Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 63

அழகியசிங்கர்  

 தீர்ப்பு

எஸ் வைதீஸ்வரன்




எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிர்ப்பலி கேட்குதா, விரல்?

மீறிக் கடித்தாலும்
சாவு உன்கில்லை எனத் தெரிந்தும்
ஊறம் எறும்பை
நசுக்குவதேன், சகிக்காமல்?

சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கம் மனத்தை
'குற்றமில்லை' என்கிறதா?
உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?


நன்றி : வைதீஸ்வரன் கவிதைகள் -கவிதைகள் - வைதீஸ்வரன் -வெளியீடு : கவிதா பப்ளிகேஷன், 8 மாசிலாமணி தெரு, தி நகர், சென்னை 17 - முதல் பதிப்பு : நவம்பர் 2001 - விலை : ரூ.90.

Comments