Skip to main content

இன்று செவிலியர் தினம்...

 27.04.2021


துளி - 194



இன்று செவிலியர் தினம்...



அழகியசிங்கர்



இன்று உலக செவிலியர் தினம்.  போற்றப்பட வேண்டியவர்கள் செவிலியர்கள். அறுபதுகள் முடிவில் நான் ஒரு முறை சுரத்தில் விழுந்தேன்.  ஸ்டான்லி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என் பெரியப்பா செவிலியர்களுக்கெல்லாம் தலைமை வகித்தவர்.

ஒரு வாரம் நரக வேதனை.  அப்போது ஒரு பெண் செவிலியர் அன்பாக இருந்தார்.  எனக்கு அவருடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது.  நான் சிறுவன்.  ஊரிலிருக்கும் அவளுடைய சகோதரன் ஞாபகத்திற்கு வந்து விட்டான்.

நான் அவருடைய சகோதரனை ஞாபகப்படுத்தினேன்.  என்னை 1 வாரம் நன்றாகக் கவனித்துக்கொண்டார்.   அவரால் என்னை மறக்க  முடியவில்லை. அடிக்கடி வந்து பார்க்கும்படி கூறினார்.  மருத்துவமனை என்பதால் என்னால் அங்குத் திரும்பவும் போகவில்லை.  

அவரை கதாபாத்திரமாக வைத்து நோயாளிகள் என்று சிறுகதை எழுதியிருக்கிறேன்.  என் கதையை ஆங்கிலத்தில் பேஷன்ட் என்ற பெயரில் அஷ்வின் குமார் மொழிபெயர்த்திருக்கிறார்.   ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

ஏனோ இன்றைய செவிலியர் தினத்தில் அவரை நினைவுக் கூறுகிறேன்.



  
  

Comments