Skip to main content

சிறுமழை -----------




முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் சிறுமி
ஓய்ந்து முடிந்த
மழை முத்துக்கள் சொட்டும்
பேருந்தின் ஜன்னல் கம்பிகளை
விரலால் தொட்டு தொட்டு
வெளியே சுண்டுகிறாள்.
சிறுமழையொன்று பெய்கிறது.



Comments

மதுரையில் மீனாட்சி புத்தகநிலைய அலுவலகத்தில் மாலை 7 மணிக்குமேல் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. ‘பிடி அவல்’ என்று பெயர் என்பதாக என் நினைவு. கல்லூரிப் பேராசிரியர்கள் மதுரைவாழ் எழுத்தாளர்கள் கூடியிருந்தனர். திருச்சியிலிருந்து மதுரைக்கு அலுவல் நிமித்தம் வந்திருந்த நானும் கலந்து கொண்டேன். அனைவரும் தரையில். ஜெயகாந்தன் எழுதி அப்பொழுது வெளிவந்திருந்த நாவல் பற்றியவிமர்சனக் கூட்டம். கூட்டம் முடிந்தது.கூட்ட அமைப்பாளர் (செல்லப்பன் என்று நினைக்கிறேன்) ஒரு துண்டை விரித்தார். வந்திருந்த அனைவரும் தங்கள் பர்சைத்திறந்தனர். சிலர் சில்லரை ட்தூவினர். சிலர் நோட்டுக்களைப் போட்டனர். அமைப்பாளர் எண்ணி மொத்த வசூல் .....ரூபாய் ....பைசா என்று சொல்லி, போன கூட்டத்தின் முடிவில் இவ்வளவுபாக்கி இந்தக் கூட்டத்தின் வசூலுடன் சேர்த்து மொத்தம் இவ்வளவு என்று கணக்கு ஒப்புவித்தார். கூட்டம் கலைந்தது.
இப்படி முயன்று பாருங்களேன்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
G.S.Dhayalan said…
விநாயக முருகனின் கவிதைகள் முடியும் பொது தொடங்கும் தன்மையை கொண்டுள்ளன. சிற்சிறு சித்திரங்களில் விரிகின்றன பெரும் அனுபவங்கள்