Skip to main content

*27 ம் 67 ம்





27  வயது இளைஞனும்
67  வயது முதியவரும்
இணைந்து
நடை பயிற்சி செய்கின்றனர்

நடைவேகம் கூடக்கூட
27  க்கு மூச்சிறைக்கிறது

67  ன்வேகம்,
27 -ஐவிடக் கூடுகிறது
27  ,
67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது

27  , 67- ஆகவும்
67  , 27- ஆகவும்
வீடு திரும்புகிறது

Comments

உண்மைதான்... பழைய ஆரோக்கியம் பாய்ந்து செல்கிறது.. புதிய ஆரோக்கியம் பொசுங்கிப் போகிறது