Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...21

அழகியசிங்கர்



இந்த முறை புத்தகக் காட்சியில் ஸ்டால் 403ல் சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்ற முழுத் தொகுப்பு நன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது.  தேவகோட்டை வா மூர்த்தியின் முன்னுரை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  அவர் எழுதிய கட்டுரையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருந்தேன்.
வாசக சாலை என்ற அமைப்பும் பத்து பதினைந்து புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  403ம் எண்ணில் உள்ள ஸ்டாலில் விற்பனைக்கு.
'பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்' என்ற இலக்கியக் கோட்பாட்டுத் திறனாய்வுக் கட்டுரைகளை ஒருவர் அவசியம் வாசிக்க வேண்டும்.  ஜமாலன் எழுதி உள்ளார்.  காலக்குறி என்ற பதிப்பகம் சிறந்த முறையில் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்.
இலக்கியக் கோட்பாட்டு ரீதியாகச் சிந்தனை செய்து புத்தகங்கள்  வெளி வந்திருக்கின்றன.  இது மாதிரியான புத்தகங்களை ஒருவர் புரிந்துகொள்வதும் புரிந்துகொண்ட புத்தகங்களைப் பற்றி பேசவும் அலாதியான திறமை வேண்டி உள்ளது.  
தமிழவன் இந்தப் புத்தகத்தைப் பற்றி 21ஆம் நூற்றாண்டின் புது இலக்கிய விமர்சனச் சிந்தனை மிகுந்த ஆரோக்கியத்துடன் தமிழ்ச்சூழல் ஒன்றில் மட்டும் உள்ளது என்கிறார்.  அதாவது படைப்பின் அர்த்த அடுக்குகளுக்குள் செல்வதே விமர்சனம் என்கிற புதுவித ஷிப்ட் ஒன்று தமிழ்த் திறனாய்வுக் களத்தில் நிகழ்ந்துள்ளது என்கிறார். 
இது கவனிக்கப்பட வரிகளாகக் கருதுகிறேன். காலக்குறி பதிப்பகத்தார்கள் அற்புதமான முறையில் இப் புத்தகத்தைத் தயாரித்துள்ளார்கள்.  ரூ.300க்கு இப் புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும். 
இன்னும் இரண்டு புத்தகங்கள் பற்றியும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  அகநி வெளியீடாக வந்துள்ள புத்தகங்கள்தான் அவை.  அ வெண்ணிலா என்ற எழுத்தாளர் üதேவரடியார்,ý என்ற புத்தகம் பற்றியும், üகங்காபுரம்ý என்ற முதல் சரித்திர நாவல் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.  நான் இங்கு குறிப்பிடுவதெல்லாம் புத்தகக் காட்சி முடிந்தபின் வாசித்து இன்னும் தெளிவாக இந்தப் புத்தகங்கள் பற்றியெல்லாம் குறிப்பிட விரும்புகிறேன்.
இன்று சிறப்பான முறையில் ஒவ்வொருவரும் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  எழுத்தாள எல்லையை நாம் தாண்டிக்கொண்டு போகிறோம்.  ஆனால் இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு வாசிக்கும் வாசகர்கள் நம்மிடம் அதிகமாக இருக்க வேண்டும்.
அ வெண்ணிலா முன்னுரையுடன் கங்காபுரம் என்ற நாவல் வெளியாகி உள்ளது. 
பின் அட்டையில் கீழ்க்கண்டவாறு வெளிவந்துள்ளது.

üராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது ராஜேந்திரனின் தன்னொளி.  மிகப் பெரும் வெற்றியாளன்.  ஆனால் எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன்.  ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த கங்காபுரம் நாவல்,ý என்கிறார்.
இதில் எனக்குப் பிடித்தது அ வெண்ணிலாவின் மொழி நடை. ஒருவர் இப் புத்தகத்தை எடுத்தவுடனே வாசிக்கத் தூண்டும் விதமாக எழுதி உள்ளார்.  520 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.450தான். வழவழப்பான உயர்ந்தத் தாளில் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார். 403 எண் உள்ள என் ஸ்டாலில் இடம் பெற்றுள்ள புத்தகங்களில் இதுவும் ஒன்று.
அ வெண்ணிலாவின் இன்னொரு புத்தகம் தேவரடியார் என்ற புத்தகம். புத்தகத்தில் குறிப்பிட்ட விஷயத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
üகோயில் என்ற நிறுவனம் உருவாகி வளர்ந்தெழுந்தபோது, கடவுளர்கள் ஆர்ப்பாட்டமான வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்பட்டார்கள்.  இசையும் நடனமும் மங்களகரமானவையாகக் கருதப்பட்டன.  கடவுள்களைப் புகழ்ந்தும், அவர்களின் மகிமைகளை வெளிப்படுத்தவும் பதிகங்களும் பாசுரங்களும் பாடப்பட்டன. வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கோயில்களுக்குப் பெண்கள் நேர்த்துவிடப்பட்டார்கள்.  கோயில்களில் இறை சேவைக்காக நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார் பெண்கள் கலைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்த்து வந்திருக்கிறார்கள்.  நீண்ட நெடிய கலை மரபில் தேவரடியார்களின் பங்களிப்பைப் பல தளங்களில் இந் நூல் விரிவாக ஆராய்கிறது.ý
288 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.250தான். மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்கள் விருட்சம் ஸ்டாலில் விற்பனைக்கு உள்ளன.   

Comments