங்கிக் கொண்டிருந்தேன்
என் பயத்தின்
எதிரொலியாய் அது
ஓடி ஓடிப் போனது
குட்டி பாத்ரூமில்
அதன் எல்லை
பரந்து விரிந்திருக்கிறது
என் எல்லை
குறுகலாகத் தெரிகிறது

Comments

பயந்து விழுகிற பல்லியின் பலன் நம்மிலும் பயமாய் மாறுகிறது...
hemgan said…
பல்லி விழுந்த பலன் பார்க்க
பஞ்சாங்கத்தை தேட வேண்டும்
பல்லி கதவோட்டை வழியாக
வெளியே போய்
என் பயத்தை போக்கியபிறகு