1. வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்
2.வெகுநாள் மீனவன்
தொடர்ந்த வேட்டையில்
மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்
நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்
3.உனக்கான என் அன்பு
உணரப்படாமலே
புறக்கணிக்கப் பட்டுள்ளது
பிரித்ததும் கசக்கப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல
4.உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள்
Comments
நான் தமிழ் படிப்பது இணையம் வாயிலாக என்றாலும், உங்களைபோன்றோர் கவிதைகளில் நான் ஆழ்ந்து அனுபவிப்பது அருமை.....
நீங்கள் எழுதுவது அருமை.
ஆமாம் கடைசி கவிதைல ( பா? ) எதோ விடுப்பட்டது போல் உள்ளது... அது தான் உங்கள் மன தோற்றமா?