Skip to main content

இலக்கியத் தரம் உயர

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசியவர்களைக் கேட்கும்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. பல பேர் பரவலாகப் பத்திரிக்கைகளில் வெகு ஜன ரஞ்சகமாக வரும் எழுத்துக்களின் உண்மைத் தரத்தை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்துக்கள் திருப்தி தருவதாக இல்லையென்பதும் தெரிகிறது.
ஆனால் நல்ல இலக்கியமும் எழுத்தும் எங்கே கிடைக்கும், யார் யார் எழுதுகிறார்கள் என்பதும் அவ்வளவாகத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதைத் தேடிப் போவதற்கு அவர்களுக்கு வழிவகைகள் தெரியவில்லை.
எல்லா மொழிகளிலும், எல்லாப் பிராந்தியங்களிலும் இலக்கியமல்லாதது. போலி இலக்கியம் செழித்து கொண்டுதான் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் காலத்திலும் அப்படித்தான்: ஹோமர் காலத்திலும் அப்படித்தான். கம்பர் காலத்திலும் காதுக் குறும்பை அறுக்கும் விமரிசகக் கவிகள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நல்லது, நல்லதல்லாதது என்கிற நினைப்பு தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. அச்சு இயந்திர சாதனங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், போலிகளும் பெருகிவிட்டன் ; போலிகளின் ஆதிக்கமும் பெருகிவிட்டது.
இலக்கியத்தில் அக்கறையுள்ளவர்கள், நல்ல இலக்கியத்திலிருந்து போலியைத் தரம் பிரித்துக்காண முயன்று வெற்றி பெறவேண்டும், தரமானதைத் தரமில்லாததிலிருந்து பிரித்துக் காண ஒரு இலக்கிய ஆர்வமும், ஒரு இலக்கியத் தேர்ச்சியும் தேவையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தமிழர்களில் ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் பேர்வழிகளுக்கிடையே உண்டாக்கிவிட முயலுபவன், தமிழ் இலக்கியத்துக்கு இன்று மிகவும் சிறப்பான அளவில் சேவை செய்தவன் ஆவான் என்று எனக்குத் தோன்றுகிறது.
நல்ல இலக்கியத்தைத் தெரிந்து கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஒரு பரவலான இலக்கிய இயக்கம் நம்மிடையே தேவைப்படுகிறது. பாரதியில் தொடங்கி இன்றுவரை எழுதியுள்ளஎத்தனையோ சீர்குலைவுகளுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டு எழுதிவந்துள்ள பத்திருபது முப்பது நாற்பது ஐம்பது இலக்கியாசிரியர்களைப் பட்டியல் போட்டுப் பார்க்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐம்பது பேர் வரையில் பெயர் சொல்லக் கூடியவர்கள் இருப்பதைப் பெருத்த இலக்கிய வெற்றியாகக் கருதவேண்டும். இந்த ஐம்பது பேர் தரமாக எழுதினார்கள் என்பதுடன், இதில் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நான்கு ஐந்து பேர்வழிகளாவது அடுத்த நூற்றாண்டிலும் நினைக்கப்படுவார்கள். படிக்கப்படுவார்கள் என்று நம்புகிற தெம்பு நமக்கு வேண்டும்.
தாக்ஷண்யத்துக்காக, சொந்த விருப்பு வெறுப்பு பயிற்சி மனக்குறுகல் கோணல்களினால் விமரிசகன் நாலைந்து பேர்வழிகளைத் தன் பட்டியலில் அதிகமாகச் சேர்த்துச் சொல்லிவிடலாம். காலம் கொஞ்சம்கூடத் தாக்ஷண்யமில்லாமல் பல பெயர்களைத் தட்டி விட்டுவிடும். மிஞ்சுவது எல்லாம் கூட நல்ல இலக்கியம்தான் என்று சொல்லிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் தேவையினால், ஒருசிலருடைய எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுவிடலாம். ஒரு நூறாண்டு முழுவதும் நிலைத்து விடுகிற எழுத்தைக் கூட அப்படியொன்றும் பிரமாதமான இலக்கியம் என்று முடிவுகட்டிவிட முடியாது. ஒரு தலைமுறைக்கு உகக்கிற இலக்கியம் மறு தலைமுறைக்கு அவசியமில்லாது போய்விடலாம்தான். இதையெல்லாம் ஊன்றிப் பார்க்கிறபோது, இரண்டு முக்கியமான விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
ஒன்று: இலக்கிய மதிப்பீடு செய்து தராதரம் உணர்ந்து படிக்கக்கூடிய வாசகர்கள் ஒரு üஐயாயிரம் பேர்வழிகளாவது இருக்கிற சமுதாயத்தை இலக்கியப் பிரக்ஞையுள்ள சமுதாயம் என்று சொல்லலாம். தமிழில் இன்று கணக்கெடுக்கப் போனால் ஒரு ஐநூறு பேர்வழிகள் தேறுமா என்பது சந்தேகமே 1 1930 முதல் 1980 வரையுள்ள ஐம்பது ஆண்டுகளில் இது எண்ணிக்கையில் கூடாததற்குத் தமிழ்ச் சமுதாயத்தில் காரணம் தேடிச் சொன்னால் அது ஐனரஞ்சகப் பத்திரிகைகளினால் ஏற்பட்ட ஒரு சூழல் என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறனது.
காசு பண்ணுவதற்காகத் தோன்றிச் செயல்படுகிற ஒவ்வொரு ஐனரஞ்சகமான பத்திரிகையும், வெகுஐன ஆதரவுக்காகவும் வாசகர்களின் அடிமட்ட அறிவு நினைவுக்கு ஏற்பவும் (கர்ஜ்ங்ள்ற் இர்ம்ம்ர்ய் ஹஸ்ங்ழ்ஹஞ்ங் ர்ச் ண்ய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங் ண்ய் ற்ட்ங் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) எழுத்து என்று தேடி ஒவ்வொரு இதழிலும் எட்டு எட்டுப் பக்கங்களாவது வெளியிடாத பத்திரிகைகளைச் சமுதாயம் தெரிந்தே பகிஷ்காரம் செய்ய வேண்டும் இதற்குச் சட்டம் இயற்ற இயலாமல் இருக்கலாம். ஆனால்ல் சமுதாய அபிப்ராயத்தை உருவாக்கி, இந்த மாதிரிப் பத்திரிகைகள் இலக்கியத் தரத்தைக் குறைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிற வியாபார ரீüதியில் மட்டும் செயல்படுகிற பத்திரிகைகளை இலக்கியத்தையும் ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தலாம் சமுதாய ரீதியாக.
பத்திரிகைகளை விட்டுவிட்டு இலக்கியம் செயல்பட முடியாதா என்று கேட்கலாம். பத்திரிகைப் பிரக்ஞை என்பது மிகவும் கீழ்த்தரமானதாக இன்று இருக்கிறதே என்று கேட்கலாம். உண்மையில் பத்திரிகைகள் இன்று வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சம். புஸ்தகங்களை விடவும் அதிகமாகவே பத்திரிகைகள் உலகெங்கும் விற்பனையாகின்றன. புஸ்தகப் படிப்பு என்பது ஓய்வு நேரம் குறைந்து கொண்டிருப்பதாலும் வேறு நேரம் போக்கும் சாதனங்கள் - சினிமா, டிவி, போன்றவை வந்துவிட்டதாலும் - ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை படிப்பவர்கள் அதிகமாகவும், நூல்களைத் தேடிப் படிப்பவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள். முக்கியமாகத் தமிழில் இது கண்கூடாகக் காண்கிற விஷயம். இதை மிக மோசமான அளவில் சாத்தியமாக்கியவர்கள் என்று பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் சொல்லலாம். அவர்களும் படிக்கமாட்டார்கள்; பிறரையும் நல்லதைத் தேடிப் படிக்க விடமாட்டார்கள்.
தரமான இலக்கியத்துக்கான ஒரு இயக்கத்தைப் பத்திரிகைகள் ஏற்று நடத்துவதுதான் நியாயமான காரியம் என்று இன்னொரு காரணத்துக்காகவும் எனக்குத் தோன்றுகிறது. இந்த இலக்கியத் தரம் தெரியாத நிலைமையைப் பரவலாகத் தோற்றுவித்தவர்கள் இந்தப் பத்திரிகைகள் தான். அந்தக் குற்றத்தை இப்பொழுது சரிப்படுத்த அவர்களே செயல்படுவது தான் நியாயம். இலக்கியத் தரமான விஷயங்களை, எண்பது பக்கங்களில், எட்டுப் பக்கமாவது தராத பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என்று ஒரு ஐம்பதாயிரம்,லட்சம் வாசகர்களாவது உடனடியாக விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது சாத்தியமா? யார் அந்த எட்டுப் பக்கத்தின் இலக்கியத் தரத்தையும் தரமின்மையையும் நிர்ணயிப்பது என்பதெல்லாம் மிகவும் சாதாரணமான கேள்விகள். இலக்கியத் தரத்தை உணர்ந்து செயலாற்றத் தீர்மானித்து விட்டால், தானே தீர்ந்துவிடக் கூடிய பிரச்னைகள் இவை. இப்போது எந்த விஷயத்தைப் பிரசுரித்தால் வாசகர் எண்ணிக்கை குறையும் என்று எண்ணுகிறார்களோ அந்த விஷயத்தை வெளியிட்டு, எண்பதில் எட்டுப் பக்க அளவிலாவது வெளியிட்டு வந்தார்களானால், அதுவும் பரவலாகப் படிக்கப் படுகின்ற விஷயமாகிவிடும்.
இதை முதல் காரியமாக ஏற்றுக் கொள்வது வேண்டும். சமூகச் சீர்திருத்தவாதிகளில் பலரும் இலக்கிய அறிவு, இலக்கிய ரசனை இவையும், மொழி சம்பந்தபட்ட விஷயங்கள் என்பதனால் மட்டுமல்லாமல் அந்த மொழி பேசுகிற சமுதாயத்தின் ட்ங்ஹப்ற்ட் சம்பந்தமான விஷயம் என்பதனால், சமுதாயத்தில் முக்கியம் பெறுகிறது. இலக்கிய அறிவும் இலக்கியத் தேர்ச்சியும் இல்லாத ஒரு சமூகம் ஒரு கலைச் சூன்யத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
இரண்டாவது விஷயமாகச் சொல்ல வேண்டியது, சென்ற ஒரு நூற்றாண்டு கால கட்டத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு நாற்பது ஐம்பது நூல்களின் கட்டாய அறிவு மக்களிடையே பரவலாக ஏற்படச் செய்வது என்பதாகும். விமரிசகர்கள் கூடிச் செய்கிற காரியம் அல்ல இது. ஏனென்றால் இரண்டு மூன்று வாசகர்கள் கூட ஒரே நூலைப்பற்றிப் பலவிதமான அபிப்ராயங்கள் சொல்லக்கூடும்தான். ஆனால் பல விமர்சகர்கள் தனித் தனியாகச் சொல்லி இந்த ஐம்பது நூல்கள் பட்டியலில் எந்தெந்த நூல்கள் இருக்க வேண்டும் என்ற பொதுஐன அபிப்ராயத்தை ஏற்படுத்தலாம். இந்தப் பட்டியலில் தமிழ் நூல்கள் மட்டும் இடம் பெற்றால் போதாது. கட்டாயமாகச் சில மொழி பெயர்ப்புகளும் இருக்க வேண்டும். உதாரணத்துக்குச் சம காலத்திய இரண்டு நூல்களை நான் சொல்கிறேன்-இரண்டையும்சேர்த்துச் சொல்கிறேன் என்பதும் இன்றுள்ள நிலையில் கவனிக்க வேண்டிய விஷயம். சாவர்க்காரின்üஎரிமலைý அதேபோல காந்தியின் üசத்திய சோதனைý.
பொதுவாக மொழி பெயர்ப்புகளைப்பற்றி ஒரு தப்பான அபிப்ராயம் தமிழ் வாசகர்களிடையே இருந்துவருகிறது. தமிழ் தானாகத் தழைத்துவிடும் என்று கால்டுவெல்ஐயர் அன்று சொன்ன விஷயத்தை உடும்பாகப் பற்றிக் கொண்டு, மொழி பெயர்ப்புகள் இல்லாத ஒரு சமுதாயத்தை நம் ஊரில் ஸ்தாபிக்க முயலுகிறார்கள். அது இலக்கிய ரீதியில் தவறான காரியம் ஆகும். மொழியின் வளர்ச்சிக்கு, இலக்கியத்தின் தாக்கத்துக்கு மொழி பெயர்ப்புகள் மிகவும் அவசியமானவை.
பழசும் புதுசுமாக ஒரு நூறு நூல்கள் எப்போதும் படிக்க விரும்புகிறவர்களுக்குக் கிடைக்கும்படியாகச் சர்க்கார் தரப்புப் பிரசுரலாயங்களோ அல்லது தனியார் தரப்புப் பிரசுராலயங்களோ செயல்பட வேண்டும். இது மிகமிக அவசியம். யாரும் இந்தக் குறிப்பிட்ட நூல் கிடைக்கவில்லை, அதனால் படிக்கவில்லை என்று சொல்கிற நிலை ஏற்படக் கூடாது.
மூன்றாவதாக ஒரு விஷயம். சினிமாவை ரசிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்துகிறார்கள். அதேபோல இலக்கிய ரஸனையை வளர்ப்பதற்கும் வகுப்புகள் - பொது ஐன வகுப்புகள் இந்தக் கால கட்டத்தில் மிகமிக அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. படிப்பது எப்படி, எதையெதைப் படிக்க வேண்டும். படித்ததில் தரம் பிரித்துக் காண்பது எப்படி என்றெல்லாம், ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு ஊரிலும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இது கல்வி இலாகாக்கள் கையில் சிக்கிக்கொள்ளாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ABC of Reading என்று எஸ்ரா பவுண்டு, இலக்கியாசிரியர்களுக்காக ஒரு நூல் எழுதினார். அதுமாதிரியான ஒரு அடிப்படை நூல் இன்று தமிழில் அவசரத் தேவை என்று எனக்குத் தோன்றுகிறது.

Comments

இலக்கியத் தரம் உயர கநாசுவின் கட்டுரை நல்ல வழிகாட்டல்....