Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 101

அழகியசிங்கர்  


101)  பசுவும் கன்றும்


கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை



தோட்டத்தில் மேயுது
வெள்ளைப் பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக் குட்டி

அம்மா என்குது
வெள்ளைப் பசு -உடன்
அண்டையினல் ஓடுது
கன்றுக் குட்டி

நாவால் நக்குது
வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது
கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது
வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக் குட்டி


நன்றி : மலரும் மாலையும் - கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை - பூம்புகார் பதிப்பகம், 127 பிரகாசம் சாலை, சென்னை 600 108 - தொலை பேசி : 044-25267543 - பக்கம் : 286- விலை : 120

Comments