Skip to main content

ஒருவருக்கு ஒரு புத்தகம்தான்




அழகியசிங்கர்



மகாகவி பாரதியாரின் எழுத்துக்கள் முழுவதும் அடங்கிய ஒரே நூல் ஒரே தொகுதியில் 848 பக்கங்களில் கிடைக்கிறது.  ஏ கே கோபலன் பப்ளிஷர் இதை வெளியிட்டுள்ளனர்.  
இந்தப் புத்தகத்தை பொடி அச்சில் அச்சிட்டுள்ளனர்.  எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் கையில் எடுத்துப் போகும்படி அடக்கமான தொகுப்பு.  கதை வேண்டுமானால் கதை, கவிதை வேண்டுமானால் கவிதை, கட்டுரை வேண்டுமானால் கட்டுரை என்று பாரதியாரின் எல்லா எழுத்துக்களையும் படித்து விடலாம்.  இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதி பாரதி மொழி பெயர்த்த பகவத் கீதை உள்ளது. 
புத்தகத்தின் விலை ரூ.125 தான். தபால் செலவு தனி. ரிஜிஸ்டர் புக் பாக்கெட்டில் புத்தகம் அனுப்பப்படும்.  பாரதியாரின் பிறந்த நாளான இன்று இந்தப் புத்தகத்தின் எதாவது ஒரு பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முடிந்தவரை ஒரு பக்கமாக இருந்தாலும் படிப்பதாக தீர்மானித்துள்ளேன். 
இன்று வந்தேமாதரம் என்ற தேசிய கீதங்கள் என்ற தலைப்பில் வந்துள்ள பாடலை படித்துவிட்டேன்.  
பாரதி அன்பர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  ஒருவருக்கு ஒரு புத்தகம்தான்.  மொத்தமாக இந்தப் புத்தகத்தை வாங்கக் கூடாது.  தேவையிருப்போர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள். 9444113206 - 9176613205

Comments