ஐராவதம் பக்கங்கள் ஆகஸ்ட் 15 - நாவல் - குமரி எஸ் நீலகண்டன் - 502 பக்கங்கள் - ரூ.450 - சாய் சூரியா வெளியீடு - டி டி கே சாலை - ஆழ்வார்பேட்டை - சென்னை ஆகஸ்ட்15 புதினமா இல்லையா? மிகுந்த சர்ச்சைக்குரிய கேள்வி இது. கல்யாணம் என்ற நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விவிரிக்கிறது. அவர் காந்தியின்தனிப்பட்ட காரியதரசியாக இருந்தவர். இந்தப் புதினத்தில் காந்தி, நேரு, ராஜாஜி வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் எல்லோரும் வருகிறார்கள். அமெரிக்க நாவலாசிரியர் John Dos Passon இதே ரீதியில் சில நாவல்களை எழுதியுள்ளார். டாகுமெண்டிரி பாணியில் தனிப்பட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை வர்ணித்திருக்கிறார். இந்த நாவலின் ஆசிரியரோ கல்யாணம் என்பவரின் வாழ்க்கையை நாட் குறிப்பு என்ற விதத்தில் பதிவு செய்துள்ளார். காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மதுவை விரும்புகிறார். கேளிக்கை வாழ்க்கை வாழ்ந்தார். இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டு காந்திக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். காந்தி சுடப்பட்டு இறந்தபோது, குஜராத்தில்...