Skip to main content

அபார்ட்மெண்ட் பித்ருக்கள்



சற்று முன்தான்
சொத்தென்று விழுந்தது
மின்சாரம் தாக்கி


அடிக்கடி பார்க்கும் சாவுதான்

இரண்டு நாளுக்குப் பிறகு

மீண்டும் ஒரு பெரிய காக்கை


இறந்துக் கொண்டிருக்கிறது

அலகு திறப்பதும் மூடுவதுமாக

இறுதி கணங்களின் துடிப்பு


குச்சி கால்களிலும் இறக்கைகளும்

குறுக்கும் நெடுக்குமாய்

படபடத்துப் பறந்தபடி

அபார்ட்மெண்ட் டிரான்ஸ்பார்மர் மேல்

சக காக்கைகள் ஓலமிட்டு

பார்த்துக்கொண்டிருக்கிறது


ஒரு காக்கை காக்கையாக சாவதை

இவர்களுடன்

ஏழு மாடி ஜன்னல்களிலும்


பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

பித்ருக்களின் உறவினர்களும்

காக்கை காக்கையாக

சாவதை

Comments

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது, வாழ்த்துக்கள் ரவிஷங்கர்.
கவிதை ரொம்ப நல்ல இருக்கு ரவிசங்கர், வாழ்த்துக்கள்.
Unknown said…
என் கவிதையைப் பிரசுரித்த நவீன விருட்சத்துக்கு நன்றி.
Unknown said…
சார்! அபார்ட்மெண்ட் என்பதில் “ட்” விட்டு போய் விட்டது. தயவு செய்து
‘ட்” போட்டு விடவும்.

பிழைக்கு மன்னிக்கவும்.

நன்றி.
நல்லா இருக்கு ரவி. வாழ்த்துக்கள்.
Anonymous said…
நன்றாக இருக்கு ரவி. வாழ்த்துக்கள்.
ட் சேர்த்துவிட்டேன், ரவிசங்கர்.

அழகியசிங்கர்
ரவிஷங்கர், இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் புடிச்சுருக்குது. வாழ்த்துகள்.
Chandran Rama said…
Mr. Ravisankar,
I really enjoyed your poetry.. simple verses..
with greater depth... keep writing..
I am very sure you have a bright future..
Wish you the best..