Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 68


அழகியசிங்கர்  

அவ்வளவுதான் எல்லாம்

ரவிசுப்பிரமணியன்                                                                  
                                                                                                                  
மின்சாரம் போய் விட்டது
கதவுகளைச் சார்த்தாதே

மெழுகுவர்த்தி வேண்டாம்
சீமெண்ணை விளக்கைத் தேடாதே
புகையும் வேப்பிலை போதும் கொசுக்களுக்கு

எதிர்பாரா இருள் பிரசாதம்
ஏற்றுக் கொள்
அதனுடன் சிநேகம் கொள்
கண்களை மூடு

இருள்
திகில் கலந்த அமானுஷ்யமானதால்
காற்று நின்று விடுகிறதா என்ன?

ஒளி அடங்கியபின்
புது ஒலிகள்
புறத்தில் கேளா ஒலிகள் அகத்தில்

இதோ மின்சாரம் வந்துவிட்டது
சிரிக்கிறாய்
அவ்வளவுதான் எல்லாம்

நன்றி : விதானத்துச் சித்திரம் - கவிதைகள் - ரவிசுப்பிரமணியன் - வெளியீடு : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293 இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - பக்கங்கள் : 84 - விலை : ரூ.100 - தொலைபேசி : 91-981450437 

Comments