17.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 20

அழகியசிங்கர் 

 ஆயா

எம் டி முத்துக்குமாரசாமி 
ஆயாவின் பெயரை யாரும் கேட்டதில்லை
குடும்பம் உண்டா
விலாசம் என்ன
வயது என்ன
சொந்த ஊர் எது
தினசரி எங்கிருந்து வருகிறாள்
எங்கே போகிறாள்
நோயுண்டா நொடியுண்டா
எப்படி சளைக்காமல் வேலை செய்கிறாள்
யாரும் கேட்பதில்லை
சம்பளப்பணம் பேசியதோடு சரி

இந்த ஆயா இல்லாவிட்டால்
இன்னொரு ஆயா
பேச்சில்லாமல் வேலையைப் பார்த்தோமா
போனோமா
என்றிருக்க வேண்டும்
அவ்வளவுதான்

என்றாலும்
ஆயாவின் அரதவணைப்பை
ஒளியை அறிவது போல
நன்கு அறியும்
உங்கள் குழந்தைகள்

நன்றி : நீர் அளைதல் - கவிதைகள் - எம் டி முத்துக்குமாரசாமி - பக்கம் : 112 - விலை : ரூ.90 - முதற் பதிப்பு அக்டோபர் 2012 - வெளியீடு : நற்றிணை பதிப்பகம், ப எண் : 123 எ புதிய எண் 243 எ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5
தொலைபேசி : 9486177208 - 044 43587070

No comments: