வேதாளம்
நள்ளிரவில்
நடைபாதையில்
வேதாளம் நடமாட
அதைக்
கண்டு பயந்து
மேனி காய்ச்சலில்
படுத்து கிடக்க
கனவினில் ஓர் காட்சி
நள்ளிரவில்
நடைபாதையில்
தனியாய் செல்வதைப் போல
வேதாளம் மட்டும் அங்கில்லை
வேறு ஒருவரின்
கனவுகளுக்குள் சென்று
விட்டது போலும்.
யாருக்காக
பொழுது
யாருக்காக விடிகிறது
சேவல்
யாருக்காக கூவுகிறது
மழை
யாருக்காக பெய்கிறது
தென்றல்
யாருக்காக வீசுகிறது
நாமனைவரும்
யாருக்காக வாழ்கிறோம்
சூட்சுமம் புரிபடவில்லை
புரிந்துவிட்டால்
புரிந்தவர்கள் எவரும்
இப்பூமியில்
இருப்பதில்லை
எது ஊனம்
யாருக்கு பின்னம்
இல்லை
உடலிலோ, மனசிலோ
ஏசு சாமி சொன்னது
போல
உடலிலோ, மனதிலோ
பின்னமில்லாதவர்கள்
கேலி செய்யுங்கள்
அங்கஹீனமானவர்களை
படைப்புகளில் எது உயர்ந்தது
எது தாழ்ந்தது
எல்லாம் ஒரு பிடி சாம்பல் தானே
இறுதியில் தலையில் கம்பால்
அடிக்கும் வெட்டியானிடம்
சொல்லுங்கள்
நான் உயர்ந்தவனென்று
இன்னும் இரண்டு அடிகள்
கூடத் தருவான்
வாங்கிப் போங்கள்
Comments