Skip to main content

Posts

Showing posts from September, 2017

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 5

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 5  அழகியசிங்கர் அன்றைய கூட்டத்தில் பலர் கலந்து கொண்டார்கள்.  பேசியவர்கள் அனைவரும் அசோகமித்திரன் மீது மதிப்பும் மரியாதையும் கூடவே அன்பும் கொண்டவர்கள்.  அவர்கள் யாரும் நான் கூப்பிட்டதற்காக வரவில்லை.  ஆனால் அசோகமித்திரன் பற்றி  பேச வேண்டுமென்பதற்காகவே வந்தார்கள். இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் போக வேண்டுமென்ற முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளேன்.  5வது பகுதியைத் தொடர்ந்து 6, 7, 8 என்று இன்னும் மூன்று பகுதிகள் உள்ளன.  

இரண்டு தகவல்கள்....

அழகியசிங்கர் முதல் தகவல் : நவீன விருட்சம் 103வது இதழ் வெளிவந்துவிட்டது.  ஒரு மாதம் மேல் தாமதாகிவிட்டது.  102வது (அசோகமித்திரன் இதழ்) போன மே மாதம் வெளிவந்தது.  ஆகஸ்ட் மாதமே இதழைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.  ஆனால் செப்டம்பர் கடைசியில்தான் கொண்டு வர முடிந்துள்ளது. இந்த இதழில் ஆறு கதைகள் வெளிவந்துள்ளன.  மேட் இன் இங்கிலாந்து சைக்கிள் என்ற பெயரில் அழகியசிங்கரும், விலகும் திரைகளும் சரியும் பிம்பங்களும் என்ற பெயரில் ஸிந்துஜாவும், மாரி என்ற பெயரில் டாக்டர் ஜெ பாஸ்கரனும், முதல் தேநீரின் ருசி என்ற பெயரில் சோ சுப்புராஜ÷ம், மெய் வருத்தம் பாரார் என்ற பெயரில் பிரபு மயிலாடுதுறையும், ஊர்மிளா என்ற தலைப்பில் பானுமதியும் எழுதி உள்ளார்கள். இதைத் தவிர, கீழ்க்கண்டவர்கள் கவிதைகள் படைத்துள்ளார்கள். அழகியசிங்கர், ஜோர்டி டோஸ், எம் ரிஷான் ஷெரீப், பிரபு, சுரேஷ் ராஜகோபால், எஸ் வைத்தியநாதன், பொன் தனசேகரன், விஷ்ணு குமாரபிள்ளை, வி விஸ்வநாத், தேவேன்தர் நைய்தானி. கட்டுரைகளை விட்டல்ராவ், அம்ஷன்குமார், அழகியசிங்கர் முதலியவர்கள் படைத்துள்ளார்கள். இந்த இதழிலிலிருந்து விருட்சம் 8

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 4 - கடைசிப் பகுதி

அழகியசிங்கர் அசோகமித்திரன் கூட்டத்தை சிறப்பாகப் படம் பிடித்தவர் க்ளிக் ரவி.  அவரிடம் ஏன் நீங்கள் ஆவணப்படம் எடுக்கக் கூடாது என்று கேட்டதற்கு தன்னால் அது சாத்தியமில்லை என்று கூறி உள்ளார்.  எனக்கு இது ஆச்சரியம்.  ஆவணப்படத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத நான், என்னுடைய சோனி காமிராவிலேயே ஆவணப்படம் எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கூட்டத்தின் கடைசிப் பகுதி இது.  மறைந்த எழுத்தாளர் மவே சிவக்குமார் இதில் பேசி உள்ளார்.  இந்த ஒளிப்படத்தின் முக்கியத்துவம் எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான். ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் பார்க்கும்படி இல்லாமல் நான்குப் பகுதிகளாகப் பிரிந்து இது காணப்படுகிறது.  இது தானகவே அப்படி பதிவாகி உள்ளதாகத் தோன்றுகிறது.  க்ளிக் ரவி நன்றாக எடிட் செய்துள்ளார்.   இதேபோல் இன்னொரு ஒளிப்படம் ஆன ந பிச்சமூர்த்தியின் நூறாண்டு விழா நிகழ்ச்சியும் காட்ட முடியுமா என்று பார்க்கிறேன்.

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 3

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 3 அழகியசிங்கர் இரண்டு நாட்கள் நான் சென்னையில் இல்லை என்பதால் தொடர்ச்சியாக இந்த ஒளிப்படத்தை வெளியிட முடியவில்லை.  நாளையுடன் மொத்தப் படமும் முடிந்துவிடும்.  இந்த ஆவணம் எல்லோரும் பார்க்க வேண்டுமென்று வெளியிடுகிறேன்.   அபூர்வமாக பல எழுத்தாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள்.  இப்படி அமையும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை. 

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் - 2

அழகியசிங்கர் நான்கு பகுதிகாளகப் பிரிக்கப்பட்ட 22.09.2017 அன்று நடந்தக் கூட்டத்தின் இரண்டாம் பகுதியை இப்போது அளிக்கிறேன். மிகக் குறைவான மணித்துளிகளில் எல்லோரும் பேசுவதை ஒளிப்படம் மூலம் கேட்டு ரசிக்கலாம்.  எதாவது குறை தென்பட்டால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.   

22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம்

அழகியசிங்கர் அசோகமித்திரனின் படைப்புகளைப் பற்றி சிலர் பேசினார்கள்.  சிலர் அவருடன் கிடைத்த நட்பைப் பற்றி பேசினார்கள்.  இப்படி எல்லோரும் பேசினோம்.  அத்தனையும் ஒளிப் படமாய்ப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது மாதிரியான நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்ததற்குக் காரணம் பல நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்ததுதான்.  கூட்டம் ஆரம்பிக்கும் முன், பார்த்தசாரதி கோயிலிருந்து சுவாமி புறப்பாடு ஒரு நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.  ஆரம்பத்தில் அந்த வீடியோ அதிலிருந்து ஆரம்பித்து பின் எல்லோரும் பேசுவதைப் படம் பிடிப்பது வரை முடியும்.  

இரண்டு எழுத்தாளர்களின் பிறந்தநாள் இன்று..

அழகியசிங்கர் இன்று இரண்டு எழுத்தாளர்களின் பிறந்தநாள்.  ஒருவர் அசோகமித்திரன்.  இன்னொருவர் வைதீஸ்வரன்.  இந்த இரண்டு எழுத்தாளர்களையும் எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும்.  வைதீஸ்வரனுக்கு தற்போது 82 வயது ஆகிறது. அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே நாளில் 82வயது நடந்துகொண்டிருக்கும் போது அசோகமித்திரனுக்கு ஒரு விழா எடுத்தேன்.  திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில்.  நான் முதன் முதலாக ஒரு எழுத்தாளரின் பிறந்தத் தினத்தை அவர் உயிரோடு இருக்கும்போது கொண்டாடியதும் அந்தத் தருணத்திதான். அசோகமித்திரனின் எழுத்தாள நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.  பலரைப் பேச அழைத்தேன்.  எல்லோரும் வந்திருந்து அசோகமித்திரனுக்குக் கௌரவம் அளித்தார்கள். கூட்டத்தை ரசிக்கவும் பலர் வந்திருந்தார்கள்.   அக் கூட்டத்தை க்ளிக் ரவி என்ற என் நண்பர் வீடியோவில் படம் பிடித்தார்.  அதன் ஒரு பகுதியை எல்லோருக்கும் தெரியும்படி இப்போது வெளியிட முடியுமா என்று பார்க்கிறேன். நான் நடத்திய எல்லா இலக்கியக் கூட்டங்களையும் விட அது சிறப்பான கூட்டமாக இப்போது எனக்குத் தோன்றுகிறத

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 78

அழகியசிங்கர்   கனவுச் சிறைகள் மு நடராசன் இயற்கை அழகில் அடிமைப்பட்டு இலட்சிய வெறியில் அலைந்து திரிந்து கனவுச் சிறையினில் கைதியானேன். நன்றி : நிலாமுற்றம் வெளியீடு - மு நடராசன் - கவிதைகள் - வெளியான ஆண்டு : 1981 - மொத்தப் பக்கங்கள் : 64 - விலை : ரூ.4 - இந்தப் புத்தகம் இப்போது விற்பனைக்கில்லை.

ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி

ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி அழகியசிங்கர் செந்தூரம் ஜெகதீஷ் பேசிய பேச்சு 1 மணி நேரத்திற்கு மேல் போய் 8 மணிக்கு முடிந்தது.  மூகாம்பிகை காம்பளெக்ûஸ விட்டு வெளியே வந்தபோது இருட்டு.  நானோ காரை மெதுவாக எடுத்துக்கொண்டு ஓட்டிவரும்போது, எதிர்படும் வண்டிகளின் சப்தங்களும், வெளிச்சமும் என்னை நிதானமாக ஓட்டும்படி கட்டாயப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் இருட்டில் காரை ஓட்டிக்கொண்டு போகும் திறமையை வளர்த்துக் கொள்ள நினைத்தேன்.  வீடு வந்து சேரும்போது மழையும் பிடித்துக்கொண்டது.  இக் கூட்டம் நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. என் சோனி காமிராவில் இந் நிகழ்ச்சியைப் பதிவு செய்த ராஜேஸ் சுப்பிரமணியத்திற்கு என் நன்றி.  இனி ஒவ்வொரு கூட்டத்தையும் இது மாதிரி பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஓஷோ கூட்டத்தின் இரண்டாம் பகுதி

அழகியசிங்கர் நேற்று முதல் பகுதியை வெளியிட்டேன்.  இன்று இரண்டாம் பகுதியும், நாளை இறுதிப் பகுதியையும் அளிக்க உள்ளேன்.  கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் செந்தூரம் ஜெகதீஷ் பேசி உள்ளார்.  அவர் பேசியதைக் கேட்டு ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி

அழகியசிங்கர் 16.09.2017 (சனகிழமை) நடந்த கூட்டத்தின் காணொலியின் முதல் பகுதியை அளிக்கிறேன்.  எதாவது தவறு தென்பட்டால் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதன் அடுத்த 2 பகுதிகள் தொடர்ந்துவர உள்ளது.

ஓஷோவும் செந்தூரம் ஜெகதீஷ÷ம்..

அழகியசிங்கர் ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தியைத்தான் எல்லோரும்கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  கிருஷ்ணமூர்த்தி சென்னைக்குப் பிரசங்கம் செய்ய வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பல மூலைகளிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் குமிழ்வார்கள் வஸந்த விஹாரில்.  கிருஷ்ணமூர்த்தி பேசுகிற தோரணையே சிறப்பாக இருக்கும்.  எனக்குத் தெரிந்து எழுத்தாளர் பலருடைய எழுத்தில் கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் இருக்கும். நான்கூட கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்துவிட்டால் எங்கும் போக மாட்டேன்.  ஒவ்வொரு வாரம் டிசம்பர் மாத்தில் சனி ஞாயிறுகளில் வஸந்த விஹாரில் கூடி பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு எதோ ஒரு உலகத்தில் உலவுவதுபோல் நினைத்துக்கொள்வேன்.  பின் திங்கள் கிழமை அலுவலகம் செல்லும்போது கிருஷ்ணமூர்த்தியின் பேச்சின் தாக்கம் குறைந்து, சாதாரண மனிதனாகிவிடுவேன்.  கிருஷ்ணமூர்த்தியை விட என்ன பெரிசாக சொல்லிவிட முடியும் என்று எழுதுவதையே நிறுத்தியவர்கள் உண்டு.  சாதாரணமாக வங்கியில் பணிபுரிந்த ஒருவர் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்டு பித்துப் பிடித்த நிலைக்குச் சென்று, வேலையை விட்டு போகும்படி நேர்ந்திருக்கிறது. இந்தத் தருணத்த

விருட்சம் இலக்கியச் சந்திப்பின 29வது கூட்டம்....

அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 29வது கூட்டம், வருகிற 16.09.2017 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.  செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் 'ஓஷோவும் நானும்' என்ற தலைப்பில் உரையாட உள்ளார்.  தமிழில் ஓஷோவை செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார்.  எப்படி அவருக்கு ஓஷோ மீது ஈடுபாடு வந்தது போன்ற விபரங்களை சனிக்கிழமை அன்று உரை ஆற்றுவார்.  யாவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.  அழைப்பிதழைத் தயாரித்த நண்பர் கிருபானந்தனுக்கு என் நன்றி.   

தீராநதியில் வெளிவந்த கட்டுரை

அழகியசிங்கர்                                                                                                 இந்த மாதம் தீர நாதியில் இரண்டு படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன.  தயவுசெய்து தீராநதி வாங்கிப் படிக்கவும். அதில் ஒருவர் காசியபன்.  இவரைப் பற்றி நான் என் நேர் பக்கம் புத்தகத்தில் எழுத மறந்து விட்டேன்.  இப்போது எழுதி அக் கட்டுரை தீரா நதியில் வெளிவந்துள்ளது.  நாம் ஒரு புத்தகம் கொண்டு வருகிறோம்.  அப்படி கொண்டு வரும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  ஆனால் அது விற்காமல் இருப்பதை எண்ணி வருத்தமாகவும் இருக்கிறது.  காசியபனின் முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி விற்கவில்லையே என்ற திகில் உணர்வு எனக்கு ஏற்பட்டது உண்மைதான்.  அதன் விளைவாக அக் கட்டுரை எழுதினாலும் அது ஒரு நகைச்சுவை உணர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதைத் தெரியப் படுத்துகிறேன்.  பெரிய கட்டுரை என்பதால் நவீன விருட்சம் லிங்கில் போய்ப் படிக்கவும். முடியாத யாத்திரையா முடிந்த யாத்திரையா?.............. என் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, இன்று தமிழில் ஒரு வருடத்

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் - 4

அழகியசிங்கர் 1. சமீபத்தில் நடந்த இரண்டு துயரமான சம்பவங்கள்.. ஆமாம்.  துயரமான சம்பவங்கள். 2. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தற்கொலையைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் அது நிகழாமல் இருப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை. 3. ஏன் ஒருவருக்குத் தோன்றுகிறது தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்று.. அதுதான் புரியவில்லை.  நிறைவேறாத ஆசை, எதிர்பார்க்கிற வாழ்க்கை அமையாமல் போவது.  நானும் டாக்டராக வர வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் எஸ்எஸ்எல்சி படிக்கும்போதே தெரிந்து விட்டது நம்மால் முடியாது என்று.  பெரிய கிரிக்கெட் வீரனாக வர நினைத்தேன்.  ஸ்கூலில் விளையாடும் கிரிக்கெட்டில் பந்தை வீசும்போதே தெரிந்துவிட்டது...முடியாது என்று..சினிமாவில் நடிகனாக நடிக்க வேண்டுமென்று நினைத்தேன்..சாத்தியமே இல்லை என்று உடனே தெரிந்து விட்டது...நாடக நடிகனாக நடிக்கலாம் என்றால் அதிலும் சிறப்பாக நடிக்க முடியவில்லை..சும்மா இருப்பதுதான் சரியான வழி என்று இப்போது சும்மா இருக்கிறேன். 4. கருத்துரிமைக்கு எதிராகத்தான் கொலை நடந்தது என்று சொல்லுகிறார்களே? இருக

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 77

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 77 அழகியசிங்கர்     அம்மாவும் அப்பாவும் ஹேச் ஜீ ரசூல்  ஒன்றும் சொல்லவில்லை அப்பா சாயங்காலம் முழுவதும் நான்பாண்டி விளையாடியபோதும் தம்பி கிட்டிப்புள் விளையாடிவிட்டு பக்கத்து வீட்டுப்பையனை அடித்துவிட்டு வந்தபோதும் கிளாஸிலே முதல் மார்க்கெடுத்து நான் பாஸôன போதும் எட்டாம் கிளாஸில் இரண்டாவது தடவை தம்பி பெயிலான போதும் இடையே ஒரு தடவை வாய்திறந்தார் அப்பா. இப்போதெல்லாம் ஏழுமணிக்கே பொங்கி சமச்சு சாதம் கெட்டி கொடுக்கணூம் காலேஜ÷க்கு போகும் தம்பிக்கு இப்போதைக்கு ஒன்றும் சொல்வதில்லை அம்மா மட்டும் அப்பா எதைச் சொன்னாலும் தலையாட்டிக் கொண்டே. நன்றி : பூட்டிய அறை - ஹெச் ஜி ரசூல் - மொத்தப் பக்கங்கள் : 88 - வெளியீடு : திணை வெளியீட்டகம், 30 பகவதி லாட்ஜ், நாகர்கோவில் - வெளியான ஆண்டு : மே 1998 - விலை : ரூ.30 பின் குறிப்பு : மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகளை கவிதை நூல்களிலிருந்து மட்டும் எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.  ஆனால் என்னிடம் கைவசம் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.  இன்னும் சில கவிதைப் புத

இன்று இடம் கிடைத்துவிட்டது

இன்று இடம் கிடைத்துவிட்டது அழகியசிங்கர்                                                                               இன்று என் திருமண நாள்.  திருமணம் நடந்து கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இப்போது ஞாபகம் வருகிறது.  மைலாப்பூரில் உள்ள சிருங்கேரி மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது.  என் அலுவலகத்திலிருந்து 100 பேர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள்.  பின்னால் சாப்பிட வந்தவர்களுக்கு ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. பலர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்கள்.  ஆகஸ்ட் செப்டம்பர் என்றால் பல திருமணங்கள் நடைபெறுகின்றன.  நேற்றும் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன்.  நானும், கிருபானந்தனும் மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டோம். திருமணம் நடக்குமிடம் கூடுவாஞ்சேரி.  அசோக் நகரில் பஸ் பிடித்து தாம்பரம் போய்விட்டோம். பின் சரவணாவில் காப்பி சாப்பிட்டோம்.  கூடுவாஞ்சேரி பஸ்ûஸப் பிடிக்க நிற்கும்போதுதான் தெரிந்தது, நேற்று செங்கல்பட்டு வரை போகும் மின்சார வண்டிகள் ரத்து செய்யப்பட்டதென்று.  ஓலாவிற்காகக் காத்திருந்தோம்.  20 நிமிடம் ஆனபின்னும் கார் கிடைக்கவில்லை.  வீட்டிற்குத் திரும்ப யோசித்தோம்.  அவ