அழகியசிங்கர் பீனிக்ஸ் என்ற இடத்தில் நாலைந்து அமெரிக்கன் நூலகங்கள் உள்ளன. இங்கு எந்த நூலகத்திலும் புத்தகங்கள் எடுக்கலாம். புத்தகங்களை கௌன்டரில் கொடுக்க வேண்டுமென்பதில்லை. இங்குள்ள எலெக்டிரானிக் கருவியின் முன் புத்தகங்களை நீட்டினால் அது புத்தகத்தைப் பதிவு செய்துகொள்ளும். ஆட்கள் யாரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பிறகு ரிட்டர்ன்ஸ் என்ற பெட்டியில் புத்தகங்களைப் போட்டு விடலாம். ஒரு நூலகத்தில் வாங்கிய புத்தகங்களை இன்னொரு நூலகத்தில் உள்ள ரிட்டர்ன்ஸில் செலுத்தி விடலாம். நூலகத்தின் ஒரு பகுதியில் சிறாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருள்கள் வைத்திருக்கிறார்கள். அதைத் தவிர தனியாக அவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள். அதேபோல் இளம் பருவத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் தவிர டிவிடி, சிடியையும் இரவல் எடுத்துக்கொள்ளலாம். எல்லாம் 35 எண்ணிக்கைக்குள் எடுத்துப் போகலாம். இதைவிட முக்கியமானது ரெஸ்ட் ரூம். இதைத் தனியாக...