Skip to main content

கடைச் சொல்



 
கிளையிலிருந்து
தரைக்கு வீழ்கிற
இலையைப்  போன்றே
கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி
ஒரு வேளை

துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்

ஒரு தற்க்கொலையின்
காரணத்திற்கான
கடைசிச்சொல்.

Comments

manoharan said…
அருமை! வாழ்த்துகள் நண்பா !!
அந்தக் கடைச் சொல்லை அறிவதில் தான் மானிடத்தின் துயரறுக்கும் மந்திரம் அடங்கியுள்ளது! எத்தனை எத்தனை கடைசொற்கள் கண்டறியப் படுகின்றனவோ அத்தனையையும் துடைத்தெறிய வேண்டும் என்று தோன்றுகிறது.