Skip to main content

துளி : 41 - ஒரு சிறிய ஆவணப்படம்


துளி : 41 - ஒரு சிறிய ஆவணப்படம்

அழகியசிங்கர்




7ஆம் தேதி காலையில் 9 மணிக்குக் கிளம்பி விட்டோம்.  செடோனோ என்ற இடத்திற்கு.  அரவிந்த் கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.  கையில் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.  சுற்றிலும் மலை. செங்கல் நிறத்தில் தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது. பல மணிநேரம் காரில் பயணம். ஒரு இடத்தில் கற்களின் மீது கால் வைத்து வைத்து நடக்க   வேண்டியிருந்தது.  அப்படியே நடந்து சென்று பார்த்தபோது சலனமில்லாமல் ஆறு போய்க்கொண்டிருக்கிறது.  அதில் பலரி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.   நான் எல்லாவற்றையும் கையில் வைத்திருந்த சோனி காமெரா மூலம் படம் எடுத்துக்கொண்டு வந்தேன்.  ஆனால் காமெராவிலிருது கணினிக்கு மாற்றும் சிறிய ஒயரை ராகவன் காலனியில் விட்டுவிட்டு வந்தேன்.  என்ன செய்வதென்று தெரியவில்லை.  இங்கே அதுமாதிரியான ஒயர் கிடைக்குமா என்ற கேள்வி கடந்த 1 மாதத்திற்குமேல் என்னை குடைந்துகொண்டிருந்தது.  சென்னையில் இதுமாதிரி நிலமை வந்தால், அங்கும் இங்கும் ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  ஒரு வழியாக என் பையன் (அரவிந்த்) வாங்கிக்கொண்டு வந்தேன்.  இதோ காமெராவிலிருந்து ஒரு காட்சியை உங்களுக்கு ஒளிபரப்புகிறேன். வீட்டிற்குத் திரும்பும்போது மணி 9.30 ஆகிவிட்டது.  

Comments