Skip to main content

Posts

Showing posts from February, 2019

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 108

அழகியசிங்கர்   வேணு வேட்ராயன் கவிதை  யாரையும் குறை சொல்வதற்கில்லை சம்பவங்களால் ஆனது வாழ்வெனில் எச்சம்பவத்தின் தலைமேல் எவ்வளவு பொறுப்பை சுமத்துவது? எக்கணத்தில் எத்திசையில் எடுத்துவைத்த காலடி என்னை இங்கு கொண்டு சேர்த்தது? பிரிந்தும் சேர்ந்தும் மாறிமயங்கும் வண்ணப்பிரிகைகளான உறவுகளில் எந்நிறத்தை தொட்டெடுத்து பூசிக்கொள்வது? இயல்பென்றும் இருப்பென்றும் மெய்யென்றும் பொய்யென்றும் அறிந்ததும் அறியவொண்ணாததுமாய் பெருமரமாய் கிளைத்து பரவி விழுதில் வேரூன்றிக் கிடக்கிறது அது. சிறுமனக்கூட்டில் கூச்சலிட்டபடி ஆயிரம் அலகுகளால் தீராத எண்ணங்களை தின்றுகொண்டிருக்கின்றன குருவிக்குஞ்சுகள். மரக்கிளையில் தனித்துவிடப்பட்ட பறவைக்கூடொன்று தரையில் விழுகிறது சத்தமின்றி. நன்றி : அலகில் அலகு - வேணு வேட்ராயன் - விருட்சம், சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 - 9444113205 - பக் : 82 - விலை : ரூ.60

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 107

அழகியசிங்கர்   ப்ரியாராஜ் கவிதை  சிறுவயதில் கனவில் நான் வந்தியத்தேவன்! குதிரையையும், குந்தவியையும் தேடிக் களைத்திருந்தேன்! பின்னாளில் நான் பாரதியாய் மீசையுடன் மாறி கவி எழுதி தோற்றிருக்கிறேன்! பாம்பு சட்டையை உரிப்பதுபோல நான் அவ்வப்போது, சிவாஜியாய், ரஜினியாய், கமலாய் மாறி கனவில் நாயகிகளைப் புணர்ந்திருக்கிறேன்! ஆனாலும், இப்போதெல்லாம் நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன்! முடியவில்லை! பழக்க தோஷம்! நன்றி : இன்னொரு முகம் - ப்ரியாராஜ் - வெளியீடு : சந்தியா பதிப்பகம், ப எண் : 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 - பக் : 160 - விலை : ரூ.80 - வெளியான ஆண்டு : 2009 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 106

அழகியசிங்கர்   அவன் ரமேஷ் பிரேதன் வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான் குறுக்காக ஒரு வெள்ளைப் பசு சாலையைக் கடக்கிறது மடி கனக்கிறது உணவகத்தின் வாசலில் வைத்துக் கறக்க சைக்கிள் கேரியரில் வைக்கோல் திணித்த கன்றோடு அவன் வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான் சாலையைக் குறுக்காகக் கடக்கிறான் பசுவைப் பின்தொடர்ந்து நன்றி : சாராயக் கடை - ரமேஷ் பிரேதன் - வெளியீடு ; உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 - பக்கங்கள் :72 - விலை : ரூ.40 - வெளியான ஆண்டு : டிசம்பர் 2008.

துளி : 31 - சில தினங்களுக்கு முன்னால்..

அழகியசிங்கர் சில தினங்களுக்கு முன்னால், நான் குறும்படம் எடுத்தேன். அதற்காக நான் ஒரு பைசாவும் செலவு செய்யவில்லை. அப்படத்தில் நடித்தவர் என் நண்பர். சத்யஜித்ரேயின் டூ என்ற படத்தைப் பார்த்தவுடன் எனக்கும் ஒரு குறும்படம் எடுக்க வேண்டுமென்று தோன்றியது. என்னுடைய சோனி டிஜிட்டல் காமெராவை எடுத்துக்கொண்டு படம் எடுத்தேன். அந்தப் படம் 11 நிமிடங்களில் முடிந்து விட்டது. அதில் வசனம் எதுவுமில்லை. படத்தின் பெயர் சைலன்ஸ். ஆர்.கே. சிறப்பாக நடித்தார். ஆனால் இந்தக் குறும்படத்தை இப்போது வெளியிட முடியாது. எடிட் செய்யவேண்டும். டைட்டில் கொண்டு வர வேண்டும். படத்தில் மியூசிக்கைச் சேர்க்க வேண்டும். அதனால் இதை எப்படி சரிசெய்வது என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் ஒரு காட்சியை இங்கே தருகிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 105

அழகியசிங்கர்   பிளாஸ்டிக்கை சுவைத்தலும் சுவை கூட்டல் உத்திகளும் றாம் சந்தோஷ் பிளாஸ்டிக் சுவைப்பதை நான் முதலில் ஒரு கழுதையிடமும் பிறகு இரண்டு நாட்டு, ஜெர்ஸி மாடுகளிடமும் கற்றுக் கொண்டேன் அவற்றின் பற்களைப் போன்றே நல்ல திடமானவைகளுக்கு நாம் நம் கடைவாய்ப் பற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாயினுள் திணித்து மெல்லும்போது சுவிங்கம் போல் ஒட்டாது, இம்சிக்காது; கரைந்தும் போகாது; காசும் மிச்சம். நல்ல சுவைக்கு ஒன்று : உங்கள் எச்சில் சுவையாக இருக்க வேண்டும். அல்லது : பிளாஸ்டிக் மண்ணிடைப்பட்டதாய் இருக்க வேண்டும். நன்றி : சொல் வெளித் தவளைகள்  - றாம் சந்தோஷ் - வெளடியீடு : சொன்மை பதிப்பகம், 25 முதல் தளம், எம்.எல்.ஏ அலுவலகம் எதிரில், ஜின்னா ரோடு, காதர் பேட்டை, வாணியம்பாடி 635 751   பக்கங்கள் : 100 - விலை : 110 

துளி : 30 - 108வது இதழ் விருட்சம் வந்துவிட்டது

அழகியசிங்கர் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன், விருட்சம் 108வது இதழ் கொண்டு வர வேண்டியதாக இருந்தது.  டிசம்பர்- ஜனவரி-பிப்ரவரி வர வேண்டிய இதழ்.  ஆனால் ஜனவரி புத்தகக் காட்சி படுத்தியப் பாட்டில் எந்தப் பத்திரிசையும் புத்தகமும் கொண்டு வர வேண்டாமென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  உண்மையில் பிப்பரவரியில் வராமல் மார்ச்சு அல்லது ஏப்ரல் கூடப் போயிருக்கும்.  ஆனால் என் புதல்வனின் வற்புறுத்தலுக்கு இணங்க நானும் மனைவியும் அமெரிக்கா செல்ல வேண்டும்.  அதுவும் பிப்பரவரி மாதம் 27ஆம் தேதி கிளம்புகிறோம்.  பிப்பரவரி மாதம் விருட்சம் முடிக்காவிட்டால் இன்னும் ஆறுமாதம் தள்ளிப் போய்விடும்.  ஒரு தம் பிடித்து விருட்சம் 108வது இதழை பிப்பரவரி மாதமே கொண்டு வந்துவிட்டேன்.   இதோ எல்லோருக்கும் அனுப்பவும் தயாராகிவிட்டேன்.  108வது இதழில் இன்னொரு விசேஷம்.  மொத்தப் பக்கங்களும் 108.  பொதுவாக நான் 80 பக்கங்களுக்கு  மேல் பத்திரிகையைக் கொண்டு வர மாட்டேன்.  இந்த இதழை 108 பக்கங்கள் கொண்ட இதழாகக் கொண்டு வந்துவிட்டேன்.  வழக்கம்போல் யார்...

துளி : 29- விருட்சம் நடத்தும் கூட்டங்கள்

அழகியசிங்கர் கடந்த இரண்டாண்டுகளாக விருட்சம் இலச்கியச் சந்திப்புகளை மூகாம்பிகை காம்பளெக்ஸில் நடத்தி வருகிறேன்.  கூட்டம் ஆரம்பிக்கும்போது ஏதுமாதிரியான கூட்டம் என்ற எண்ணம் இல்லாமலிருந்தேன்.  முதல் கூட்டத்தில் ஜானகிராமனைக் குறித்து திரூப்பூர் கிருஷ்ணன் பேசியவுடன் கூட்டம் எப்படி நடத்த வேண்டும் என்பது புரிந்தது. ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் சொல்வது அல்லது வாசகர் சொல்வது என்பதுதான் கூட்டத்தின் தன்மை என்பது புரிந்துவிட்டது. இக் கூட்த்தில் பேசுவதை ஆடியோவோ வீடியோவோ எடுத்து அதை எல்லோருக்கும் தெரிவிக்கிறேன்.  இந்த மாதம் ஆர் வெங்கடேஷ் ஆதவன் குறித்துப் பேசியது முக்கியமானதாகக் கருதுகிறேன்.  பல எழுத்தாளர்களை நாம் மறந்துகொண்டே வருகிறோம்.  அதேபோல் ஆதவனையும் மறந்து விடுவோம்.  ஆதவன் பற்றி வெங்கடேஷ் பேச ஏற்பாடு செய்தபிறகு நானும் ஆதவன் சிறுகதைகள் தொகுதியை எடுத்து கதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.  அப்பர் பெர்த் என்ற ஆதவன் கதையை இன்றுதான் படித்து முடித்தேன்.  ஏற்கனவே படித்ததுதான்.  19.09.2011 இந்தக் கதையைப் படித்திருக்கிறேன். ...

சனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குறித்து ஆர்.வெங்கடேஷ் உரை ஆற்றியது - கடைசிப் பகுதி

அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த மாதம் ஆதவன் குறித்து.

சனிக்கிழமை (16.02.2019) அன்று எழுத்தாளர் ஆதவன் குறித்து ஆர்.வெங்கடேஷ் உரை ஆற்றியது - முதல் பகுதி

அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பு சார்பில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் ஒரு எழுத்தாளரைப் பற்றி உரை நிகழ்த்துவது வழக்கம்.  இந்த மாதம் ஆதவன் குறித்து.

காதலர் தினம் என்றால் என்ன.......

அழகியசிங்கர் நான் இதுவரை காதலர் தினத்தன்று எந்தப் பெண்ணையும் காதலிக்க வேண்டுமென்று நினைத்ததில்லை காதல் என்பதே ஒரு அபத்தமென்றும் அந்த அபத்தத்திலும் அபத்தம் காதலர் தினம் என்று நினைப்பதுண்டு நான் நடமாடும் பூங்காவில் தினமும் காலையில் ஒரு ஜோடி கைக்கோர்த்து தங்களை மறந்து நடந்தபடியே செல்வார்கள் அவர்கள் இருவரும் காதலர்கள் என்றாலும் அந்தப் பெண் முகம் மட்டும் தினம் தினம் பார்க்கும்போது பூரணமாக ஒளிர்வதைக் காண்கிறேன். பின் நான் அவர்களைப் பார்க்காத மாதிரி நடந்து சென்று விடுவேன்.

நீங்களும் படிக்கலாம் - 46

நீங்களும் படிக்கலாம் - 46 சாமானிய மனிதனின் எதிர்க்குரல் அழகியசிங்கர் வழக்கமாக நான் புத்தகங்கள் அதிகமாகப் படிக்கத் தேர்ந்தெடுக்கும் இடம். ரயிலில் பயணம் செய்யும்போதுதான்.  அதனாலேயே பகலில் ஒரு இடத்திற்குப் பயணம் செய்வதையே விரும்புவேன்.  அப்படிப் பயணிக்கும்போது கையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.   இந்த முறை மயிலாடுதுறைக்குப் போனபோது விஜய் மகேந்திரனின் üசாமானிய மனிதரின் எதிர்க்குரல்,ý என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனேன்.  முகநூலில் எழுதிய விபரங்களின் ஒரு பகுதி, பத்தரிகையில் எழுதிய புத்தக மதிப்புரை என்று எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல.  உண்மையில் ஒவ்வொரு முகநூலிலிருந்து புத்தகமாக வரும்போது அந்தப் பகுதியை எழுதிய படைப்பாளியைத் தவிர்த்து தொகுப்பதற்கு யாரையாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.  விஜய் மகேந்திரனே இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும் சொலல வேண்டுமென்ற எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டிருக்கும்.  இதைத் தவறு என்று சொல்ல வரவில்லை. முதலில் இந்தப் புத்தகத்தின் தலைப...
விருட்சம் இலக்கியச் சந்திப்பு -  46         தலைப்பு  :   எழுத்தாளர் ஆதவனும் நானும் சிறப்புரை :    ஆர் வெங்கடேஷ் இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 16.02.2019 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு  : பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர் அன்புடன் அழகியசிங்கர் 9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 104

அழகியசிங்கர்   வாழ்க்கை சுகந்தி சுப்ரமணியன் வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா? நான் கேட்டேன் அந்தப் பெண்களை. இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி. எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் வாழ்கிறேன் என்றாள் மற்றவள். ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி. வெள்ளிக்கிழமையும், வியாழனும் விரதமிருக்கிறேன் அம்மனுக்கு, தீரும் என் கவலைகள் என்றாள் மற்றுமொருத்தி. இவர்களின் அனுபவங்கள் என்னுள் அடங்க மறுத்து அதிர மௌனமானேன். வாழ்வின் தாக்குதல்கள் புரியாமலும் வலுவுடன் எதிர்க்க முடியாமலும் ஓய்ந்துபோன கால்கள் நடக்கின்றன மெதுவாய் தலைகள் நிலத்தைப் பார்த்தபடி நிமிர முடியாமல். நன்றி : சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் - டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர் மேற்கு, சென்னை 600 078 - தொலை பேசி : 044-65157525 - பக்கங்கள் : 350 - விலை : 330 

துளி : 28 - குவிகம் இல்லத்தில் கூட்டம்

அழகியசிங்கர் ஒவ்வொரு வாரமும் குவிகம் இல்லத்தில் அளவளாவல் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருபவர்கள் கிருபானந்தனும், சுந்தர்ராஜன் என்ற நண்பர்கள்.  இந்த மாதம் 3 ஆம் தேதி கிருபானந்தன் அமெரிக்கா சென்று விட்டார்.  போகும்போது வரும் பத்தாம் தேதி ஒரு கூட்டம் நடத்த என்னிடம் கேட்டுக்கொண்டார்.  ஏற்கனவே அமெரிக்கா சென்று திரும்பிய சுந்தர்ராஜன் சென்னையில் இந்த வாரம் இல்லை என்பதால் நான் பொறுப்பேற்றுக்கொண்டு கவிஞர்கள் கவிதைகள் வாசிக்கும் கூட்டமொன்றை நடத்திúன்ன.  இக் கூட்டத்தில் எல்லாவித கவிஞர்களையும் கூப்பிட்டுப் பேச முயற்சி செய்தேன்.  அதில் ýஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது.  நான் மரபுக் கவிதைகளிலிருந்தும் ஹைக்கூ கவிதைகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டாலும், அப் பிரிவுகளில் என்ன மாதிரியான கவிதைகள் வாசிக்கப் படுகின்றன என்ற எண்ணமும் என்னிடம் தோன்றாமல் இல்லை. நான் எதிர்பார்த்தபடியே நான்கந்து போர்கள்தான் கவிதைகள் வாசித்தார்கள்.  முதலில் ஒவ்வொருவரும் ஒரு கவிதை வாசித்தோம்.  முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனித்தேன்.  கவிதை வாசிக்க வந்த பானுமதி அ...

துளி : 27 - இன்றைய இந்து தமிழ் திசையில்

அழகியசிங்கர் 44 ஆண்டுகள் 306 கவிதைகள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழ் கிசையில் என் கவிதைத் தொகுதியைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  இந்தக் குறிப்பை வெளியிட்ட இந்துவிற்கு என் நன்றி உரித்தாகும்.  இந்துவில் பிரசுரிக்கப்பட்ட குறிப்புகளை இங்கு தருகிறேன்.  'தமிழின் மூத்த எழுத்தாளர்கள், நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் என இரண்டு தலைமுறைகளுக்கும் இலக்கியப் பாலமாக 'நவீன விருட்சம்' 'இதழை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகிறார் அழகியசிங்கர்.   சமீபத்தில், தனது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்ட அழகியசிங்கர், அடுத்து தனது கவிதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை 306 கவிதைகளை எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்ட ஆண்டுகள் 44. சொந்தமாக இலக்கிய இதழ் நடத்தியும் இவ்வளவு கவிதைகள்தான் எழுதியிருக்கிறார் என்பதே இந்தக் காலத்தில் ஆச்சர்ய்மான செய்திதான்.' - தொகுப்பு : மானா பாஸ்கரன், மு.முருகேஷ். 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 103

அழகியசிங்கர்  அணு முட்டை மாலதி மைத்ரி ஒரு குடம் நீரை ஒரு கூடை மீனை ஒரு மூட்டை தானியத்தை ஒரு கட்டு புல்லை ஒரு சுமை விறகை சுமப்பது போல் அவள் கர்வத்துடன் உலகைச் சுமந்தலைந்தாள் பெரிய தலையுடன் ஒளிரும் வால் நட்சத்திரமாய் வசீகரமாய் இருந்தாள் தன் குஞ்சுக்கு இரையூட்டும் பறவையென உலகை ஊட்டிக் காத்தாள் ராட்சஸப் பறவையாய் வளர்ந்த அது அவள் தலைமேல் அணுவுலையை முட்டையிட்டு அடைக்காக்கிறது. நன்றி :  முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை - மாலதி மைத்ரி - பக்கங்கள் : 92 - விலை : ரூ.90 - அணங்கு பெண்ணியப் பதிப்பகம், 3 முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110 - பேசி : 998454175, 9599329181

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...38

நானும் செ ன்னைப் புத்தகக் காட்சியும் ...38 அழகியசிங்கர்   காலச்சுவடிலிருந்து ஞானக்கூத்தன் கவிதைகள் முழுத் தொகுதி வாங்கியபின் இன்னும் சில புத்தகங்களையும் காலச்சுவடில் வாங்கினேன்.  சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.  இன்னொரு புத்தகம் செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993.  மூன்றாவதாக நான் வாங்கியப் புத்தகம் பா வெங்கடேசனின் வாராணசி (மயக்க நிலைத் தோற்றங்கள்) என்ற புத்தகம். இங்கு ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுவது மேம்போக்கான நிலையில்தான்.  ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு தோன்றுவதை எழுதுகிறேன். ஆனால் ஒரு புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும்.  புத்தகம் போதனையைப் புகட்டுகிறதா? இல்லை எழுதுபவரின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.   கதைகளும் நானும் என்ற தலைப்பில் அம்பை இப்படி எழுதி உள்ளார்: üமேகங்கள் பொங்கி எழுந்து எழுதச் சொன்னதாயும் காலையில் சன்னலைத் திறந்ததும் பறவைகளாய்க் கதைகள் வந்ததாயும் சில எழுத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள்.  அவர்கள் ஆண் எழுத்தாளர்...

எறும்பும் புறாவும்...

எறும்பும் புறாவும்... அழகியசிங்கர் என் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பழைய பேப்பர் கடை இருக்கிறது. அங்கு சில வினோதமான புத்தகங்கள் கிடைக்கும்.  அப்படி ஒரு புத்தகம்தான் லேவ் தல்ஸ்தோய்யின் எறும்பும் புறாவும் என்ற புத்தகம்.  இது ஒரு சிறார் புத்தகம்.  இக் கதைகளில் நீதி நேரிடையாக போதிக்கப்படவில்லை.   நீதி மறைமுகமாகப் புகட்டப் படுகிறது.  ஒவ்வொருவரும் இக் கதையை வாசிக்கும்போது அது தெரியப்படுத்தும் வாழ்க்கை உண்மையை உணர்ந்து கொள்ள இயலும்.  இதில் இருந்து ஒரு கதையை இங்கு அளிக்க விரும்புகிறேன். ஆண் குதிரையும் பெண் குதிரையும் பகலும் இரவும் புல்வெளியில் மேய்ந்த பெண் குதி ரை உழவில்லை. ஆனால் ஆண் குதிரை இரவில் மட்டும் மேய்ந்து பகலில் உழுதது. ஆகவே பெண் குதிரை அதனிடம் சொன்னது: ''என் நீ உழுகிறாய்? உன்னிடத்தில் நானாக (இருந்தால் போகவே மாட்டேன். அவன் என்னைச் சாட்டையால் அடிப்பான் என்றால் நானோ அவனைத் திரும்ப உதைப்பேன்.'' மறுநாள் ஆண் குதிரை பெண் குதிரை சொன்னது போலச் செய்தது. அது கீழ்ப்படியாமல் போய்விட்டதைக் கண்ட அதனது எசமானன் அதற்குப் பதிலா...

இந்த மாத தீராநதியில் என் கதை.....

அழகியசிங்கர் கடந்த ஒரு வருடமாக தீராநதியில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  வழக்கத்துக்கு மாறாக கட்டுரைக்குப் பதில் üதிரும்பவும்ý என்ற சிறுகதை அனுப்பியிருந்தேன்.  இந்த மாத தீராநதி இதழில் வெளிவந்திருக்கிறது.  அவசியம் வாசிக்கவும்.  சிறுகதைகள் சிறப்பிதழ் மாதிரி அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் தீராநதியில் வெளிவந்துள்ளன. நன்றி தீராநதிக்கு.