Skip to main content

தினமணியில்.......



அழகியசிங்கர்




என் ஒன்றுவிட்ட சகோதரர் ஸ்ரீதர்-சாமா எழுதிய  மொத்த சிறுகதைகளையும்  'வழங்க வளரும் நேயங்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பு விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். 161 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பின் விலை ரூ.120.  இன்றைய தினமணி இதழில் இத் தொகுப்பைப் பற்றிய சிறிய விமர்சனம் வந்துள்ளது.  அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தினமணி இதழுக்கு என் நன்றி உரித்தாகும்.   

 வழங்க வளரும் நேயங்கள் - ஸ்ரீதர்-சாமா; பக்.161; ரூ.120, விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட் மெண்ட்ஸ் , 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 600033.

       தமிழ் இலக்கியத்தில் சிறு கதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக் கும்  தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது.    இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை  கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

       நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துகதைகளும்  யதார்த்தமான வாழ்க்கையைப்  பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக் கின்றன.   நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும்,   சடங் குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர்,   'வாக்கு' எனும் கதையில் அம்மாவின் அர வணைப்புக்கு ஏங்கும் தேவியின் மூலம் இன்றைய சமூ கத்தின் பெரும்பான்மையான வளரிளம் பெண்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துள்ளார்.   ஆயிரங்காலத்து பயிரான திருமண பந்தத்தின் பின்னால் இருக்கும் துன்பங்களை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது அந்தகதை.   

      அதேபோல தொகுப்பில் உள்ள 11 கதைகளும் சமூக  சூழலால் மனித நேயம் பாதிக்கப்படுவதையும்,   தனிமனித வாழ்வில் வெளிச்சமும்,  இருட்டும் சமமாக இருப்பதையும் நூலா:காட்டும் காலக்கண்ணாடிகளாகவே உள்ளன.
|               'தொட்டில் பழக்கம் மரப்பெட்டி மட்டும்'  என்ற கதை  கடைக்காரர், நுகர்வோர் இருவரையும் சமமான தராசுத்தட்டில் வைத்து எடைபோடுவதாகவும்,   மிகநுட்ப மான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டதாகவும்  இருக்கிறது.

            வழக்கத்தில் இருந்து மறைந்த சில சொற்கள், மீண்டும் படித்தாலே புரியும்படியான சில சொற்றொடர்கள் என  சிலவற்றை மறந்து  நாம் இந்த தொகுப்பைப் படித்தால்  புதிய அனுபவங்களைப் பெறுவது உறுதி.



Comments

Popular posts from this blog