அழகியசிங்கர் முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள்... டாக்டர் ஜெ பாஸ்கரின் 'அது ஒரு கனாக் காலம்,' என்ற புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டேன். படித்துக் கொண்டிருக்கும்போது இது சம்பந்தமான வேறு சில புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கு எழுத்தாள நண்பர்களின் பல புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால் என்னுடைய நல்ல பழக்கம் அந்தப் புத்தகங்களை உடனே படிப்பதில்லை. அது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன்? உண்மையில் இந்தக் கேள்வியை பாஸ்கரன் புத்தகம்தான் என்னைக் கேட்டது. இந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டதும் சில மாதங்களுக்குமுன் 'யானை பார்த்த சிறுவன்,' என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த சுந்தரபுத்தன் புத்தகம் ஞாபகத்திற்கு வந்தது. மேலும் மாதவ பூவராக மூர்த்தியின், 'இடம், பொருள், மனிதர்கள்,' என்ற புத்தகம் ஒன்றையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஏன் என்னுடைய புத்தகமான 'திறந்த புத்தகத்தை'ப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். டாக்டரின் புத்தகத்துடன் ஏன் இந...