Skip to main content

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்




என்னுடைய 30வது வயதில்

                              சீனம் : ச்சி ஸ÷யென் 

   ஆங்கிலம் வழி தமிழில் : ப கங்கை கொண்டான்



"சிகரெட் சாம்பல்கள்
சிதறிப் படிகின்றன -
எனது
வாழ்க்கை மலரின்
உதிர்ந்த இதழ்கள்
அவை.
தொடுவானத்தின்
சங்கமத்திற்கும்
அப்பால் -
மிகவும் அப்பால்
எனது ஒற்றை
நிழல் வளர்கிறது
நீளமாக -
மிகவும் நீளமாக! "


ஒரு கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதி விடுகிறார்கள்.  அதைப் புரிந்து கொள்பவர்கள் தன் மனநிலை, அறிவு நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்கிறார்கள்.  எழுதுகிறவர்களிடமிருந்து கவிதை நழுவிப் போய்விடுகிறது. படிப்பவர் ஒவ்வொருவரும் இந்தக் கவிதையை எப்படிப் புரிந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இந்தக் கவிதை தோற்றம் தரும்.



Comments