Skip to main content

அஞ்சலட்டைக் கதைகள் 19

 அழகியசிங்கர்




இது என் 19வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக முடிந

இலக்கியக் கூட்டம்..
    
    அழகியசிங்கருக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.  இன்னும் வரவில்லை அவர்.   ஆறு மணி கூட்டத்திற்கு நாலரை மணிக்குக் கிளம்பினால்தான் சரியாக இருக்கும். 

    ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைதான் கூட்டம் நடைபெறுகிறது.  சரியாக ஆறுமணிக்குக் கூட்டம் தொடங்கிவிட வேண்டும்.  நான் கார் எடுத்துக்கொண்டு அழகியசிங்கரை அழைத்துக்கொண்டு போவதாக சொல்லியிருந்தேன். 

    அவர் போஸ்டல் காலனியிலிருந்து வர வேண்டும்.  ஐந்தே கால் மணிக்குத்தான் வந்தார்.  வந்தவுடனே அவசரம். 

    அவசரம் அவசரமாகக் கிளம்பினோம். எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று கேட்டேன் அழகியசிங்கரைப் பார்த்து.  
    எடுத்துக் கொண்டாயிற்று என்றார் அழகியசிங்கர்.

    கார் கதவைத் திறந்தவுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார். 

    "என் பக்கத்தில் காரில் உட்கார உங்களுக்குப் பயமில்லையா?" என்று கேட்டேன்.

   " இல்லை " என்று பதில் அளித்தார்.
 
   " என் மனைவி நம்ப மாட்டாள்."

   " நான் உங்களை நம்புகிறேன்.  நீங்கள் நன்றாகத்தான் ஓட்டுகிறீர்கள்."

    கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.  அடையார் கேட் ஓட்டல் அருகில் வந்தபோது காரை நகர்த்தவே முடியவில்லை. கார் முன்னால் தொழிற்சங்க ஊர்வலம். 

    "தெரியாமல் இந்தப் பக்க வழியில்  ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன்."  

    அழகியசிங்கரோ பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டார்.

    "7 மணி ஆகிவிடும் போலிருக்கிறதே," என்றார் பதட்டத்துடன்.

   " எப்படியாவது போய் விடுகிறேன்," என்றேன்.

    ஒவ்வொரு நிமிடமும் பதட்டம் கூடிக்கொண்டே போயிற்று.

    நாங்கள் ஒரு வழியாக மூகாம்பிகை காம்பளெக்ûஸ அடைந்து விட்டோம். நானோ அழகியசிங்கரோ உரிய நேரத்தில் வரவில்லை என்றால் இன்னொரு இலக்கிய நண்பர் கூட்டத்தை நடத்தி விடுவார்.  அவர் எப்போதும் சரியா நேரத்திற்கு வந்து விடுவார்.

    கூட்டம் நடக்குமிடத்திற்கு ஙூப்டில் ஏறக் காத்துக்கொண்டிருந்தோம்.  ஆறாவது மாடி.  லிப்ட் கீழே இறங்கி வந்தது.  அதில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.  கூட்டம் முடிந்து விட்டது. நான் அழகியசிங்கரைப் பார்த்தேன்.  அவர் முகத்தில் அசடு வழிந்தது.



Comments

Popular posts from this blog