அழகியசிங்கர்
காலை நேரத்தில்
பாதை ஓரத்தில் பூத்திருக்கும்
செவ்வரளியைப் பறித்து
மனைவியிடம் கொடுக்கிறேன்
பூக்களை பூசைக்கு வைத்துக்கொண்டிருக்கிறாள்
பூக்களை இழந்த செடி
ஏனோ சோகத்தை உதிர்க்கிறது
பூக்களைப் பறித்த கைவிரல்
கசப்பை உணர்கிறது.
பீனிக்ஸ்
24.04.2019 - புதன்
காலை : 9.25
Comments