Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...27

அழகியசிங்கர் 



நாளையுடன் இந்தப் புத்தகக் காட்சி முடிவடைந்து விடுகிறது. ம்ம்....நான் வாங்கியப் புத்தகங்களைப் பற்றியும்.. நன்கொடையாகக் கிடைத்தப் புத்தகங்களைப் பற்றியும் இன்னும் சொல்ல ஆரம்பிக்கவில்லை. ம்ம்... உண்மையில் அரங்கில் விற்பதற்காக வைத்திருக்கும் புத்தகங்களின் சிலவற்றை நானே வாங்கி விடுகிறேன். ம்ம்.  பின் போய் பல இடங்களில் புத்தகங்களையும் வாங்கி வருகிறேன். ம்ம்..
அரங்கத்தில் விற்பதற்காக வாங்கிக்கொண்டு வந்த புத்தகங்களைப் பற்றி இன்றும் சொல்ல விரும்புகிறேன்.  நான் சுப்பிரமண்ய ராஜ÷  பற்றி விருட்சத்தில் தேவகோட்டை வா முர்த்தியின் கட்டுரையைப் பிரசுரம் செய்திருந்தேன்..அதனால் சில பிரதிகள் சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் விற்றன.   ம்ம்..
'யாவரும் பப்ளிஷர்ஸ்' என்ற பதிப்பகம் பல இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடுகின்றன.  அவர்கள் பதிப்பகத்திலிருந்து சில புத்தகங்களை விற்க வைத்திருக்கிறேன். ம்ம்..

மணல் பூத்த காடு என்ற நாவல் முஹம்மது யூசுஃப் என்பவரின் புத்தகம். 448 பக்கங்கள் கொண்ட புத்தகம் விலை ரூ.500. தூத்துக்குடியைச் சேர்ந்த முஹம்மது யூசுஃப் வளைகுடா நாடுகளில் 14 ஆண்டுகள் பயோ மெடிக்கல் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார்.ம்ம்.. 

ஒருவனைப் பற்றி முழுதாக அறிய வேண்டுமென்றால் அவனுடன் பயணம் செய்தால் போதும் என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழி என்கிறார் யூசுப்.  

புதிய அனுபவங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார் யூசுப். விற்பனைக்கு உள்ளது இந்தப் புத்தகம். ம்ம்..

வாசகச்சாலையின் புத்தகமான 'அறுபடும் விலங்கு' என்ற நாவலை எழுதியவர் கரன் கார்க்கி.  கரன் கார்க்கியின் முதல் நாவல் இது.  மறுபதிப்பான நாவல்.  அதற்கு கரன் கார்க்கி இப்படி கூறுகிறார்.  தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு படைப்பு மறு பதிப்பாக வருவதென்பதே பெரிதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதான். விலை : ரூ. 350.  ம்ம்..

நிழலைத் தின்றவன் என்ற சிறுகதைத் தொகுப்பு பானுமதி என்பவர் எழுதிய தொகுப்பு.  வாசக சாலை வெளியீடாக.  13 கதைகளைக் கொண்ட தொகுப்பு. விற்பனைக்கு உள்ளது.  ஏற்கனவே பானுமதி தொடர்ந்து விருட்சம் இதழிலும் கதைகள் எழுதி உள்ளார்.  உள்ள எழுச்சியைக் கதைகளாக வடிப்பவர்.  விலை ரூ. 100.  ம்ம்..

நாளையுடன் புத்தகக் காட்சி முடிவடைகிறது.  இனிமேல் நன்கொடையாகக் கிடைத்தப் புத்தகங்களையும் நான் வாங்கிய புத்தகங்களையும் கூற விரும்புகிறேன். 

புத்தகக் காட்சி முடிவடைந்தாலும் புத்தகங்கள் நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.  ..ம்ம்,,


 

Comments