துளி - 187
நகுலனின் நீண்ட கால நண்பர் நீல பத்மநாபன். அவருடைய நீள் கவிதை நகுலம்.
இந்தப் புத்தகம் விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. கடந்த ஆண்டு விருட்சம் வெளியீடாக இரண்டு நூல்கள்தான் சொண்டு வர முடிந்தது.
ஒரு புத்தகம் துளிகள் 2 என்ற புத்தகமும் இரண்டாவது புத்தகம் ஒரு கதை ஒரு கருத்து தொகுதி 1 என்ற புத்தகமும். இதைத் தவிர 4 இதழ்கள் விருட்சமும்.
ஆனால் 2021 ஆம் ஆண்டு எந்தப் புத்தகமும் இதுவரை கொண்டு வந்ததில்லை.
சில புத்தகங்கள் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ளன. தற்போது நீல பத்மநாபனின் நகுலம் என்ற நீள் கவிதைப் புத்தகம் வெளிவந்துள்ளது.
இப்புத்தகம் நீல பத்மநாபன் மேற் பார்வையில் திருவனந்தபுரத்தில் உருவானது. இப்புத்தகத்தில் இன்னொரு விசேஷம் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நீல பத்மநாபனின் கவிதைத் தொகுதிகள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன.
நகுலம் என்ற நீள் கவிதை அதன் தொடர்ச்சியாக முத்திரை பதித்துள்ளது.
முழு நீள வாழ்க்கை வரலாற்றில் நகுலன் ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீல பத்மநாபனுடன் நெருங்கிப் பழகி இருக்கிறார். உண்மையில் தன் நட்பின் ஆழத்தை நகுலம் என்ற பெயரில் ஒரு நீள் கவிதை
நீள் கவிதை மட்டுமல்ல இந்தப் புத்தகத்தில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன. கவிஞர் ஷண்முக சுப்பையாவைப் பற்றி ஒரு உரையாடல் நகுலனும் நீலபத்தமநாபனும் நிகழ்த்தியது இதில் வெளிவந்திருக்கிறது.
152 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை : ரூ.150.
இப் புத்தகத்தின் பிரதி விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப் பேசி எண் : 9444113205.
விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ் , 7 ராகவன் காலனி , மேற்கு மாம்பலம், சென்னை 600 033.
Comments