அழகியசிங்கர் அஞ்சல் அட்டை எழுதுவோர் சங்கம் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம். தபால் கார்டு சங்கம் என்று வேண்டாம். முகநூலில் ஒருவர் குறிப்பிட்டதுபோல. நான் ஏன் இது குறித்தே எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குப் பலர் அஞ்சல் அட்டை மூலம் எழுதியிருக்கிறார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் பலருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அஞ்சல் அட்டை மூலம் எளிமையாகத் தெரிவித்து விடுவார். ஒவ்வொரு ஆண்டும் எனக்கும் அவர் தெரிவிப்பதுண்டு. ஒருவருக்கு ஏன் நாம்அஞ்சல் அட்டை மூலம் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது. முதலில் நாம் கணினியை அதிகமாகப் பயன்படுத்தி கையால் எழுதுவதே விட்டுவிட்டோம். நாம் எழுதிப் பழகுவதற்கு தபால் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். தபால் அலுவலகத்தில் போய் அஞ்சல் அட்டைகளை வாங்கும் வழக்கம் உள்ளவன் நான். ஆனால் அதைப் பயன்படுத்தியதில்லை. ஒரு இடத்தில் அடுக்கி அடுக்கி வைப்பேன். என் பத்திரிகைக்கு சந்தா அனுப்பும் படி முன்பெல்லாம் கார்டு மூலம் கேட்பேன். இப்போது ஏனோ அப்படியெ...