Skip to main content

கோவில் யானை



கோவிலில்


எப்போதும் பார்க்க முடிகிறது


அந்த யானையை



காசு தந்தால் பாகனுக்கு


தின்பண்டங்கள் அதற்கு


எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க


தவறியதில்லை



கழுத்து மணியை ஆட்டி


தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது


பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு


பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது



தொலைதொடர்புகளற்ற அதன் உலகில்


காட்டுலா குறித்த ஏக்கங்களோ


பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த


கவலைகளோ


இல்லாதிருக்கலாம்


முதன்முதலாய் இன்னொரு யானையை


முகாமில் சந்திக்கும் வேளை


என்ன சொல்ல எத்தனிக்கும்


கோவில் யானை?


Comments

வித்தியாசமான தளத்தில் சுழல்கிறது உங்கள் கவிதை. மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி சேரல்
கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் இதழுக்கு நன்றி