Skip to main content

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன் - I

அழகியசிங்கர்




இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று ‘கே.பாரதி‘யின் ‘பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு’ என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை.
நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். இதை முறையான கதை முறையற்ற கதை என்று பிரிவுகளில் கொண்டு வரலாமென்று நினைக்கிறேன்.
பாரதி கதை லீனியர் கதை. கோமதியம்மாளிடமிருந்து கதை ஆரம்பமாகிறது. லீனியர் கதையில் ஒரு ஆரம்பம், ஒரு தொடுப்பு, ஒரு முடிவு என்று இருக்கும்.
முன்பின் தெரியாத ஒரு விருத்நாளிக்காக நிறையத் திட்டமிட வேண்டியிருக்கிறது. கோமதி அம்மாள் தன் பெண்ணையும் பேரனையும் பார்க்க வந்திருக்கிறாள்.
பக்கத்துவீட்டில்தான் அவளுடைய பெண் புவனாவின் குடும்பம் இருக்கிறது. யாருக்கும் அவள் வந்ததைத் தெரியக்கூடாது ரொம்ப ஜாக்கிரதையான திட்டமிடுதல் இது.
ஏன்?
‘ஒற்றை மனிதரின் கண்பார்வைக்கு, எப்படியெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் ஏதோ தப்பு காரியம் செய்வதுபோல்’. யார் அந்த ஒற்றை மனிதன். புவனாவின் கணவன்.
பக்கத்து வீடாக இருந்தாலும் கதைசொல்லிக்கு அதிகப் பழக்கமில்லை. வீடு, வங்கி வேலை, சிவா, ஸ்கைப்பில் வரும் கணவர் என்று அத்தனையும் சமாளித்துக் கொண்டிருப்பவள் கதைசொல்லி.
நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் வந்து நின்ற இளைஞனை அடையாளம் தெரியாமல் விழித்தாள் கதைசொல்லி.
அப்போதுதான் தெரிந்தது. கோமதியம்மாளûப் பற்றி. பெண் புவனாவையும், பேரனையும் அவள் கணவனுக்குத் தெரியாமல் வந்திருக்கிறாள் என்று. அதற்கு அடைக்கலமாக கதைசொல்லியின் வீடு. கோமதியம்மாள் புவனாவைப் பார்த்து மூன்று வருடம் மேல் ஆகிறது.
துணிப்பையைத் துழாவி ஒரு கட்டு அப்பளத்தையும், சிறிய சம்புடத்தையும் எடுத்தாள் கோமதியம்மாள். கோமதியம்மாள் கொடுத்ததை மேல் எடுத்து வைத்தாள் திரட்டுப்பால். இரட்டை அப்பளாம். இவற்றை பூவனாக்கு கொடுக்க முடியாது. அவள் கணவன் கண்டுபிடித்து விடுவான் என்ற பயம் கோமதி அம்மாளுக்கு.
கோமதி அம்மாள் சொல்கிறாள். ‘மூணு வருஷத்துக்கு முன்னாலே குரோம்பேட்டையில் ஒரு வீட்ல குடியிருந்தா. அங்கேயும் அக்கம்பக்கத்து ஒத்தாசையில் போய் பார்த்தேன். பொறுக்காதே அவனுக்கு. உடனே வீட்டை மாத்திட்டான். அந்தப் பிள்ளை ரமேஷ் இதுவரைக்கும் ஒன்பது ஸ்கூல் மாறியிருக்கான்னா பார்த்துக்கோயன்.’
புவனாவையும் ரமேஷையும் பாட்டி கோமதியம்மாளைச் சந்திக்க ஏற்பாடு செய்து விட்டு, கதைசொல்லி மூன்று மணிக்கு வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
அவர்களைச் சந்திக்க வைத்ததில் கதைசொல்லிக்கு ஒரு திருப்தி.
மூன்று மணிக்குத் திரும்பி வரும்போது கோமதியம்மாள் மட்டும் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள். எல்லாத் திட்டமும் பாழாகி விட்டது. அவள் கணவன் ஆபிஸ் போகாமல் திரும்பி வந்ததால் இந்தப் பிரச்சினை.
சரியாக பதினைந்து நாட்களில் பின் வீட்டு ஜன்னல் வெறிச்சிட்டது என்று முடிக்கிறார் கதாசரியை.
இதுதான் கதை. ஒரு நிகழ்ச்சி நடக்குமென்று ஏற்பாடு செய்த பின்னே நடக்காமல் போய்விட்டது. என்னதான் இருந்தாலும் இப்பாடியெல்லாமா ஒரு மனுஷன் இருப்பான் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அமுதசுரபியில் 2014ல் வெளிவந்த கதை. இது ஒரு முறையான கதை. இதன் முடிவை எப்படி வேண்டுமானாலும் மாற்றி இருக்கலாம்.
புவனாவும், பேரனையும் பார்த்துவிட்டு கோமதி அம்மாள் நிம்மதியாகப் போனதாகக் கூட முடித்திருக்கலாம். முறையான கதையில் முடிவை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம்.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 12 செப்டம்பர் 2021 வெளி வந்தது)
(இன்னும் வரும்...)
May be an illustration
You and Paal Nilavan
Like
Comment
Share

0

Comments