Skip to main content

47வது கவிதை நேசிக்கும் கூட்டம்

துளி - 186




அழகியசிங்கர்


கவிதை நேசிக்கும் கூட்டத்தை நேற்று நடத்தினேன். இது 47வது கூட்டம்.  நண்பர்களின் துணையின்றி நடத்தியதில்லை.  மற்றவர்களுடைய கவிதைகளை வாசித்தோம்.

பலருடைய கவிதைகளை வாசித்தோம்.  நான் ரெங்கநாயகி கவிதையையும், ஆத்மாநாம் கவிதையையும் வாசித்தேன்.

மனுஷ்யபுத்ரன் கவிதைகளை தமிழ்ச்செல்வி என்ற கவிஞர் வாசித்தார்.  திருலோகசீத்தாராம் கவிதையை வ.வே.சு வாசித்தார்.  இப்படிப் பலர் வாசித்த கவி அரங்கம் சிறப்பாக முடிந்தது.

கூட்ட ஆரம்பத்தில் நான் விருட்சம் இதழிலிருந்து ஒரு கவிதை வாசித்தேன்.  காசியபன் கவிதையை வாசித்தேன்.  பின் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகம் செய்தேன்.

நான் அறிமுகம் செய்த கவிதைப் புத்தகம் பெயர்.  ஜிதேந்திரனின் புத்தகம்.  'கல் சூடாக இருக்கிறது.' 

108 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின்  விலை ரூ.100. சந்தியா பதிப்பக வெளியீடாக  வந்துள்ளது.

இதிலிருந்து நான் படித்த கவிதையை இங்கு வெளியிடுகிறேன்.



எத்தனை கவனமிருந்தும்
நிகழ்ந்துவிடுகிறது விபத்து.
மோதிக் கொன்றோம்
நானும் ரயில் பூச்சியும்!

என் சக்கரத்தில்
நசுங்கியது ரயில்.

ரயிலோட்டத்திற்கு நிற்கும் நான்
ரயில்பூச்சிக்கு நின்றிருக்கலாம்!

இப்பொழுதெல்லாம் 
என்னை முந்திச் செல்கின்றன
ரயில் பூச்சிகள்.

பிறகொரு பொழுதில்
ஒன்றின்மீது ஒன்றாக
ரயில்பூச்சிகள் நகர்கையில்
உதட்டில் சிறு புன்னகையோடு நானும்
ஊர்ந்து சென்றேன்!



“”




Comments