Skip to main content

 

ஒரு கதை ஒரு கருத்து 

 

 பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

 

அழகியசிங்கர்


 


            டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள்.  இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.

      அவர் 42 கதைகள் எழுதி உள்ளார்.  அவர் கதைகள் படிப்பதற்கு எப்படி இருக்கிறது.  முதலில்  எளிமையாகச் சரளமாகப் படிக்க முடிகிறது.  

      பாரதி இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறாரென்று பார்ப்போம்.  

      பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே, வாந்த்பூர்  (சாந்திர புரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்சன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு.

      இப்படி ஒரு காதல் கதையைப் பாரதியார் விவரிக்கிறார்.  மனோரஞ்சிதன் சுந்தரமான ரூபமுடையவன்.  பார்ப்பதற்கு மன்மதனைப்போலியிருப்பான்.   தன்னோடு ஒத்த வாலிபர்கள் எல்லோராலும் அர்ஜ÷னன் என்று அழைக்கப்பட்டு வந்தான்.  

      அவனுக்கு வயது இருபத்தி மூன்றாகியிருந்த போதிலும், என்ன காரணத்தாலோ இன்னும் விவாகம் நடக்காமலிருந்தது.  இவனுக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுதே, இவன் அப்பா இறந்து விடுகிறார்.  அதனால் இவனுக்குத் திருமணம் ஆகாமல் தடைப்பட்டுப் போய்விட்டது.  தாய்க்கு இவன் ஒரே பிள்ளையாதலால், இவன் மீது மிகுந்த அருமை கொண்டவளாகி வீட்டில் இவன் வைத்ததுதான் சட்டம்.  இவன் சொன்ன சொல்லை மீற மாட்டாள்.  இந்தக் குடும்பத்தில் அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும் உள்ள நிலத்தை விற்று பணம் எடுத்துக்கொண்டு கல்கத்தா போய் பரீட்சைகள் எழுதித் தேறி வர வேண்டுமென்ற இவன் எண்ணத்தின்படி இவனை அனுப்பி வைத்தாள்.

      இவன் தாயார் ரஞ்சனைப் பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று கேட்பாள்.  இவன் அதற்குப் பதில் சொல்ல மாட்டான்.  அந்தப் பேச்சே எடுக்காதே என்று அம்மாவை மிரட்டுவான். 

      ஆனால் அந்தரகத்திலே இவன் வடக்கு வீதி ஸ÷ர்யகாந்த பாபு என்ற பெருஞ் செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ணகுமாரியின் மீது மோகம் வைத்திருந்தான்.  இது அவன் அம்மாவிற்கும் தெரியும்.  ஆனால் தன் பையன் ஸ்வர்ண குமாரியை ஒருபோதும் விவாகம் செய்யக் கூடாது என்று நினைக்கிறாள்.  அதற்குக் காரணம் அந்தப் பெண் மிலேச்சனுடைய பெண்.  அவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அறிந்தால் இவனுடைய தாயார் தேட்ட மாத்திரத்திலேயே இறந்து விடுவாள்.   அதேபோல் அவளை தன் மகன் கட்டிக்கொள்வதைக் காட்டிலும் இறந்து போவது மேல் என்று நினைக்கிறாள்.

 “     ஏன் அவன் தாய் அப்படி நினைக்கிறாள்?  

      ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய÷ர்யகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்தாலும் பிரமஸமாஜம் என்ற புதிய மார்க்கத்திலே சேர்ந்து கொண்டு விட்டார். 

      பிரம ஸமாஜத்தில் சேர்ந்தவருக்கு ஜாதி பேதம் இல்லை.  விக்ரகாராதனை கூடாது.  பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம் என்பதுபோல் நவீன கோட்பாடுகளைக் கொண்டிருப்பார்.

      அவர்கள் வீட்டு ஸ்திரீகள் பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை என்று நடப்பவர்கள். 

      ஸ்வர்ண குமாரிக்கு இன்னும் விவாகமாகவில்லை.  மனோரஞ்சனின் தயாருக்குக் காதால் கேட்கக் கூடா வெறுப்பாக இருந்தது.  தன் பையன் அடங்காத காதல் கொண்டிருக்கிறானென்றும்  அதன் பொருட்டே மறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறானென்பதும் அவளுக்குத் தெரியும்.

      பாரதியார் இந்தக் கதையை ஒரு காதல் கதையாகக் கொண்டுபோகிறார்.  ஜாதி மாறுவதை கடுமையாகக் கருதுகிறார்கள்.  ஸ்வரண குமாரி மனோரஞசனுடைய வடிவம் என்று அகலாத சுந்திர விக்கிரமாகப் பதிந்து போய்விட்டது.

      இந்த இடத்தில் ஸ்வர்ண குமாரியின் அழகை வர்ணிக்கிறார் பாரதியார்.  எப்படி?  'இவளுடைய ரூப லாவண்யமோ சொல்லுந் தரமன்று.  கருமை நிறங் கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும் கன்னமும், நெற்றியும், ஸ்வர்ண மயமான சரீரமும் என்னவென்று சொல்வது?' என்கிறார்.

      இந்த இடத்தில் ஒரு ஜோக் அடிக்கிறார் பாரதி.  சுகப்பிரம்மரிஷி ஸ்வர்ண குமரியைப் பார்த்த போதிலும் மயங்கிப் போய் விடுவார் என்கிறார்.

      ஸ்வரணகுமாரி அடிக்கடி மனோரஞ்சிதத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாள்.  இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.  இதை அறிந்து அவள் அப்பா, ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்துகொள்ளச் சம்மதிக்கச் சொல்கிறார்.  இல்லாவிட்டால் என் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கிறார். 

      அவளுடன் ஹேமச்சந்திரா பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்கிறாள்.  தோட்டத்திலுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்கு.  அப்படிச் சந்திக்கும்போது அவளுடைய சம்மதத்தைத் தெரிவிக்கும்படி சொல்கிறார்.  

      வேறு வழியில்லை ஹேமசந்திரனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விதி இருக்கிறது.  திருமணம் செய்துகொண்டு விஷம் தின்று உயிரை விடலாமென்று நினைத்துக் கொள்கிறாள்.  

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 13 டிசம்பர் 2020 அன்று வெளியான கட்டுரை)


                                                                     இன்னும் வரும்....


 

Comments