அழகியசிங்கர்
இன்று குவிகம் கூட்டத்தில் நாடகத்தைப் பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் உரையாடல் துவக்கினார்கள். நான் தாமதமாகச் சென்றேன். இன்று மேடை நாடகத்தை வெற்றிகரமாகக் கொண்டு வருவது என்பது சிரமம். நல்ல கதை வேண்டும். நடிப்பவர்கள் வேண்டும். மேடை ஏற்றுவதற்குத் திறமையான இயக்குனர்கள் வேண்டும். நல்ல கதையே கிடையாது. நகைச்சுவையாக வசனம் பேசிப் பேசி நாடகத்தின் தனிதன்மையைக் கெடுத்து விட்டார்கள்.
இந்த மேடை நாடகங்கள் எல்லாம் பார்வையாளர்களை முட்டாளாக ஆக்குகின்றன. இலவசமாக நாடகத்தை அரங்கேற்றம் செய்தாலும் பார்வையாளர்கள் பெரும்பாலோர் வருவதில்லை.
நடிக்கவே தெரியாத நான் ஒரு நாடகத்தில் நடித்தேன். ஆர் ஆர் சபா என்று நினைக்கிறேன் நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது üபோர் போர்ý (என் நடிப்பைப் பார்த்து இல்லை) என்று பெரிய குரலுடன் பார்வையாளர்கள் கத்தினார்கள். எனக்குத் திகைப்பாக இருந்தது. நாடகத்தை எழுதி இயக்கியவருக்கு எதுமாதிரி மனநிலை இருந்திருக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஆனால் இன்னும் கூட எளிமையாக ஒரு நாடகத்தை நடத்திக்காட்டலாம்.
கூட்டத்தில் குமிழி இருந்தவர்கள் ஏதோ ஒரு விதத்தில் நாடகத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அங்கிருந்தவர்களில் நிறைவேற்றாதவர்கள் நிறைவேற்றியவர்கள் என்ற பிரிவுதான் இருந்தது. நானும் ஒரு நாடகத்தை எழுதி வைத்திருக்கிறேன் (நிறைவேற்றாதவன்). அதை இயக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்றெல்லாம் என் கற்பனையில் நடத்திப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
Comments